நீட் எதிர்ப்பு...!

 
டெல்லியில் இளைஞர்கள் மீதான காவல் துறை ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது”

- உதயநிதி



நீட் முறைகேடுகளுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டிருந்த சிஜேபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது காவல் துறையைக் கொண்டு ஒடுக்குமுறையை மேற்கொள்கிறது.


ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்’ என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டிருந்த சிஜேபி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல்துறை காட்டிய அடாவடித்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


டெல்லியிலிருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அரசு தனது காவல்துறையைக் கொண்டு ஒடுக்குமுறையை மேற்கொள்கிறது.


ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.


கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.


இன்று, நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல், நாட்டின் தலைநகரம் உட்பட நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.


நாட்டின் இளைஞர்களின் கோரிக்கை தெளிவாக உள்ளது; அவர்களின் குரலுக்குச் செவிசாயுங்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


இதனையடுத்து, நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள், சன்சத் மார்க் காவல் நிலையத்துக்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர். காயமடைந்த சில போராட்டக்காரர்களுக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை