குற்றமே. இல்லை...

 📌 முதல் முறையாக போராட்டங்களுக்கு பணிந்து மோடி அமைச்சரவையில் ஒருவர் ராஜினாமா. மாதக்கணக்கில் நடந்த போராட்டங்களை கண்டுகொள்ளாத மோடி அரசு, இளைஞர்கள் எழுச்சியால் பின்வாங்கியது.

📌 நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து, போராட்ட களத்தில் கொண்டாட்டம். ஒன்றிய அமைச்சர்களின் பேச்சுவார்த்தையை அடுத்து, ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த சிஜேபி போராட்டம் வாபஸ்.


📌 நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம். மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு இருப்பதாகக் கூறி கண்டன முழக்கம்.


📌 வீதிகளிலும், இணையத்திலும் போராடி இளைஞர்கள் வெற்றி பெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. வேளாண் சட்டங்களைப் போல, நீட் ஒழிப்பையும் உறுதி செய்வோம் என திட்டவட்டம்.


📌 தர்மேந்திர பிரதான் ராஜினாமாவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு. 


📌 நீட் வினாத்தாள் கசிவு மாணவர்களுக்கு சாதகமாக அமைந்ததாக நிர்மலா சீதாராமன் சர்ச்சைக் கருத்து. இன்னும் அதிகமாகப்படித்து,செயல்திறனைமேம்படுத்திக்கொண்டதாக சில மாணவர்கள் கூறியதாக பேட்டி.


📌 சென்னையில் நீட் போராட்ட களத்திற்கு சென்ற அமைச்சர் ராஜ்மோகன். போராட்ட அச்சத்தில் மெரினாவை மூடியதை சுட்டிக்காட்டிய இளைஞர்கள், பாஜகவிற்கு எதிராக பேசுமாறும் முழக்கம்.


📌 காவிரி நீர் தொடர்பாக கர்நாடகா முதலமைச்சருடன், விஜய் பேச்சுவார்த்தை நடத்த வலுக்கும் எதிர்ப்பு. கர்நாடகா விரிக்கும் சதி வலையில் சிக்க வேண்டாம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.


📌 அரசியலில் இருந்து விலகுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு. இனி அரசியல் பேச மாட்டேன் என்றும் பேச்சு.


📌 மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலேயே இயங்கும் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடமா?.ஆளுநர், பல்கலைக்கழகத்தின் முயற்சியை அரசு தடுக்குமாறு, திமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்.


📌 தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் தொடர்வது கவலையளிப்பதாக பிரேமலதா பேட்டி. தவெகவிற்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்ததாக விமர்சனம்.


📌 தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்வு. 4 மாதங்களுக்குள் 3 முறை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.


📌 புதுக்கோட்டையில் அரசு முகாமில் அமைச்சர் பர்வேஸின் சகோதரர் ஆய்வு.  தலைமை உத்தரவிட்டும் நிர்வாகிகள் தொடர்ந்து அத்துமீறுவதால் சர்ச்சை.


📌 குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் தொடரும் கனமழை. சாலைகள், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


📌 60 ஆண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தை எதிர்கொண்டுள்ள அசாம். ஒரே நாளில் 14 பேர் பலியானதால், உயிரிழப்பு 61-ஆக அதிகரிப்பு.

குற்றமே இல்லை..!

தமிழ்நாடு முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை, திமுக முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.


முன்னதாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் சிறையில் சந்தித்து நலம் விசாரித்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரகுபதியும் சிறைக்கு வந்தார்.


சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்தச் சந்திப்பு நீடித்தது. ஜூலை 27-ம் தேதி மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.


சந்திப்பிற்கு பிறகு பாளையங்கோட்டை சிறை வாசலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரகுபதி, பொதுக்கூட்டத்தில் பேசும்போது எலும்பை முறித்து விடுவேன் என்று கூறியது பேச்சுவாக்கில் வந்த வார்த்தை மட்டுமே; அது குற்றமாகாது.


ஆனால், டி.எஸ்.பி மூலம் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுத்து இந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரூர் சம்பவத்தைப் பார்த்து யாரும் கண்ணீர் விடவில்லை. ஆனால் இன்று ‘ஜன நாயகன்’ படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீர் விடுகிறார்கள்.

நம்முடைய சட்டப்பேரவை தற்போது ஒரு திரைப்படக் கொட்டகையாக மாறி இருக்கிறது. இது மக்களை காப்பாற்றும் அரசு அல்ல, சினிமா பார்க்கும் அரசு. முதல்வர் பேசும்போது சட்டப்பேரவை கதவுகளை மூட வேண்டும் என்று கூறுவது உரிமை மீறல் இல்லையா?

கதவை மூடுவதற்கு யாருக்கு என்ன உரிமை உள்ளது?


‘எலும்பை முறிப்பேன்’ என்று சொன்னது மட்டும் குற்றமா, முதல்வர் கதவைச் சாத்தச் சொல்வது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.


தொடர்ந்து பேசிய ரகுபதி, அவையில் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும்போது வெளிநடப்பு செய்ய உறுப்பினர்களுக்கு முழு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டதோடு, பேரவைத் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகச் சாடினார்.


வெள்ளைக்காரன் ஆட்சியில் கூட பொது மக்களுக்கு பேசுவதற்கு உரிமை இருந்தது. ஆனால், தற்போதைய விஜய் ஆட்சியில் பேசுவதற்கு உரிமை இல்லை; அரசை விமர்சனம் செய்தாலே வழக்கு போடும் நிலைதான் உள்ளது.


தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள் சூறையாடப்படும் ஆட்சியாக இது இருக்கிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட உள்ளதற்குக் காரணம், ஆட்சியாளர்கள் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாகச் செயல்படுவதுதான்.


பாஜகவை எதிர்த்து உண்மையான அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக மட்டும்தான். நாங்கள் எப்போதுமே கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.


ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ரகுபதி,


நீண்டநாட்களாக போராடி வரும் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி இது.

அதனால்தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை