பொய்யுரைத்து மலினமான அரசியல்!

🔹மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே திமுக நிலைப்பாடு இருக்கும். எம்.பி.க்கள் கூட்டத்திற்குப் பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.🔹நீட் மறுதேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடம்.🔹தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி. இம்மாதம் 31-ம் தேதி வரை சுயமாக ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல்.🔹நாகர்கோவில் சிறையில் கொல்லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினருடன் அமைச்சர்கள் சந்திப்பு. அரசின் நிவாரண நிதியை வாங்க மறுத்துவிட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி.🔹பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை தீவிரம். பத்திரபதிவு அலுவலகத்தில் சோதனையிட்டு, சிசிடிவி காட்சிகள் ஆய்வு.🔹நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை ‘கனவு உலக’ முதலமைச்சர் விஜய் உடனே செயல்படுத்த வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.🔹டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்கிற்கு திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு. பாலிவுட் பிரபலம் சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்தனர்.🔹இஸ்ரோ விஞ்ஞானிகள் நூற்றுக்கும் அதிகமானோர் அடுத்தடுத்து ராஜினாமா. கட்டுப்படுத்த புதிய உத்தரவுகளைப் பிறப்பித்தது இந்திய விண்வெளித்துறை.🔹அணுமின் நிலையம் மீது அமெரிக்கா தாக்கினால், செங்கடல் வழித்தடத்தை மூட வேண்டும். ஹவுதி அமைப்புக்கு ஈரான் உத்தரவிட்டுள்ளதால் பதற்றம் அதிகரிப்பு.🔹ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல். இருவர் உயிரிழப்பு, பக்தர்கள் 120 பேர் படுகாயம்.




பொய்யுரைத்து மலினமான அரசியல்! 

வரலாறு மிகப்பெரிய வாய்ப்பை நடிகர் விஜய்க்கு வழங்கியுள்ளது. 

கட்சி ஆரம்பித்த இரண்டாண்டுகளிலேயே அவர் முதல்வராகப் பதவியேற்று விட்டார். அவர் ஊர், ஊராக பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்து கட்சி அமைப்பை உருவாக்கவில்லை; மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்லவில்லை. 

மணிக்கணக்காக பேசி, பக்கம் பக்கமாக எழுதி கொள்கைகளையும். இலட்சியங்களையும் பிரசாரம் செய்யவில்லை. தனது திரைநாயக பிம்பத்தை மட்டும் முதலீடு செய்து அதன் மூலம் முதல்வராகிவிட்டார்.

தி.மு.க ஆட்சியிலும், கட்சியிலும் இருந்த குறைபாடுகள், மக்களின் அதிருப்திதான் ஆட்சி மாற்றத்திற்கு காரணமென்று பலரும் பேசுவதைக் கேட்கலாம்.

 அப்படியானால் எதிர்கட்சியான, ஐம்பதாண்டுகால வரலாறு கொண்ட அ.இ.அ.தி.மு.க-தானே வெற்றி பெற்றிருக்க வேண்டும்?

 அந்த கட்சியைவிட தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்கு என்ன செய்துவிட்டது? இந்த கேள்வியை சிந்தித்தால் விஜயின் கதாநாயக பிம்பமும், அந்த பிம்ப வழிபாட்டை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள், செல்பேசிகள் மூலம் பரவலாக அரசியல் பிரசாரமாக மாற்றியதும்தான் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதை ஐயம் திரிபுற புரிந்துகொள்ளலாம்.

எப்படியானாலும், இவ்வளவு குறுகிய காலத்தில் முதல்வர் பதவிக்கு வந்துவிட்டவர் அந்த சந்தர்ப்பத்.தில் தன் ஆளுமையை உயர்த்திக் கொண்டு, பண்பட்ட தலைவராக தகவமைத்துக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

 ஆனால் அவர் அதற்கு நேர்மாறாக தன் குணக்கோளாறுகளை மீற முடியாதவராக, தேவையற்று பொய்யுரைத்து மலினமான அரசியலை செய்பவராகவே வெளிப்படுகிறார்.

அவர் கடந்த வெள்ளிக்கிழமை கரூருக்குச் சென்று, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த கரூர் நெரிசல் மரணங்கள் பற்றி பேசியதுதான் அவர் அரசியல் எவ்வளவு மலினமானது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளது. 

இதனை புரிந்துகொள்வதும், அவர் மீது பொதுமன்றத்தில் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்துவதும் எதிர்கால அரசியல் மேன்மைக்கு இன்றியமையாததாகும்.

 காரணம் ஒரு விபத்தை சதி என்று சொல்வதன் மூலம் அரசியலில் தேவையற்ற ஒரு வெறுப்பை, வன்மத்தை அவர் வளர்க்கிறார்.

                                             -ராஜன் குறை

                                                      (வளரும.)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை