கூட்ணிக்கு என்னப் பெயர்?
வைகோ கைது செய்யப்படுவாரா ? முதல்வர் விஜய் மீது FIR பதிவு செய்யப்படுமா ?ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்க பேரம்பேசியதாகக் கூறி ஒருசிலரை கைதுசெய்ததோடு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு.
ஊத்தங்கரை எம்.எல்.ஏ ராஜினாமாவும் செய்யவில்லை, தவெக ஆட்சிக்கு எதிராகவும் திரும்பவில்லை. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மீது அவதூறு பரப்பும் ஒரே நோக்கில் செயல்படுகிறது தவெக.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்.எல்.ஏ-வான மன்னார்குடி எஸ்.காம்ராஜ் தற்போது தவெக கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரிடம் டீல் பேசி பதவியை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் தவெகவினர்.
இதுபோக, திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுகவினர் எம்எல்ஏக்கள் இருவரை 'ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்' என தமிழ்நாடு முதல்வர் விஜய் பேசியதாக வைகோ பட்டவர்த்தனமாக பேசியிருக்கிறார். அதேநேரம், 'எங்கள் எம்எல்ஏக்களை நானே ராஜினாமா செய்யச் சொன்னேன்' என்றும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் வைகோ.
திமுக முக்கிய பிரமுகர்கள்மீது அவதூறு பரப்பு துடிக்கும் காவல்துறை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை எப்போது கைது செய்யும்... ராஜினாமா செய்யச் சொன்ன முதல்வர் விஜய் மீது எப்போது எஃ.ஐ.ஆர் பதிவு செய்யப் போகிறது?புயல் சின்னம்?
வடக்கு ஒடிஷா கடற்கரையை ஒட்டி புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு வங்கக்கடலில் உருவாகும் முதல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுவாகும். இந்தத் தாழ்வு நிலையானது அடுத்த 2 முதல் 3 நாட்களில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் கனமழைக்கான வாய்ப்புகள் குறைவு என்று கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
கடல் பகுதிகளைப் பொறுத்தவரை, வங்கக்கடலின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும்.
அண்டப் புளுகன்
ஆதவ்!
3 மாநிலங்களில் காலியாக இருக்கும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 30ம் தேதி நடக்கிறது.
அதேநேரத்தில் தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
மத்திய பிரதேசத்தின் தாட்டியா தொகுதி, பீஹார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி, குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று பீஹார், குஜராத், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஜூலை 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி ஆகஸ்ட் 3ம்தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன.
இந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.
இது குறித்து தகவல்களை தேர்தல் கமிஷனுக்கு சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னமும் சிலர், பதவி விலபினப்பின் மொத்ததாக நடத்தலாம் என தேர்தல் ஆணையம் எண்ணியிருக்கலாம்.ஏன் வெட்டிச் செலவு?





