எதிர்வரும். பேரிடர்.......
📌 தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள 6 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைத்தது ஒன்றிய அரசு. இனி தேர்வுகளின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும் என பிரதமர் திட்டவட்டம்.
📌 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்கப் பதக்கம். பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்த ஹாட்ரிக் தங்க மங்கை மீராபாய் சானு.
📌 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு வெள்ளிப் பதக்கம். மற்றொரு போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த ரிஷிகாந்த் சிங்கும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்.
📌 சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு. போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 11 பேர் கைது.
📌 தண்ணீரின்றி வறண்ட நீர்நிலைகளால் கடலூர் மாவட்டத்தில் குறையும் நிலத்தடி நீர்மட்டம். செயற்கை செறிவூட்டும் முறையை பயன்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க கோரிக்கை.
📌 காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் மின்வெட்டு. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் சாலை மறியல்.
📌 தூத்துக்குடி அருகே பைக்கில் வந்து ஆடுகளை திருடும் தம்பதி. சிசிடிவி காட்சியை கொண்டு திருட்டு தம்பதியை தேடும் போலீஸ்.
📌 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க புகார் குறித்து எடப்பாடி பழனிசாமி விசாரணைக்கு அழைப்பு. பதவி விலகிய 4 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் வரும் 30-ம் தேதி விசாரணை.
📌 தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவிப்பு. நேர்மையான அரசியலுக்கு இடமில்லாத நிலை தற்போது உள்ளதாகவும் வேதனை.
📌 தொடர் மழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம். அசாமில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழப்பு. கேரளாவில் குட்டிபுரம் என்ற இடத்தில் சாலைத் தடுப்பில் மோதி இரண்டாக உடைந்த பேருந்து. விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
📌 அசாமில் இரும்புக் கம்பி தயாரிப்பு ஆலையில் சிலிண்டர் வெடித்து விபத்து. ஆலை முழுவதும் தீ பரவியதில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
📌 ஸ்பெயினின் கிழக்குப் பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ. 21 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பு... 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்.
📌 ஸ்பெயினின் கிழக்குப் பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ. 21 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பு... 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்.
📌 உக்ரைனின் கார்கிவ் நகர் மீது ஏவுகணை வீசி ரஷ்யா தாக்குதல். ஏராளமான குடியிருப்புகள் இடிந்து தரைமட்டம்.
தேசிய தேர்வு முகமையைக் கலைப்பதே தீர்வு!
கல்வியைக் காக்க நடைபெற்ற மாணவர்- இளைஞர் எழுச்சியின் விளைவாக, கல்வித்து றை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேறு வழி யின்றி தனது பதவியை ராஜினாமா செய்துள் ளார். இருப்பினும், இது அமைச்சரின் பதவி விலகுவதோடு நின்றுவிடக்கூடிய சாதாரணப் பிரச்சனை அல்ல.
; மாறாக, நாட்டின் கோடிக்கண க்கான மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறை யாடி வரும் தேசிய தேர்வு முகமையின் (NTA) அடிப்படையான கட்டமைப்புச் சீர்கேடுகளும், தொடரும் குளறுபடிகளுமே இதன் மூலவே ராகும்.
அமைச்சரின் வெளியேற்றம் என்பது மோடி அரசின் தோல்வியை ஒப்புக் கொள்வ தும், பொறுப்பேற்பதுமே ஆகும். ஆனால் மோடி அரசு அப்படிக் கூட சொல்லிக்கொள்ளவில்லை. பிரதானுக்கு புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கிறது.
அது ஒருபுறம் இருக்க, மாநிலங்களவையில் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி. சிவ தாசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், தேசிய தேர்வு முகமையிடம் சொந்தமாக ஒரு நிரந்தர ஊழியர் கூட இல்லை என்ற அதிர்ச்சிகர மான உண்மை அம்பலமாகியுள்ளது.
2018 முதல் 6.6 கோடி மாணவர்களுக்காக 270 தேர்வுகளை நடத்திய இந்த அமைப்பு, வெறும் 24 பதிலி ஊழி யர்களைக் கொண்டே இயங்குகிறது; 73 பேர் மட்டுமே வெளிமுகமை மூலம் நியமிக்கப் பட்டுள்ளனர்.
நீட் பயிற்சி மய்யம் மூலம் பலகோடிகள் மாணவர்களிட்ம் பெறப்படுகிறது.அதில் ஒன்றில் சி.ஜோசப் விஜய்(முதலவர்தான்)பங்குதாரர்.எந்தவித நிர்வாகக் கட்டமை ப்பும் இன்றி, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை சூதாடும் இந்த அமைப்பு உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்.
நிதிக்கணக்கீடுகளிலும் அரசு பச்சையான ஒளிவுமறைவு அரசியலில் ஈடுபட்டுள்ளது. தேர்வுக் கட்டணம் மூலம் 2018-19 இல் 504.16 கோடி யாக இருந்த இந்த முகமையின் வருவாய், 2023-24 இல் 1,116.84 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறிய அரசு, 2024-26 ஆண்டுகளுக்கான வரு வாயை வெளியிட மறுத்துவிட்டது.
மேலும், முந்தைய தரவுகளுடன் தற்போது வழங்கப்பட்ட தரவுகள் பெருமளவில் முரண்படுகின்றன. 2019-20 இல் 50.19 கோடி ரூபாயும், 2020-21 இல் 8.31 கோடி ரூபாயும் கணக்கில் முரண்பாடு உள்ளது.
இம்முகமை தொடங்கியதிலிருந்து சுமார் 100 வினாத்தாள் கசிவுகள் மற்றும் 50-க்கும் மேற் பட்ட மறுதேர்வுகள் நடந்துள்ள போதிலும், உண் மைகளை மூடிமறைக்க அரசு முற்படுகிறது.
நீட் முதல் நெட் வரை அனைத்துத் தேர்வு களையும் நாசமாக்கிய இந்த முறைகேடுகளால் 22 மாணவர்கள் உயிரை இழந்துள்ளனர்.
எனவே அமைச்சரின் ராஜினாமாவுடன் நின்று விடாமல், என்டிஏ எனும் தேசிய தேர்வு முக மையை முற்றிலும் கலைப்பதும், மாணவர்களை வஞ்சிக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ திரும்பப் பெறுவதுமே உண்மையான ஜன நாயக நீதியைப் பெற்றுத் தரும்.
ஒட்டுமொத்த கல்வித்துறையையும் சீரழித்து வரும் இந்த அமைப்புக்கு முட்டுக்கொடுக்கும் கார்ப்பரேட் மற்றும் காவி சக்திகளின் சதித்திட்டங்களை இளைய சமுதாயம் தொடர்ந்து முறியடிக்க வேண்டும்.
ஆழ்தூக்க அரசு!
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதுாக்கியுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகளை செய்யாமல், தமிழக குடிநீர் வாரியம் மெத்தனம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள், 14,141 பாசன ஏரிகள் உள்ளன. நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டிலும் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், ஏரிகள் வறண்டுள்ளன.
நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகளில், 59 அணைகள் வறண்டுள்ளன. மேலும், 16 அணைகளில் 25 முதல் 50 சதவீதம் மட்டுமே நீர் உள்ளது. பாசன ஏரிகளில் 3,489 வறண்டு கிடக்கிறது. மேலும், 6,158 ஏரிகள் வறண்டு விடும் நிலையை எட்டியுள்ளன. ஆறுகள், அணைகள், ஏரிகள் வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை, தமிழக குடிநீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது.
நீர்நிலைகள் வறண்டுள்ளதுடன், நிலத்தடி நீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வரவில்லை. பல மணி நேரம் மோட்டாரை இயக்குவதால், மின்சார செலவும் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில், குடிநீர் பற்றாக்குறை தலை துாக்கியுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
விருதுநகர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, துாத்துக்குடி, தஞ்சாவூர், நாமக்கல், பெரம்பலுார், மதுரை, சிவகங்கை, தர்மபுரி, கடலுார், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், குடிநீர் பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், நிலத்தடி நீர் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நீராதாரங்களின் நிலை விபரம், நீர்வளத்துறை வாயிலாக, தமிழக குடிநீர் வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடிநீர் ஆதாரத்திற்கான மாற்று திட்டத்தை மேற்கொள்ளாமல், தமிழக குடிநீர் வாரியம் மவுனம் காத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.





