📰 நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொல்லப்பட்ட வழக்கு. சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னையில் திமுக மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்.📰 சன் பிக்சர்ஸ் தயாரித்த ராயன் படத்திற்கு, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு. கடந்த 2024-ல் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படத்திற்கு அங்கீகாரம்.

📰 கேப்டன் மில்லர், அமரன், மகாராஜா, மெய்யழகன் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது. 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில், 5 தமிழ் படங்கள் 9 விருதுகள் வென்று அசத்தல்.📰 சிறந்த திரைப்படமாக Article 370-ம், அதில் நடித்த யாமி கவுதம் சிறந்த நடிகையாகவும் தேர்வு. "பிரம்மயுகம்" படத்தில் நடித்த மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு.
📰 பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சார்பதிவாளர், நிலத்தை வாங்கியவர் வீடுகளில் சோதனை. 5 மணி நேரம் நீடித்த சிபிசிஐடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.
📰 கோயில் நில மோசடி விவகாரத்தில் மேடை அலங்கார ஊழியர், சமையலரிடம் விசாரணை. தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை, சேதுபதியை பிடிக்க சிபிசிஐடி மும்முரம்.
📰 விலை மதிப்பற்ற உயிருக்கு தவெக அரசு விலை வைப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம். பணத்தை வாரி இறைத்து, அப்பாவிகளின் வாயை அடைக்க முதலமைச்சர் முயற்சிப்பதாகவும் புகார்.
📰 அரசுத் தடையை மீறி பென்னாகரம் தவெக. எம்.எல்.ஏ. கஜேந்திரன் அரசுப் பள்ளியில் ரீல்ஸ் எடுத்து அத்துமீறல். பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தல்களை தவெகவினர் தொடர்ந்து மீறுவதால் முகம் சுளிக்கும் மக்கள்.
📰 சோழவந்தானில் 8 மணி நேரத்திற்கு மேல் மின் தடையால் கடும் அவதி. மின்மாற்றி பழுது என அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாக மக்கள் வேதனை.
📰 அரக்கோணத்தில் பராமரிப்பு பணி முடிந்து வழங்கப்பட்ட மின்சாரம், மீண்டும் துண்டிப்பு. மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் மது போதையில் இருந்ததாக மக்கள் குற்றச்சாட்டு.
📰 திருச்செந்தூர் அருகே ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் மந்தம் எனப் புகார். குண்டும் குழியுமான அணுகு சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறும் வாகன ஓட்டிகள்.
📰 திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் பாதை திடீரென அடைப்பு. பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஒரு ஆள் நடந்து செல்லும் அளவிற்கு பாதை திறப்பு.
📰 சேலம் எருமாபாளையத்தில் கஞ்சா போதையில் தாறுமாறாக கார் ஓட்டியவர் கைது. டயர் கழன்றும், தீப்பொறி பறக்க காரை இயக்கியதால் பரபரப்பு.
📰 ஆரணியில் பிரபல உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு. 4 சிறுவர்கள் உள்பட 13 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.
📰 ஷிண்டே அணிக்கு தாவிய 6 எம்.பி.க்களை அங்கீகரித்தார், சபாநாயகர் ஓம் பிர்லா. திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் தனியாக செயல்படவும் அங்கீகாரம்.
📰 சோனம் வான்சுக் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து, கரப்பான்பூச்சி கட்சி தலைவர் தொடர் உண்ணாவிரதம். தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடாளுமன்றம் நோக்கி திட்டமிட்டடி நாளை பேரணி நடக்கும் என அபிஜீத் உறுதி.
📰 அகமதாபாத் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு. ஆலையின் உரிமம் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டது, விசாரணையில் அம்பலம்.
📰 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட். விக்ரம்-1 ராக்கெட் சுமந்து சென்ற விண்கலங்கள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்.





.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை