தாமதம் ஏன்?
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.
இதற்கான பட்டமளிப்பு விழாவிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேரனை வாழ்த்தினார். அதன் பிறகு லண்டனில் ஓய்வெடுத்து வந்தார்.
மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்புகிறார்.
காலை 8 மணிக்கு அவர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்புக்கு தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
காலை 7 மணி முதல் விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரள தொடங்கினார்கள்.
சிறிய மேடை ஒன்று அமைத்து அதில் நின்று தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக மேடை அமைப்பதற்கு பலகைகள் கொண்டு வரப்பட்டன.
ஆனால் மேடை அமைக்க தமிழ்நாடு காவ்துறையினர் அனுமதிக்கவில்லை.
தாரை-தப்பட்டை போன்ற இசைக் கருவிகளுடன் வந்த கலைஞர்கள் வாத்தியங்களை வாசிக்க தொடங்கினார்கள்.
அதற்கும் மு.க.ஸ்டாலின் வரும்போது வாசிக்க காவல்துறை கட்டுப்பாடு விதித்தனர். இதனால் இசைப்பது நிறுத்தப்பட்டது.
இந்த களேபரம் நடந்து கொண்டிருந்தபோது மு.க.ஸ்டாலின் வரும் விமானம் லண்டனில் இருந்து புறப்படுவது தாமதம் ஆனது.
எனவே இன்று இரவு 8 மணிக்குதான் அவர் சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் விமான நிலையத்தில் திரண்டு இருந்த கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், த.மோ.அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் அன்பகம் கலை, தாயகம் கவி, எம்.கிருஷ்ணமூர்த்தி உள்பட திரண்டு இருந்த நிர்வாகிகள், கட்சியினரை திரும்பி செல்லும்படியும், இரவு வருமாறும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தொண்டர்கள. அனைவரும் கலைந்து சென்றனர்.அதிகரித்த மின்கட்டணம்.!
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மின் நுகர்வோருக்கு அதிக மின் கட்டணம் வந்திருப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளது.
அதாவது, தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம் குறைவாக இருந்ததாகவும். த.வெ.க ஆட்சியில் அதே மின் கட்டணம் இரு மடங்கு அதிகரித்ததாகவும் பல புகார்கள் எழுந்தது.
தேர்தல் வாக்குறுதியாக வீட்டு மின் பயன்பாட்டு நுகர்வோருக்கு மாத அடிப்படையில் மின் கட்டண கணக்கீடு மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் என த.வெ.க அறிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் விஜய், 500 யூனிட் கீழ் பயன்படுத்தப்படும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என கையெழுத்திட்டார். இது பெரும் விமர்சனத்திற்குள்ளான நிலையில்,
பழையப்படி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்வதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பலரும் தங்களது வீட்டு மின் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்திருப்பதாக அதிப்தி தெரிவித்தனர்.
200 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்துவிட்டு, மின் கட்டணத்தை அரசு அமைதியாக உயர்த்திவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைத்தது. இந்நிலையில், மின் கட்டணம் அதிகரித்திருப்பது குறித்து தமிழ்நாடு மின்வாரிய நெல்லை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”மின்சார துறையின் சில பிரிவுகளில் நடைபெறும் அசாதாரணமான பில்லிங் முறையால் பொதுமக்களுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.
மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறையில் குறைபாடுகளால் சில இடங்களில் தவறான மற்றும் அதிக கட்டணம் பதிவாகியுள்ளது. என்றார்.
போலீஸ் ராஜ்யம் நடத்தும் விஜய்!
முதலமைச்சர் விஜய் கையில் லத்தி இல்லையே தவிர போலீஸ் ஆட்சியைத்தான் அவர் நடத்தி வருகிறார். எதிர்க் கருத்துச் சொல்கிறவர்கள் அனைவரையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைப்பதில் குறியாக இருக்கிறது குதிரை பேர அரசு.
100 கோடி ரூபாய் மதிப்பிலான பழனி கோவில் சொத்தை 2 கோடிக்கு தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு, மாட்டிக் கொண்டதும் பேய்முழி முழிக்கிறார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ். அதுகுறித்து சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்கிறவர்களை, 'வழக்குப் போட்டுவிடுவேன்' என்றும் மிரட்டுகிறார்.
பழனி கோயில் நிலத்தை மோசடியாக விற்ற விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினார் என்று வினோத் சூர்யா குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வினோத் சூர்யா குமார் மீது பொது அமைதியைக் குலைப்பது, கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவது என விஜய் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
சாதாரணமாக ஒரு விமர்சனத்தை அமைச்சர் மீது வைத்ததற்காக அவதூறு வழக்கு எனப் பதிவு செய்யாமல் கலவரத்தைத் தூண்டுவதாக வழக்குப் போடுகிறார்கள். இதனைத் தான் போலீஸ் ராஜ்யம் என்கிறோம்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வினோத் சூர்யா குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, “சமூக வலைதளப் பதிவுக்கு அவதூறு வழக்குதானே தொடர முடியும்?” என்று மிகச் சரியான கேள்வியை எழுப்பினார்.
தவறான பிரிவில் வழக்குப்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு அரசுக்கு அறிவுறுத்துங்கள் என்று அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் நீதிபதி அறிவுறுத்தினார். வழக்கு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கு மாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. தன் மீதான விமர்சனங்களைத் தாங்க முடியாமல் இதுபோல மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளது விஜய் அரசு.

விஜய் அரசின் போலீஸ் ராஜ்யத்துக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.
* யூடியூப்பில் விஜய் அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார் என்று ஜூன் 8 ஆம் தேதியன்று மதுரையில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தது.
* கிருஷ்ணகிரி மாவட்டம் - ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் அன்பானந்தம் (28). தி.மு.க.வின் ஜென்-சி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக முதல்வர் விஜய், நடிகை த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடியது குறித்து விமர்சனம் செய்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். உடனே இவரைத் தேடி போலீஸ் வந்துவிட்டது.
இதை அறிந்த அன்பானந்தம் தேன்கனிக்கோட்டை நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் முன்னிலையில் சரணடைந்தார்.
அவரை விசாரிக்க நீதிபதி அனுமதித்தார். ஒரு நாள் போலீஸ் விசாரணையில் இருந்த அன்பானந்தத்தை நீதிபதியே நிபந்தனை ஜாமீனில் விடுவித்துவிட்டார்.
முன்னாள் அமைச்சர், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை படுத்திய பாடு நாடறியும். முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறாகப் பேசியதாக ஆத்தூர் காவல்துறையினரால் தூத்துக்குடி மாவட்டம் - ஆத்தூரில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். கைது செய்யப்பட்ட அன்றே அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
‘பவுடர்” அடித்து மாட்டிக் கொண்டார் அமைச்சர் சரத்குமார். அந்த வீடியோவை வெளியிட்டார் என்று தாம்பரத்தைச் சேர்ந்த சரண் ஜெயராமன் தேடப்பட்டார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று பேட்டியே கொடுத்தார் சரண் ஜெயராமன். அவரை வேறு ஒரு வழக்கில் திடீரென கொளத்தூர் போலீஸார் கைது செய்தார்கள்.

வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்ற நடுவர், போலீசார் சட்டப்படியான சரியான நடைமுறைகளைப் (legal process) பின்பற்றாமல் இந்தக் கைதை மேற்கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.
காவல்துறை தரப்பின் ரிமாண்ட் (Remand) கோரிக் கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், சரண் ஜெயராமனின் கைதை உடனடி யாக ரத்து செய்து (Cancel) அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. எந்தளவுக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது நடவடிக்கைகள் விஜய் அரசால் செய்யப்படுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.
'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் விவாதங்கள் நடத்தும் ஊடகவியலாளர் விஜயனை, விசாரணை என்ற பெயரால் மிரட்டி அனுப்பி இருக்கிறார்கள்.
குதிரை பேரத்தால் உருவான விஜய் ஆட்சி, மற்றவர்கள் மீது குதிரை பேர குற்றச்சாட்டை வைத்து திசை திருப்பி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவர், ஊடகவியலாளர் விஜயனிடம் பேசியதாகச்சொல்லி, அவரை திருவல்லிக்கேணி காவல்துறை விசாரணைக்கு அழைத்து மிரட்டி உள்ளனர்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றப் பொதுச்செயலாளர் அசீப் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், "விஜயனை இரவு 10 - 12 மணி வரையும் விசாரணை செய்துள்ளார்கள். அவர் வீட்டிற்குச் சென்றவுடன் மீண்டும் 2 மணிக்கு வரச் சொல்லி விசாரணை செய்துள்ளனர்.
மீண்டும் காலை 11 மணிக்கு வர வைத்து 11 - 5 மணி வரை விசாரணை என்று அலைக்கழித்துள்ளனர். அப்போது அவரிடம் இருந்து மொபைல் போனையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த விசாரணையில், 'யார் பெயரையாவது சொல்லுங்கள்' என்று தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அடிப்படை உரிமைக்கும், கருத்துரிமைக்கும் எதிரான செயல்" என அவர் சொல்லி இருக்கிறார்.
குற்றங்கள் அதிகமாகிவிட்டன. த.வெ.க. நிர்வாகிகள் செய்யும் குற்றச் செயல்களும் அதிகமாகிவிட்டன. ஊழல்கள் தொடங்கிவிட்டன.
ஒவ்வொரு அமைச்சராக அம்பலப்பட்டு வருகிறார்கள். இவை அனைத்தையும் மறைக்கவே போலீஸ் பாணியை கையில் எடுத்து அராஜக ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் விஜய்.