கர்நாடகாவை உலுக்கும் எய்ட்ஸ்

🔹தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகம் மீண்டும் திட்டவட்டம். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு.🔹அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க புகார் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் இன்று விசாரணை. பதவி விலகிய 4 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்துகிறார் சபாநாயகர்.எத்தனை விசாரணை?🔹மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக அன்புமணி குற்றச்சாட்டு. காங்கிரஸ் தனித்து நின்று கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாது என்றும் விமர்சனம்.🔹கரூர் நெரிசலில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிய ஆணையை ரத்து செய்த விவகாரம். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு.🔹151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களைக் கைவிட்ட தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம். அரசின் மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகாதது ஏன் என்றும் கேள்வி.🔹பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்.





கர்நாடகாவை உலுக்கும் எய்ட்ஸ் !

 இளைஞர்களுக்கு HIV பரவியது எப்படி? 

கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் எய்ட்ஸ் தடுப்பு சங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு கல்லூரி மாணவர்களுக்கும் எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க ஒருங்கிணைந்த சுகாதார முகாம்களை நடத்த விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளன.இந்தியாவில் சமீபகாலமாக எச்.ஐ.வி. தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாநிலம் வாரியாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு பரிசோதனை நடத்தியது.


இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையின் படி, இந்தியாவிலேயே எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கையில் கர்நாடகா மாநிலம் தான் மூன்றாவது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் கர்நாடகா மாநிலத்தில் தற்போது சுமார் 2.60 லட்சம் பேர் எச்.ஐ.வி. தொற்றுடன் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களில் 2.05 லட்சம் பேர் ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ART) சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கபட்டு உள்ளது. அதே நேரத்தில் சுமார் 54,000 பேர் தங்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது குறித்து அறியாமல் இருப்பது சுகாதாரத்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் KSAPS வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி கர்நாடகாவில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.


இந்த வயது பிரிவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023-24ஆம் ஆண்டில் 44,500 ஆக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் 66,600 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதில் குறிப்பாக 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதில் சுமார் சுமார் 54,000 பேர் இன்னும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யாமல் இருப்பது தெரியவந்துள்ளது.


இதையடுத்து மாநிலஅரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனைக்கான ஒருங்கிணைந்த சுகாதார முகாம்களை நடத்த VTU மற்றும் கல்லூரிக் கல்வித்துறையிடம் KSAPS கோரிக்கை விடுத்துள்ளது.


மேலும் அனைத்து பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலும் எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் மத்திய கல்வி அமைச்சகமும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.


இளைஞர்களிடையே எச்.ஐ.வி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதது, பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு (ஊசி மூலம் போதை மருந்து செலுத்துதல்) போன்றவை இந்தத் தொற்று பரவுவதற்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

எச்.ஐ.வி. தொற்று கண்டறிய Mobilisation for AIDS Suraksha (MAS) திட்டம் திட்டத்தை கர்நாடகா அரசு கொண்டு வந்துள்ளது.

இதில் , உடல் ரீதியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு எச்.ஐ.வி. தொற்றுடன் இருப்பவர்களில் 95 சதவீதம் பேர் தங்களது நிலையை அறிந்துகொள்வதை உறுதி செய்வது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் , பின்னர் , தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்களை உரிய சிகிச்சை அளிக்கப்படும்.


மேலும், ‘Know Your HIV Status’ என்ற திட்டத்தின் கீழ், QR குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட ‘HIV Self-Risk Assessment Tool’ உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் தங்களது உடல்நிலை மற்றும் தொற்று ஏற்படும் அபாயம் குறித்து ஆரம்ப கட்டத்தில் தெரிந்துகொள்ள முடியும்.


இந்த டிஜிட்டல் வசதி மூலம் தனிநபர் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இந்த வார இறுதி வரை மழை அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) கணித்துள்ளது. 

சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக பதிவாகக்கூடும். 

ஆகஸ்ட் 4 வரை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இந்த மழைப் பொழிவு, மாநிலத்தின் உள் மாவட்டங்களில் நிலவி வந்த கடுமையான வெப்பத்திலிருந்து மக்களுக்கு நிம்மதியை அளிக்கும்.

புதன்கிழமை அன்று மதுரையில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 37.8 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 37.2 டிகிரி செல்சியஸும் பதிவாகின.

புதன்கிழமை மாலை வேளையில் தர்மபுரி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.இன்று (வியாழக் கிழமை) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் கன்னியாகுமரி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை பரவக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை வரை, வட கடலோர தமிழகத்தில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மழைக் காலத்தில் மணிநேரத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். கடலோர மாவட்டங்களில் கடல் காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதே தமிழகத்தில் மழை பொழிவு அதிகரிப்பதற்குக் காரணம் என மண்டல வானிலை முன்னறிவிப்பு மையத் தலைவர் வி.ஆர். துரை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் வெப்பநிலை குறையும். 

மேலும், ஒடிசா அருகே நிலவும் வானிலை அமைப்புடன் தொடர்புடைய காற்று குவிதல் காரணமாகக் கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு இதுவரை 20% மழைப் பற்றாக்குறையைச் சந்தித்துள்ள நிலையில், இந்த மழைப்பொழிவு நிலுவையில் உள்ள பற்றாக்குறையைப் போக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை