அடுத்து எத்தனால் கட்கரி

 




E20 ஜனதா கட்சி’ 

 நிதின் கட்கரிக்கு ’வேட்டு’? 

பின்னணி என்ன?


நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக டெல்லியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ – காக்ரோச் ஜனதா கட்சி (CJP) டெல்லியில் தொடங்கிய போராட்டம் மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானின் பதவியையே பறித்தது.


”காக்ரோச்” வழியில் தற்போது ‘E20 ஜனதா கட்சி’ (E20 Janta Party) என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டு பேசுபொருளாகி இருக்கிறது.


இந்த கட்சியினர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ஆகியோரது ராஜினாமாவை கோருகின்றனர்.

ஒன்றுய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின், “எத்தனலாலில் பெட்ரோல் கலக்கும்” கொள்கைக்கு எதிராக உருவாகி இருக்கிறது இந்த E20 ஜனதா கட்சி.மத்திய அரசின் எத்தனால் கொள்கை

கரும்பு, மக்காச்சோளம், அரிசி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது ‘எத்தனால்’ (Ethanol). எத்தனாலை பெட்ரோலுடன் குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து வழங்குவது என்பதுதான் ஒன்றிய அரசின் கொள்கை.


இதன் பெயர் இபிபி திட்டம் (EBP – Ethanol Blended Petrol).

இதன்படி பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது 2013-14-ம் ஆண்டில் 1.5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. தற்போது 2025-26-ல் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.


அத்துடன் எத்தனால் உற்பத்தியால் கரும்பு மற்றும் மக்காச்சோளத்திற்கு மாற்றுச் சந்தை உருவாகிறது; இது விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது என்கிறது ஒன்றிய அரசு.

பெட்ரோல் பயன்பாட்டின் மூலமான கார்பன் உமிழ்வையும் எத்தனால் கட்டுப்படுத்துகிறது என்பதும் அரசின் வாதம்.

எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் பழைய வாகனங்களின் மைலேஜ் (Mileage) குறைகிறது. வாகனங்களில் என்ஜின் பாகங்கள், ரப்பர், பிளாஸ்டிக் குழாய்களில் தேய்மானம் ஏற்படுகிறது என்பது குற்றச்சாட்டு.

20% எத்தனால் கலந்த பெட்ரோலை மட்டுமே வாங்க வேண்டும் என நிர்பந்திக்காமல் குறைந்த அளவிலான எத்தனால் கலந்த பெட்ரோலை வாங்குவதற்கு நுகர்வோருக்கு உரிமை தேவை என்பதும் கோரிக்கை.

E20 ஜனதா கட்சி’ (E20 Janta Party) என்பது, மத்திய அரசின் E20 எத்தனால் கலப்பு பெட்ரோல் கொள்கைக்கு எதிரான கட்சி. காக்ரோச் ஜனதா கட்சி வழியைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள ‘ஆன்லைன்’ இயக்கம்.

நுகர்வோருக்கு எத்தனை சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை தேர்வு செய்ய வேண்டும் என்கிற உரிமையை கோருகிறது.

அதாவது புதிய வாகனங்களுக்கு E20; பழைய வாகனங்களுக்கு E10; விரும்பும் மக்களுக்குத் தூய பெட்ரோல் E0 தடையின்றி கிடைக்க வேண்டும் என்பது இதன் கோரிக்கை.தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த கட்சியினர் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் கொள்கையின் முகமாகக் கருதப்படும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி; பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரின் ராஜினாமாவை E20 ஜனதா கட்சி வலியுறுத்துகிறது.

எத்தனாலும் நிதின் கட்கரி குடும்பமும்

குறிப்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் குடும்பத்தினருக்கு சொந்தமாக மகாராஷ்டிராவில் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளை அவரது மகன்கள் நிர்வகித்து வருகின்றனர்.

சர்க்கரை ஆலைகளின் உபபொருட்களில் இருந்துதான் எத்தனால்தயாரிக்கப்படுகிறது.

எத்தனால் உற்பத்தித் தொழிலிலும் நிதின் கட்கரி குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குற்றச்சாட்டு.


ஆனால் நிதின் கட்கரியோ, ”எத்தனால் கொள்கைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே சர்க்கரை ஆலைகளை நாங்கள் நடத்தி வருகிறோம்; இந்தியாவின் மொத்த எத்தனால் உற்பத்தியில் எங்களது குடும்ப நிறுவனங்களின் பங்களிப்பு குறைவுதான்.


எங்களது குடும்பத்தின் மொத்த வணிகத்தில் எத்தனால் வெறும் 10 சதவீதம்தான்” என்கிறார். எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரத்தில் தமது குடும்பத்தினர் மீதான அவதூறுகளுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் நிதின் கட்காரி வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்த E20 ஜனதா கட்சியால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு புதிய நெருக்கடி உருவாகி உள்ளது.

பிகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டம் 

குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில்:

என்ன நடந்தது?

பிகாரில் NEET தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர் அமைப்புகள் மாநிலம் முழுவதும் "பிகார் பந்த்" போராட்டத்தை (ஜூலை 25) நடத்தின. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய சம்பவம்

  • சிய்வான் (Siwan) மாவட்டத்தில், ஒரு போலீஸ்காரர் AK-47 துப்பாக்கியுடன் சுடுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
  • இதையடுத்து அந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் (suspension) செய்யப்பட்டார்.
  • அவர் ஏன் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினார் என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

காயமடைந்தவர்கள்

சில ஊடகங்கள், 15 வயது சிறுவர் ஒருவர் கழுத்தில் குண்டு பாய்ந்து காயமடைந்ததாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. 

ஆனால், சில போலீஸ் அதிகாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டால் யாரும் காயமடையவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த விவரங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசியல் எதிர்வினை

  • எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்கள் மீது அதிகப்படியான வன்முறை பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி நடவடிக்கை கோரினார்.
  • இதற்கு பாஜக, அவரது குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது விசாரணையிலும் அரசியல் சர்ச்சையிலும் உள்ளது. அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகளுக்குப் பிறகே சம்பவத்தின் முழு உண்மை தெளிவாகும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை