ரீல்ஸ் அரசு?
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாகக் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை.
📰 பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர். ராமர் கோயில் காணிக்கை, மேகதாது அணை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.
📰 நாடாளுமன்றம் நோக்கி இன்று பேரணியாக செல்லப்போவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அறிவிப்பு. டெல்லி ஜந்தர் மந்தரை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம்.
📰 நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். உண்ணாவிரதத்தை கைவிடுவது தொடர்பாக சோனம் வாங்சுக் நிபந்தனை.
📰 பழனி கோயில் நிலமோசடி தொடர்பாக நெல்லையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை. மடம் நடத்திய முருகதாஸ் சுவாமிகளின் வாரிசுகளான 3 பேரின் வீடுகளிலும் சோதனை.
📰கீழடிக்கு முந்தைய நாகரிகம் மலையப்பட்டியில் இருந்ததாகவும் அறிவியல் ஆதாரங்களோடு மலையப்பட்டி நாகரிகம் நிரூபிக்கப்படும்
📰 விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சி நடப்பதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சனம். தவெக அரசை ஒன்றிய அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
📰 திருவாரூர் அருகே கொடி ஏற்றுவதில் தவெகவினர் இடையே மோதல். வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் நிகழ்ச்சி ரத்து செய்த கட்சி நிர்வாகிகள்.
📰 சென்னை காசிமேட்டில் உள்ள ஐஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு. கால்வாயில் ஊற்றப்பட்ட அமோனியா காற்றில் பரவியதால் பரபரப்பு.
📰 கும்பகோணம் அருகே கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிய இளைஞர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி.
📰 கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டை வீசிய போதை இளைஞர்கள். பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர் படுகாயம்.
📰 புதுக்கோட்டை அருகே ஆம்புலன்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள். ஆம்புலன்ஸ் என்றால் வழிவிட வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு.
📰 ஏலகிரி கோடை விழாவில் நடைபெற்ற கண்கவர் நாய்கள் கண்காட்சி. பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்திய நாய்கள்.
📰 ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் புரட்டிப்போட்ட கனமழை. கரைபுரண்டோடும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு.
📰 போர் பதற்றத்தில் சிக்கியுள்ள ஈரானுக்கு செல்லும் பயணங்களை தள்ளிப்போடுங்கள். இந்தியர்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
📰 பீகாரில் பக்மதி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து. ஆற்றில் தத்தளித்த 40 பயணிகள் பத்திரமாக மீட்பு.📰 சீனாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ஒரு டன் சுமை தாங்கும் ரோபோ குதிரை அறிமுகம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை இயங்கும் என தகவல்.
ரீல்ஸ் அரசு?
கீழடி தொல்பொருள் அருங்காட்சியகம், திறந்த வெளி அருங்காட்சியகம், 11ம் கட்ட அகழாய்வு உள்ளிட்டவற்றை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (ஜூலை 19) பார்வையிட்டார்.
பின்னர் திறந்த வெளி அருங்காட்சியகம், 11ம் கட்ட அகழாய்வு நடந்து வரும் இடம் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார். அவருக்கு கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் விளக்கமளித்தார். தவெக அமைச்சர் வருவதை ஒட்டி தவெக வினர் ஏராளமானோர், கார், டூவீலரில் கீழடிக்கு வந்திருந்தனர்.
திறந்த வெளி அருங்காட்சியகத்தினுள் அமைச்சர், ஆட்சியர் கார்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும், மற்ற வாகனங்கள் வெளியிலேயே நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது இருப்பினும் அருங்காட்சியக புல்வெளி வரை காரை கொண்டு வந்து த்வெக-வினர் நிறுத்தியிருந்தனர்.
மேலும், திறந்த வெளி அருங்காட்சியகம், அகழாய்வு பணிகள் நடைபெறும் இடங்களை வெளி நபர்கள் படம் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து தகுந்த அறிவுறுத்தல் வழங்கியும் அமைச்சருடன் வந்த கட்சியினர் ட்ரோன் கேமரா பயன்படுத்தி அமைச்சர் வருவது, அதிகாரிகளுடன் உரையாடுவது, கேள்வி கேட்பது என அனைத்தையும் பதிவு செய்தனர். தொல்லியல் துறை அதிகாரிகள் தடை செய்தும் அதனையும் மீறி ட்ரோன் கேமராவில் படம் பிடித்துள்ளனர்.
தவெக அமைச்சர் என்றால் புது விதிமுறைகள் ஏதும் விதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ரீல்ஸ்ஸீன் அளவு குறைவாக உள்ளது என நினைத்து தனது குழுவினரை சுற்றி சுழன்று ரீல்ஸூக்காக இப்படி செய்ய சொன்னாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே தவெக-வினர் ஆய்வுக்குச் சென்றாலே அது அடுத்த ஓரிரு நாட்களில் இண்ஸ்டாகிராமில் சினிமா பாடல்களுடன் ரீல்ஸாக வலம் வரும். இப்படியிருக்கையில் தொடர்ந்து ஆய்வுகளுக்குச் சென்று சர்ச்சையாவது தவெக-வினருக்கு ஒன்றும் புதிதல்ல.
ஆனால், ஒரு இடத்திற்கு ஆய்வுக்குச் சென்றால் அமைச்சர் என்கிற முறையில் சில அதிகாரப்பூர்வ நடைமுறைகள் இருந்தும் அதனை அமைச்சரே மீறுவது எவ்வித அணுகுமுறை எனத் தெரியவில்லை.
அடுத்தடுத்து கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடச் செல்கிறவர்கள் இதுபோன்று ட்ரோன் கேமராவுடன் சென்றால் விதிமுறைகள் அனுமதிக்குமா?த.வெ.க வினர் என்றால் விதிகள்சட்டம் ஒன்றும் கிடையாதா!? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


