தரங்கெட்ட மாற்றம்.,
📌 மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் கிளர்ச்சி. நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு முற்றும் நெருக்கடி.
📌 நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் நாட்டிலும் கிளர்ந்தெழுந்த மாணவர்கள். மாணவர் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கம்.
📌 தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் விடிய விடிய காத்திருப்பு போராட்டம். செல்போன் டார்ச்சை ஒளிரவிட்டும், தீப்பந்தங்களை ஏந்தியும் அரசுக்கு எதிர்ப்பு.
📌 தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என CJP திட்டவட்டம். மீண்டும் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் முடிவுகளை தெரிவிப்பதாக ஜெ.பி.நட்டா பேட்டி,
📌 நீட் தேர்வு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ஒன்றிய அரசு முடிவு. தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 47 பேர் அதிரடி பணிநீக்கம்.நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவை தனது தங்கச்சி என்றும், ‘நீட் தேர்வை எதிர்ப்பேன்’ என்றும் வேஷம் போட்ட விஜய் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் மாணவர்களின் கையையும் காலையும் உடைக்கிறார்.
டெல்லியில் போராடும் மாணவர்களை ஒடுக்குவதில் அங்குள்ள போலீசார் எத்தகைய அராஜகத்தில் ஈடுபடுகிறார்களோ, அதே அராஜகத்தையும் அட்டூழியத்தையும் இங்குள்ள விஜய் ஆட்சி போலீசும் செய்கிறது.
லத்தி லைசென்ஸை போலீசுக்குக் கொடுத்துவிட்டு, தான் நடித்த படத்தை ரசிப்பதில் மூழ்கி இருக்கிறார் விஜய்.
‘ரோம் பற்றி எரியும் போது பிடில் பிடித்தான் மன்னன்’ என்பதற்கு இணையானது முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கைகள்.
«« சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இரண்டு நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் மாணவர்கள்.
இந்திய மாணவர் சங்கம், டி.ஒய்.எஃப்.ஐ. அமைப்பினர் இதனை நடத்தினர். முதல் நாள் நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்து எட்டுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியது விஜய் போலீஸ். மறுநாள் மாணவர்கள் வர மாட்டார்கள் என்று நினைத்தார்கள்.
மறுநாளும் மாணவர்கள் வந்ததும் கோபம் ஆன போலீசார், அவர்களை அராஜக வழியில் வெளியேற்றினார்கள்.
டெல்லி போலீசைக் கண்டித்துதான் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அதனைக் கூட விஜய் ஆட்சி அனுமதிக்கவில்லை.
மாணவர்களை குண்டுக்கட்டாகப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றது போலீஸ். மாணவிகள் என்று கூட பார்க்காமல் இழுத்ததால் அவர்கள் ஆடைகள் கிழிந்தது.
வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றினார்கள். பல மாணவிகளுக்கு உடலில் காயம் ஏற்பட்டது. சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
‘தமிழ்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதா?’ என்று போலீசைப் பார்த்து மாணவிகள் கேள்வி எழுப்பினார்கள்.
“நாலு மாணவர்கள் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.
மாணவர்கள் கையில் போலீஸார் கடித்துள்ளார்கள். இது அராஜகம் அல்லவா?’’ என்று ஒரு மாணவி கேள்வி கேட்டார்.
‘நாலு பேர் கூடவே கூடாதா? சும்மா நடந்து வந்தாலே கைது செய்கிறீர்கள். கூட்டம் கூடுவதற்கு முன்பே ஏன் கைது செய்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கும் காவல் துறை அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை.
« சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அறவழியில் போராடிய மாணவர்களை, கல்லூரிக்குள் புகுந்து கைது செய்ய முயன்றுள்ளது.
இதற்கு சக மாணவ மாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, சமூக விரோதிகள் போல் அடித்து, தரதரவென இழுத்துச் சென்று காவல்துறை கைது செய்தது.
இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது போலீஸ்.
« மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தது காவல் துறை.
சாலை மறியல் செய்தவர்களை தடியடி நடத்தி கலைத்தது போலீஸ். மாணவிகளை இழுத்துச் சென்று வேனில் ஏற்றினார்கள். பின்னர் மாணவர்களைத் தேடி கல்லூரிக்கும் விடுதிக்கும் சென்றது போலீஸ்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர் சங்க மாணவர் தலைவர்களை கைது செய்ய பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் நுழைந்துள்ளனர். வகுப்பறைக்குள் சீருடையுடன் சென்று கைது செய்துள்ளார்கள்.
« ஒரு மாணவரை அசிங்கமான வார்த்தையால் திட்டுகிறார் திருவொற்றியூர் போலீஸ் அதிகாரி.
« மாணவியின் கையைப் பிடித்து, இழுத்து அராஜகம் செய்கிறார் ஆண் போலீஸ் அதிகாரி.
« சென்னையில் உள்ள கல்லூரி வாசல்கள் அனைத்திலும் காவல் துறை குவிக்கப்பட்டுள்ளது.
« சென்னை மெரினா கடற்கரை போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. கடற்ரைக்கு வரும் பொதுமக்கள் தீவிர விசாரணைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டார்கள். சர்வீஸ் லைன் அனைத்தும் மூடிவைக்கப்பட்டது.
« போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பேண்ட்டை பிடித்து இழுத்து இருக்கிறது போலீஸ்.
« கல்லூரி வளாகத்திற்குள் சென்று அங்கிருந்த மாணவர்களை மல்லுக்கட்டி இழுத்து வந்திருக்கிறது. மாணவர்களின் சட்டையைக் கிழிக்கிறது போலீஸ்.
« டெல்லியில் போலீஸ் சீருடை இல்லாதவர்கள், கையில் லத்தியுடன் வந்து மாணவர்களை அடிக்கிறார்கள். இங்கும் அது தொடங்கி இருக்கிறது. சீருடையில் பெயர் பேட்ஜ் எடுத்துவிட்டு வருகிறது போலீஸ்.
– இவை அனைத்தும் போலீஸ் ராஜ்யம் நடக்கிறது என்பதற்கான காட்சிகள் ஆகும்.
‘சாலைகள் என்பது போராட்டம் நடத்தும் இடமல்ல’ என்று அமைச்சர் ராஜ்மோகன் சொல்லி இருக்கிறார். சாலையை மறித்து இதுவரை விஜய் பேசியது இல்லையா? அவரது ரசிகர்கள் எதுவும் செய்தது இல்லையா? ‘மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் கைது’ என்கிறார் அமைச்சர். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடப்பதே இல்லையா?
போராட்டம் நடத்துவதையே சட்ட விரோதம் ஆக்கிவிட்டது விஜய் அரசு. காவல் துறை எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம், அராஜகம் செய்யலாம் என்று அனுமதி கொடுத்து விட்டார் முதலமைச்சர் விஜய்.
‘நான் நினைத்ததைச் செய்வேன், அதை யாரும் கேட்க முடியாது, கேட்கக் கூடாது’ என்பதுதான் இன்று நடந்துள்ள மாற்றம்.
டெல்லியில் ஜூலை 20-ஆம் தேதியன்று மாணவர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து சுதந்திரமான நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என 93 ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அடங்கிய குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை சட்டவிரோதமாகவும், வரம்பு மீறியும் பலத்தை பயன்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ‘அரசியலமைப்பு நடத்தை குழு’ அழைப்பு விடுத்துள்ளது.:
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.பி.கே. சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த திங்களன்று நடைபெற்ற ‘சன்சத் சலோ’ பேரணியின் போதும் அதற்கு பின்னரும் டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடி படையினர் வரம்பு மீறிய பலத்தை பயன்படுத்தியதாகவும், இதனால் பல போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்த அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கையெழுத்திட்டவர்களில் டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஏ.எஸ். துலத், பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி. ஜூலியோ ரிபேரோ, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ் மந்தர் மற்றும் பல ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் அடங்குவர்.
கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற ஒரு இளம் போராட்டக்காரருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்றும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும் என்றும் அந்த குழு கூறியது.
“டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள், போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்பட்ட ஒரு இளம் போராட்டக்காரர் உட்பட பல இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது சிறுவனும் அடங்கும்,” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.:
முன்னாள் அரசு ஊழியர்கள் மேலும் கூறுகையில், பெயர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்றும் சாதாரண உடையில் இருந்தவர்கள் உட்பட பல டெல்லி காவல்துறை மற்றும் RAF வீரர்கள், ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளால் போராட்டக்காரர்களை “இரக்கமின்றி” தாக்கியதாக குற்றம் சாட்டினர்.
டெல்லியில் ஜூலை 20-ஆம் தேதியன்று மாணவர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து சுதந்திரமான நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என 93 ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அடங்கிய குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை சட்டவிரோதமாகவும், வரம்பு மீறியும் பலத்தை பயன்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ‘அரசியலமைப்பு நடத்தை குழு’ அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.பி.கே. சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த திங்களன்று நடைபெற்ற ‘சன்சத் சலோ’ பேரணியின் போதும் அதற்கு பின்னரும் டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடி படையினர் வரம்பு மீறிய பலத்தை பயன்படுத்தியதாகவும், இதனால் பல போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்த அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கையெழுத்திட்டவர்களில் டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஏ.எஸ். துலத், பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி. ஜூலியோ ரிபேரோ, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ் மந்தர் மற்றும் பல ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் அடங்குவர்.
அறுவை சிகிச்சை:
கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற ஒரு இளம் போராட்டக்காரருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்றும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும் என்றும் அந்த குழு கூறியது.
“டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள், போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்பட்ட ஒரு இளம் போராட்டக்காரர் உட்பட பல இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும்,” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் அரசு ஊழியர்கள் மேலும் கூறுகையில், பெயர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்றும் சாதாரண உடையில் இருந்தவர்கள் உட்பட பல டெல்லி காவல்துறை மற்றும் RAF வீரர்கள், ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளால் போராட்டக்காரர்களை “இரக்கமின்றி” தாக்கியதாக குற்றம் சாட்டினர்.
மேலும், சில காவலர்கள் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியதுடன், அந்த அதிகாரியை அடையாளம் கண்டு அவருக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தபோதிலும் போராட்ட இடத்திற்கு அருகில் “கற்கள் நிரம்பிய லாரி” ஒன்று இருந்தது குறித்தும், காவல்துறையினர் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்தும்,
பல போராட்டக்காரர்கள் வளைத்து பிடிக்கப்பட்டு வழக்கறிஞர்களை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாமலேயே ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டனர் என்பது குறித்தும் அந்த கடிதம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தபோதிலும் போராட்ட இடத்திற்கு அருகில் “கற்கள் நிரம்பிய லாரி” ஒன்று இருந்தது குறித்தும், காவல்துறையினர் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்தும், மேலும் போராட்டக்காரர்கள் வளைத்து பிடிக்கப்பட்டு வழக்கறிஞர்களை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாமலேயே ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டனர் என்பது குறித்தும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.