போலீஸ் ராஜ்யம். ?
🔹பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்பு நில பத்திரப்பதிவு முறைகேட்டில், திடீர் திருப்பம். தன்னை வழக்கில் சிக்க வைத்துள்ளதாக கூறி மனு தாக்கல் செய்த சார்பதிவாளர் ஜஸ்டினுக்கு, முன் ஜாமின்.
🔹தமிழ்நாட்டில் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் லஞ்ச ஒழிப்பு சோதனை. கணக்கில் வராத 82 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.
🔹தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான சுய ஆன்லைன் பதிவு நேற்று தொடக்கம். முதலமைச்சர் ஜோசப் விஜய், சுயமாக தனது விவரங்களை பதிவு செய்தார்.
🔹குதிரை பேர விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் அதிமுக புகார். 6 அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியதாக தவெக மீது குற்றச்சாட்டு.
சென்னையிலிருந்து மதுரை சென்ற ஆம்னி பேருந்து பெரம்பலூர் அருகே தீ பிடித்து எரிந்தது
விஜய்யுடன் இணைந்திருப்பது அனைவரும் ஊழல்வாதிகள்..அப்புறம் எப்படி இவரு லஞ்சத்த ஒழிப்பாரு?_சகாயம் I.A.S. கேள்வி
பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை.
திருப்பூர் செங்கப்பள்ளி அருகே கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
நாட்டின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் VIKRAM-1 இன்று காலை 11:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
போலீஸ் ராஜ்யம் முதலமைச்சர் விஜய் கையில் லத்தி இல்லையே தவிர,போலீஸ்
ஆட்சியைத்தான் அவர் நடத்தி வருகிறார். எதிர்க் கருத்துச் சொல்கிறவர்கள் அனைவரையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைப்பதில் குறியாக இருக்கிறது குதிரை பேர அரசு.
100 கோடி ரூபாய் மதிப்பிலான பழனி கோவில் சொத்தை, 2 கோடிக்கு தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு, மாட்டிக் கொண்டதும் பேய்முழி முழிக்கிறார் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ். அதுகுறித்து சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்கிறவர்களை, ‘வழக்குப் போட்டுவிடுவேன்’ என்றும் மிரட்டுகிறார்.
பழனி கோயில் நிலத்தை மோசடியாக விற்ற விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினார் என்று வினோத் சூர்யா குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வினோத் சூர்யா குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘’சமூக வலைதளப் பதிவுக்கு அவதூறு வழக்குதானே தொடர முடியும்?” என்று மிகச் சரியான கேள்வியை எழுப்பினார்.
‘தவறான பிரிவில் வழக்குப்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு
அரசுக்கு அறிவுறுத்துங்கள்’ என்று அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் நீதிபதி அறிவுறுத்தினார். வழக்கு தொடர்பாக காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. தன் மீதான விமர்சனங்களைத் தாங்க முடியாமல் இதுபோல மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளது விஜய் அரசு.
விஜய் அரசின் போலீஸ் ராஜ்யத்துக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.
« யூடியூப்பில் விஜய் அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார் என்று ஜூன் 8 ஆம் தேதியன்று மதுரையில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தது.
« கிருஷ்ணகிரி மாவட்டம் – ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் அன்பானந்தம் (28). தி.மு.க.வின் ஜென்–சி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக
முதல்வர் விஜய், நடிகை த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடியது குறித்து விமர்சனம் செய்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். உடனே இவரைத் தேடி போலீஸ் வந்துவிட்டது.
இதை அறிந்த அன்பானந்தம் தேன்கனிக்கோட்டை நீதிமன்றநீதிபதி தினேஷ்குமார் முன்னிலையில் சரணடைந்தார்.
« முன்னாள் அமைச்சர், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை படுத்திய பாடு நாடறியும். முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறாகப் பேசியதாக ஆத்தூர் காவல்துறையினரால் தூத்துக்குடி மாவட்டம் – ஆத்தூரில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். கைது செய்யப்பட்ட அன்றே அவருக்கு
நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
« ‘பவுடர்’ அடித்து மாட்டிக் கொண்டார் அமைச்சர் சரத்குமார். அந்த வீடியோவை வெளியிட்டார் என்று தாம்பரத்தைச் சேர்ந்த சரண் ஜெயராமன் தேடப்பட்டார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று
பேட்டியே கொடுத்தார் சரண் ஜெயராமன். அவரை வேறு ஒரு வழக்கில் திடீரென கொளத்தூர் போலீஸார் கைது செய்தார்கள்.
வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்ற நடுவர்,
போலீசார் சட்டப்படியான சரியான நடைமுறைகளைப் (legal process) பின்பற்றாமல் இந்தக் கைதை மேற்கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். காவல்துறை தரப்பின் ரிமாண்ட் (Remand) கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், சரண் ஜெயராமனின் கைதை உடனடியாக ரத்து செய்து (Cancel) அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. எந்தளவுக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது நடவடிக்கைகள் விஜய் அரசால் செய்யப்படுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.
« ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் விவாதங்கள் நடத்தும் ஊடகவியலாளர் விஜயனை, விசாரணை என்ற பெயரால் மிரட்டி அனுப்பி இருக்கிறார்கள். குதிரை பேரத்தால் உருவான விஜய் ஆட்சி, மற்றவர்கள் மீது குதிரை பேர குற்றச்சாட்டை வைத்து திசை திருப்பி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவர், ஊடகவியலாளர் விஜயனிடம் பேசியதாகச் சொல்லி, அவரை திருவல்லிக்கேணி காவல் துறை விசாரணைக்கு அழைத்து மிரட்டி உள்ளனர்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றப் பொதுச்செயலாளர் அசீப் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், ‘’விஜயனை இரவு 10 – 12 மணி வரையும் விசாரணை செய்துள்ளார்கள். அவர் வீட்டிற்குச் சென்றவுடன் மீண்டும் 2 மணிக்கு வரச் சொல்லி விசாரணை செய்துள்ளனர்.
குற்றங்கள் அதிகமாகி விட்டன. த.வெ.க. நிர்வாகிகள் செய்யும்
குற்றச் செயல்களும் அதிகமாகி விட்டன. ஊழல்கள் தொடங்கி விட்டன. ஒவ்வொரு அமைச்சராக அம்பலப்பட்டு வருகிறார்கள். இவை அனைத்தையும் மறைக்கவே போலீஸ் பாணியை கையில் எடுத்து அராஜக
ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் விஜய்.




