🔹திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை இன்று சரிபார்க்கிறது தேர்தல் ஆணையம்.
திமுகவும் தமிழ்நாடும் தான் நீட் தேர்வுக்கு எதிராக முதல் குரலை எழுப்பியது -மக்களவையில் தயாநிதி மாறன்.
🔹மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல். ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதில் ஏமாற்றம் அளிப்பதாகவும் கருத்து.
🔹நெல்லை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதால் அதிர்ச்சி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனிச் சட்டம் இயற்ற அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்.
🔹பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு. 20 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் காயம்.
இரும்புக்கை மாயாவி
தமிழ் காமிக்ஸைப் புரட்டிப்போட்ட முத்து காமிக்ஸ்! தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக அது புகழ்பெற்றிருக்கிறது. இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்: தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர். # எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். # தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவி...



