போராட்டங்கள் முடிவதில்லை!

 
📰  முதலமைச்சர் குறித்த பேச்சுக்காக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது.15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.📰  டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி கட்சியினர் மீது தடியடி. தீவிரவாதிகளை ஒடுக்குவது போல் மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்ப்பு.📰  நீட் முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் பிரதானுக்கு முற்றும் நெருக்கடி. ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, பீயூஸ் கோயலை சந்தித்து அடுத்தடுத்து ஆலோசனை.📰  உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி. தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்.📰  திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டது உச்சபட்ச அடக்குமுறை என உதயநிதி ஸ்டாலின் கண்டனம். பேசினாலே கைது என்ற அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பதாக காட்டம்.📰  பரந்தூருக்கு மாற்றாக வேறு விமான நிலையத்தை அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசிடம் இருந்து கோரிக்கைகள் வரவில்லை. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ பதில்.📰  சீர்காழியில் காருக்குள் வைத்து முதியவரை தாக்கிய தவெக நிர்வாகி. முதியவர் மீதான தாக்குதலை ரீல்ஸாக பதிவிட்டதால் அதிர்ச்சி.📰  ஆரணியில் உணவகத்தில் அசைவம் சாப்பிட்ட 15 பேருக்கு உடல்நலம் பாதிப்பு. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போதே எலிகள் சுற்றித்திரிந்ததால் பரபரப்பு.📰  திருவாரூரில் நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 76 ரூபாய் லஞ்சம் என புகார். ஒவ்வொரு முறையும் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக ஆட்சியரிடம் மனு.📰  வந்தவாசி அருகே கோயிலில் 8 சவரன் நகை திருட்டு. தலைமறைவாக இருந்த கோயில் அர்ச்சகர் கைது.📰  திருச்சியில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய16 வயது சிறுவன். கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் விளிம்பில் தொங்கிய காரால் பரபரப்பு.📰  நாகர்கோவிலில் போக்குவரத்து போலீஸாரை போல வாகன சோதனை செய்த த.வெ.க.வினர் மூன்று பேர் கைது. ரீல்ஸ் மோகத்தில் போலீசார் போல செய்ததாக விசாரணையில் தகவல்.📰  அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை. வெள்ள பாதிப்புகளால் 10 பேர் உயிரிழப்பு. மூன்றரை லட்சம் பேர் பாதிப்பு.📰  இந்தியாவில் டெங்கு காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசி அறி்முகம். இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அங்கீகாரம்.📰  அல்பேனியாவில் விடுதிகள் அமைக்க அனுமதிக்கும் சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம். எம்.பி.க்களின் வாகனங்கள் மீது சரமாரியாக முட்டை்களை வீசி எதிர்ப்பு தெரிவித்த மக்கள்📰  சீனாவில் கோலாகலமா நடைபெற்ற கோடைக்கால விளையாட்டு விழா. மக்களை கவர்ந்த குறுகிய கால்கள் கொண்ட நாய்களுக்கான நீச்சல் போட்டி.இது உங்க போலீஸ் ஸ்டேஷன் கிடையாது.. வாக்குவாதம் என்ன நடந்தது?


நேற்று காலை கைது செய்யப்பட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரை பார்ப்பதற்கு திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தந்திருந்தார்.


ஆனால் அவருக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


விளாத்திக்குளம் திமுகவை சார்ந்த சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.


பத்து மணி நேர விசாரணைக்கு பின்பாக அவர் மருத்துவமனை அழைத்து வரப்பட்ட நிலையில், மார்க்கண்டேயனை சந்திப்பதற்காக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு வருகை தந்து இருந்தார்.


இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.


திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பார்ப்பதற்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் முயற்சி செய்தனர்.


ஆனால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் மருத்துவமனையில் பரிசோதனைக்காக தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட மார்க்கண்டேயனை சந்திப்பதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் வக்கீலுடன் வருகை தந்திருந்தார்.

அப்போதும் அவரை காவல்துறையினர் சந்திப்பதற்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து வக்கீலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி ADSP, எங்களை பொறுத்த வரைக்கும் அவர் அக்யூஸ்ட். கோர்ட்டுக்கு வாங்க. அட்வகேட்டுக்கு இங்கே இடம் கொடுக்க முடியாது என்றார்.


அப்போது இது ஆஸ்பத்திரி. உங்களுடைய போலீஸ் ஸ்டேஷன் கிடையாது என்று ஆவேசமாக கூறினார்ர் அனிதா ராதாகிருஷ்ணன். அதற்கு ADSP உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் என மிரட்ட ஆரம்பிக்க, வக்கீலும் எடுங்க சார் என்றார்.


காலையில் இருந்து வெயித்ட் பண்றோம். அரெஸ்ட் பண்ண வரும்போது பத்து விஷயங்களை பாலோ பண்ணனும் தெரியும்ல. அதை நீங்க பாலோ பண்ணீங்களா.


அவரோ கவுன்சல் நான் என அடுக்கடுக்காக அனிதா ராதாகிருஷ்ணன் உடன் வந்த வக்கீல் கேள்விகளை எழுப்பினார்.


அதோடு எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகனான வக்கீலும் போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.


துப்பாக்கி முனையில் மிரட்டல்?.. விசாரணையில் இதுதான் நடந்தது: கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு

இதற்கிடையில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏடிஎஸ்பி திபு, செய்தியாளர்களை நோக்கி மிரட்டும் தொனியில் பேசியதாக வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

அதாவது மார்க்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்களிடம், மிரட்டுவதை போன்று அவர் பேசியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்த வீடியோவும் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.

மேலும் முன்னதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் செய்தியாளர்களை சந்திக்காமல் இருக்கும் விதமாக, அவரை பின்வாசல் வழியாக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது பத்திரிக்கையாளர்களை நோக்கி போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக கூச்சலிட்டார்.

தன்னை மார்ச்சுவரியில் கொண்டு சென்று அடைக்க போவதாகவும் புகார்களை அவர் தெரிவித்ததும் பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது.

மேலும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பாக செய்தியாளர்களிடம், நேரடியாக எஸ்பி, ஏடிஎஸ்பி யாருக்கும் அதிகாரம் இல்லைன்னு நினைக்கிறேன். அவுங்களோட கடமையை அவர்களால் செய்ய முடியவில்லை.

எங்கையோ உத்தரவுக்காக காத்து இருக்காங்க. அந்த திறன் அவர்களுக்கு கிடையாது என காவல்துறை மீது குற்றச்சாட்டினைமுன்வைத்துமார்க்கண்டேயன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.போராட்டங்களை ஒடுக்க முடியாது

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு ஜனநாயக விரோத, மக்கள் விரோத மசோதாக்களை கொண்டு வர ஒன்றிய பாஜக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பல்லாயிரக்க ணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப் பாட்டில் உள்ள தில்லி காவல்துறை கொடூரமான தடியடி தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையா கக் கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயல்வது அரசியல் சட்டம் அனுமதித் துள்ள ஜனநாயக உரிமைகளில் ஒன்று. பேரணி யாக சென்றவர்கள் எத்தகைய வன்முறையிலும் ஈடுபடவில்லை. அமைதியாக அறவழியில் கடந்த ஒரு மாதக் காலமாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் போராடி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் வாலி பர், மாணவர் அமைப்புகள் இந்தப் போராட் டத்தை ஆதரித்துள்ளனர்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மிகப் பெரும் கல்வி முறைகேடுகளுக்கு காரணமான தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; இந்திய கல்விச் சூழலை நாசமாக்கும் புதிய கல்விக் கொள் கையை கைவிட வேண்டும்; ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோ ரிக்கைகளை போராடும் இளைஞர்கள் முன் வைத்துள்ளனர்.

தில்லி ஜந்தர்மந்தரில் கடந்த ஒரு மாத காலத் திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நடந்து வந்தது. சோனம் வாங்சுக் அறவழியில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடைய கோரிக்கையை பரிசீலிக்க ஒன்றிய அரசு மறுத்தது. அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் அவரை வலுக்கட்டாயமாக அகற்றியது ஒன்றிய அரசு.

இந்நிலையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை தடியடி நடத்தி கலைத்ததோடு, துப்பாக்கியேந்திய போலீ சாரையும் ஒன்றிய அரசு குவித்துள்ளது. அந்தப் பகுதி முழுவதும் தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட தோடு, மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப் பட்டன. இணைய சேவையும் முடக்கப்பட்டது. அப்படி இருந்தும் இளைஞர்களின் போராட் டத்தை ஒடுக்க முடியவில்லை. பெருந்திரளான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் சட்டம் அனுமதித்துள்ள குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகளைக் கூட மோடி அரசு காலில் போட்டு மிதிக்கிறது. இத்தகைய அடக்கு முறைகளால் போராட்டத்தை ஒடுக்கி விட முடி யாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் பட்டுள்ளனர். முதல்கட்டமாக தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதே நியாயமாக இருக்கும்.

Telegram

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை