போர்க் குணம்

வினாத்தாள் கசிவு - இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய நடவடிக்கை. வினாத்தாள் கசிவுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதிக்கக்கூடியது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்."மாணவர்களுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார். கடந்த 24 மணி நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த 4 முறை அழைப்பு.சிவகங்கை, திருப்பத்தூர் தொகுதியில் மறு எண்ணிக்கை கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு வாபஸ்நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - விரைவு நீதிமன்றத்தை அமைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவுகடந்த 17ம் தேதி விசாரணைக்காக தூத்துக்குடி தென்பாகம் போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் இன்று உயிரிழப்பு. போலீசார் தாக்கியதாக சிகிச்சையில் இருக்கும்போது அருணாச்சலம் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி."CJP கட்சியினர் போராட்டம் காரணமாக டெல்லி நாடாளுமன்றம் பகுதியில் இணைய சேவை முழுமையாக முடக்கம்வினாத்தாள் கசிவு வழக்கு விசாரணைக்காகச் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பை CJP நிராகரித்தது.கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி. தேர்தல் தோல்வி, கட்சியை பலப்படுத்தல் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்ட8 பேருக்கு ஜாமீனை மறுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவுதிமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீது காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு. விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைப்புதெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள நடவடிக்கை

"சமூக நீதி விடுதிகளில் உணவு

தேவைகளை சரி செய்ய வேண்டும்.

விடுதியில் உணவு பட்டியலை கட்டாயம்

காட்சிப்படுத்த வேண்டும். குறைபாடுகள்

இருந்தால் விடுதி கப்பாளர்கள்தான் பொறுப்பு."*தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி மலையடிவாரப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,350 லிட்டர் வெளிமாநில மதுப்பாட்டில்கள் பறிமுதல்*

ஈரோடு: கொடுமுடி அருகே வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக காலிங்கராயன் கால்வாயில் இறங்கி மதகை திறக்க முயன்ற விவசாயி பழனிசாமி (50) மதகின் உள்ளே சிக்கி உயிரிழந்தார்

ஐனநாயகன் பார்த்து த.வெ.க,அதைச்சர்களுக்கு போட்டியாக அழுத வைகோ?

(இதைப் பார்க்க வேண்டிய நிலையை எண்ணி அழுதிருப்பாரோ)

'காங்கி'ன் போர்க் குணம்

காங்­கி­ரஸ் தி.மு.க-வு­டன் உறவு கொண்­டா­லும் எப்­போ­தும் தி.மு.க,வை பல­வீ­னப்­ப­டுத்த, தனி­மைப்­ப­டுத்த முயற்சி செய்­து­கொண்டே இருக்­கும். 

எம்.ஜி.ஆர் தி.மு.க.-வை பிளந்து தனிக்­கட்சி துவங்­கி­ய­தன் பின்­ன­ணி­யில் இந்­திரா காங்­கி­ரஸ் தூண்­டு­தல் இருந்­தது என்­பதை பல­ரும் கூறி­யுள்­ளார்­கள். எம்.ஜி.ஆர் மறை­வுக்­குப் பிறகு ஜெய­ல­லி­தாவை ஆத­ரித்­தது காங்­கி­ரஸ்.

 ராஜீவ் காந்தி கொலை­யில் ஏற்­பட்ட அனு­தாப அலை­யில் ஆட்­சிக்கு வந்­தார் ஜெய­ல­லிதா. ஆனால் மோச­மான ஆட்சி தந்து மக்­க­ளின் அதி­ருப்­திக்கு ஆளா­னார்.


அப்­போ­தும் நர­சிம்ம ராவ் ஜெய­ல­லி­தா­வு­டன் கூட்­டணி அமைத்­ததை எதிர்த்து மூப்­ப­னா­ரும், சிதம்­ப­ர­ மும் தமிழ் மாநில காங்­கி­ரஸை துவங்­கி­னார்­கள். 

ஒன்­றி­யத்­தில் மூன்­றா­வது அணி ஆட்­சி­யில் தி.மு.க-வு­டன் பங்­கேற்­றார்­கள். அப்­போது தி.மு.க மீது ஜெயின் கமி­ஷ­னில் ஐயங்­கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன என்ற ஒரு கதை­யா­டலை உரு­வாக்கி தி.மு.க-வை அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து விலக்க வேண்­டும் என்று காங்­கி­ரஸ் கூறி­யது. குஜ்­ரால் மறுத்­த­தால் ஆட்­சி­யைக் கவிழ்த்­தது.

ஜெய­ல­லிதா பா.ஜ.க.வுடன் கூட்­டணி வைத்து ஒன்­றி­யத்­தில் பா.ஜ.க. ஆட்­சிக்கு வர உத­வி­னார். ஆனால் தமிழ்­நாட்­டில் தி.மு.க அரசை டிஸ்­மிஸ் செய்­யச்­சொல்லி கட்­டா­யப்­ப­டுத்­தி­னார். 

வாஜ்­பேயி அதைச் செய்ய மறுத்­தார். அப்­போ­து­தான் சுப்­ர­ம­ணிய சுவாமி டீ பார்ட்டி வைத்து சோனி­யா­வை­யும், ஜெய­ல­லி­தா­வை­யும் சந்­திக்க வைத்­தார்.


 ஜெய­ல­லிதா வாஜ்­பேயி அர­சுக்­கான ஆத­ரவை விலக்­கிக் கொண்­ட­தில் ஆட்சி கவிழ்ந்­தது.

இப்­படி மூன்­றா­வது அணி­யும் வலு­வி­ழந்து, காங்­கி­ர­ஸும், அ.இ.அ.தி.மு.க-வும் இணைந்து தி.மு.க-வை தனி­மைப்ப டுத்­திய நிலை­யில், தி.மு.க பா.ஜ.க.-வுடன் கூட்­டணி வைத்­தது. குறைந்த பட்ச வேலைத்­திட்­டம் ஒன்றை வகுத்து, வாஜ்­பேயி கூட்­டணி அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­றது. இதற்­கான சூழ்­நிலை உரு­வாக க் கார­ணம் காங்­கி­ரஸ் தி.மு.க-வை தனி­மைப்­ப­டுத்தி பல­வீ­னப்­ப­டுத்த முயன்­ற­து­தான்.


இன்று வரை இந்த பின்­னணி தக­வல்­களை மறைத்­து­விட்டு, தி.மு.க பா.ஜ.க.-வுடன் தானாக விரும்பி கூட்­டணி வைத்த து போன்ற தோற்­றத்தை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர். சுப­ர­ம­ணிய சுவாமி டீ பார்ட்­டி­யால் விளைந்த அழுத்­தம், தி.மு.க மீது சுமத்­தப்­பட்ட அபாண்­ட­மான

குற்­றச்­சாட்­டு­கள், திணிக்­கப்­பட்ட கதை­யா­டல் ஆகி­ய­வையே அந்த சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யது. காங்­கி­ரஸ் தி.மு.க-வை பா.ஜ.க. நோக்­கித் தள்­ளி­யது என்­றால் மிகை­யா­காது.

ஆனா­லும் சங்கு சுட்­டா­லும் வெண்மை தரும் என்­ப­து­போல, தி.மு.க.-வின் கருத்­தி­யலோ, கொள்­கை­களோ எந்­த­வி­தத்­தி­லும் மாறு­ப­ட­வில்லை. குஜ­ராத் கல­வ­ரத்­திற்­குப் பிறகு பா.ஜ.க.-வின் போக்­கினை புரிந்­து­கொண்ட தி.மு.க, மீண்­டும் காங்­கி­ர­ஸு­டன் இணைந்து ஐக்­கிய முற்­போக்­குக் கூட்­டணி அர­சில் பங்­கேற்­றது. அதி­லி­ருந்து தொடர்ந்து காங்­கி­ர­ஸு­ட­னேயே பய­ணித்து வந்­தது.

 பா.ஜ.க.-விற்கு எதி­ரான அகில இந்­திய கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தில் முக்­கிய பங்கு வகித்து வந்­தது.

அந்த சூழ்­நி­லை­யில்­தான் திடீ­ரென ஒரு பிர­வீன் சக்­ர­வர்த்தி வரு­கி­றார். இவ­ருக்­கும் சுப்­ர­ம­ணிய சுவா­மிக்­கும் பல பொருத்­தங்­கள். அவர் ராகு­லின் தூத­வ­ராக விஜ­யு­டன் பேசு­கி­றார். தி.மு.க-வு­டன் கூட்­டணி அமைத்த பிற­கும் விஜய் ஆத­ரவு கருத்­துக்­க­ளைப் பேசு­கி­றார். 

தி.மு.க – காங்­கி­ரஸ் உறவை பிளக்­கி­றார். என்ன கார­ணம்? தவெக கூட்­டணி அமைச்­ச­ர­வை­யில் காங்­கி­ர­ஸிற்கு இடம் கொடுக்­கி­றது என்­ப­து­தான்.

எப்­ப­டி­யா­வது தி.மு.க-வை தனி­மைப்­ப­டுத்தி, பல­வீ­னப்­ப­டுத்தி களத்­தி­லி­ருந்து அகற்ற வேண்­டும் என்ற முயற்சி மீண்­டும் தோன்­றி­யுள்­ளது போலத் தெரி­கி­றது. ஆனால் தமிழ்­நாட்டு நல­னு­ட­னும், தமிழ்­நாட்டு வர­லாற்­று­ட­னும் பின்­னிப் பிணைந்த தி.மு.க-வை இந்த சல­ச­லப்­பு­கள் எல்­லாம் ஒன்­றும் செய்­யாது. அதன் வர­லாற்­றுப் பய­ணம் தொட­ரும்.

காங்­கி­ரஸ்­தான் பாவம்; பா.ஜ.க.-வையும் எதிர்த்­துக்­கொண்டு, மாநில கட்­சி­க­ளை­யும் பகைத்­துக்­கொண்டு திசை­தெ­ரி­யா­மல் விழிக்­கி­றது.

 பேச்­சில் மட்­டும் வீர­வ­ச­னங்­க­ளுக்கு குறை­யி­ருக்­காது. 

                                                   -ராஜன் குறை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை