தூத்துக்குடியில் மற்றொரு மரணம்!

தொடரும் லாக்கப் மரணங்கள்..!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காவல் நிலைய மரணங்கள் அதிகரித்து வருகிறது. 

இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் மது விற்பனை செய்ததாக கூறி அருணாச்சலம் (வயது 26] காவல் துறையினர் விசாரணைக்காக கடந்து 17 ஆம் தேதி காலை கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த போது இளைஞர் அருணாச்சலத்திற்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் உடனடியாக சிகிச்சை அளிக்க தூத்துக்குடியில் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கேட்ட உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 மேலும் காவல்துறையினர் தாக்கியதில் தான் தன்னுடைய மகன் அருணாச்சலம் உயிரிழந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

மேலும் அருணாச்சலத்தின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய காவல்துறையினரை இது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அருணாச்சலம் காவல்துறையினர் தன்னை தாக்கியதாக வாக்குமூலம் அளித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினரை கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என அருணாச்சலத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின்,கனிமொழி, ,,எடப்பாடி பழனிசாமி,நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன்  உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் நேரில் வந்து உடலை பார்வையிட்டு புடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் காவல்துறையினர் தாக்கியதில் அருணாச்சலம் உயிரிழந்தாரா? காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தூத்துக்குடியில் டிஎஸ்பி விளக்கம் அளித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக கிடைத்த தகவலின் பேரில், அருணாச்சலம் என்பவர் 120 மதுபாட்டில்களுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டபோது அவர் உடல்நலக்குறைவு ஏதுமின்றி நலமாக இருந்ததாகவும், பின்னர் விசாரணைக்காக தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறினார்.

காவல் நிலையத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே அருணாச்சலம் திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும், உடனடியாக அவருக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் டிஎஸ்பி தெரிவித்தார்.இந்த சம்பவம் முழுவதும் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவத்தின் உண்மை நிலை குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகே அடுத்தகட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்றும் டிஎஸ்பி சுனில் தெரிவித்தார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்ததாக  இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

"தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ரீல்ஸ் ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை