தனது முறைகேடு ஊழலை மறைக்க...

அமைச்சர் நிர்மல் குமார் தனது ஊழல் முறைகேடுகளை மறைக்க என் மீது பழி சுமத்துகிறார்” - பி.மூர்த்தி
“தனது துறைகளில் நடக்கும் ஊழல், முறைகேடுகளை மறைப்பதற்காக அமைச்சர் நிர்மல் குமார் என் மீது அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்,” என முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரையில் முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கோயில் நிலத்தை தனி நபர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாதபடி ஆவணங்களில் உரிய குறிப்புகள் இடம்பெற்று இருக்கும்.
கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு பாதுகாக்கப்பட்ட பழநி கோயில் நிலம், தவெக ஆட்சியில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் யார் இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பழநி கோயில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்தது, தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள புகார், 200 யூனிட் இலவசம் என அறிவித்துவிட்டு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை ஏமாற்றியது
உள்ளிட்ட தவெக அரசில் நடந்த முறைகேடுகள் மற்றும் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு உரிய பதிலை அமைச்சர் நிர்மல் குமார் அளிப்பதில்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் துறைகள் பற்றியும், கூட்டணி கட்சிகளின் அரசியல் குறித்து பேசி வருகிறார். நான் 48 ஆண்டுகளாக ஒரே கட்சியில் இருந்து மக்கள் பணியாற்றி வருகிறேன்.
நிர்மல் குமார் அதிமுக, ஆர்எஸ்எஸ், பாஜக என பல இடங்களில் இருந்தவர். அப்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அவர் என்ன பேசினார் என எல்லோருக்கும் தெரியும்.
சட்டம் மற்றும் மின்சார துறைகளில் நடக்கும் முறைகேடுகளை மறைக்க என்னை பற்றி தொடர்ந்து அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை அமைச்சர் நிர்மல் குமார் பரப்பி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 589 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் ஏஜென்ட்டை நியநித்து 20 சதவீதம் கமிஷன் பெற்றதாக பொய்யான குற்றாட்டுகளை முன்வைக்கிறார்.
எனது ஐந்தாண்டு கால பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பதவிக்காலத்தில் ரூ.94 ஆயிரம் கோடியாக இருந்த அரசின் வருவாயை ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்த்தி காட்டி உள்ளேன்.
தனிப்பட்ட தேவைகளுக்கோ, சிபாரிசு அடிப்படையிலோ எந்தவொரு பத்திரப்பதிவு அலுவலரிடம் போனில் கூட பேசியது இல்லை.
எனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக ஒரு பத்திரமாவது பதிவு செய்ததாக ஆதாரத்துடன் தெரிவிக்க முடியுமா.
சிலைகளை உடைக்கலாம், சிந்தனையை முடியுமா?தத்துவத்தை விவாதங்களால் எதிர்கொள்ளத் திராணியற்ற வகுப்புவாதப் பாசிசக் கும்பல், தங்க ளது இயலாமையைத் தீர்த்துக் கொள்ள மாமேதை களின் சிலைகளைத் தகர்க்கும் அராஜகப் பாதை யைத் தேர்ந்தெடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் ராணிகஞ்ச் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், ராகுல் சாங்கிருத்தியாயனின் நூற்றாண்டு நிறை வை முன்னிட்டு 1994-ல் நிறுவிய ஒன்பது அடி உயர சிலையை இந்தக் கயவர்கள் உடைத்தெறிந்தது, ஜனநாயக விழுமியங்கள் மீதான படுபாதக மான தாக்குதலாகும்.
ராகுல்ஜி போன்ற அறிவு ஜீவிகளின் தத்துவப் பிடிப்பு, மூடநம்பிக்கைகளை யும் சுரண்டல் சித்தாந்தங்களையும் வேரறுக்கக் கூடியவை என்பதால், அச்சமடைந்த கும்பல் இத்தகைய இழிசெயலில் ஈடுபட்டுள்ளது.
30 மொழிகளில் புலமை பெற்று, 140-க்கும் மேற் பட்ட நூல்களைத் தந்த ராகுல் சாங்கிருத்தி யாயன், மதவாதத்தின் போலி முகத்திரையைக் கிழித்தெறிந்தவர். அவரது ‘வால்கா முதல் கங்கை வரை’ எனும் காவியம், யாக்ஞவல்கியன் போன் றோர் பிரும்ம தத்துவம் என்ற மாயையை உரு வாக்கி, மக்களை அடிமைப்படுத்திய புரட்டை வர லாற்றுப்பூர்வமாக அம்பலப்படுத்தியது.
உழைக் கும் மக்கள் புரட்சிகரமான பொதுவுடைமைச் சிந்தனையைப் பெற்று விழிப்புணர்வு அடை வதைப் பொறுக்க முடியாத சக்திகளே, லெனின் சிலையை திரிபுராவில் தகர்த்ததைப் போல, தற் போது ராகுல்ஜியின் சிலையை இலக்கு வைத்துள்ளன.மசூதியைத் தகர்த்து, ராமனின் பெயரால் கொள்ளையடித்துத் திரியும் இந்த வகுப்பு வாதப் பதர்களுக்கு, தத்துவத்தின் கூர்மை என்றும் புரியாது. ராகுல்ஜி சிலை என்பது வெறும் கல் அல்ல, அது உழைக்கும் மக்களின் அறிவுச் சொத்து; உழைப்பாளி வர்க்கத்தின் உணர்வுப்பூர்வ மான அடையாளம்.
சிலையை உடைப்பதன் மூலம் ராகுல்ஜியின் பொதுவுடைமைச் சிந்தனை யின் வேரை அவர்களால் ஒருபோதும் தீண்ட முடி யாது. வரலாறு நெடுகிலும் ஒடுக்குமுறைக்கு எதி ராகப் போராடிய மாமேதைகளின் சிலைகளைத் தகர்ப்பது, அந்தப் பாசிசக் கும்பலின் ஆண வத்தையே காட்டுகிறது.
இது போன்ற வன்முறை கள் மூலம் வரலாற்றை மறைக்க நினைக்கும் இவர்களின் முயற்சி எப்போதும் பலிக்காது
தனது தந்தை ராகுல்ஜியின் சிலையழிப்பு குறித்து அவரது மகன் பேராசிரியர் ஜெட்டா சாங்கிருத்தியாயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு நன்கு திட்டமிடப்பட்ட சதி என்று அம்பலப்படுத்தியுள்ளார்.
இது கிழக்கு நிலக்கரிச் சுரங்கங்களை கார்ப்பரேட் முதலைகளிடம் ஒப்படைக்கத் துடிக்கும் காவி சக்திகளின் சதியின் ஒரு பகுதியாகும். இக்கொடுமையைச் செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து வலுவான கண்டனக் குரலை எழுப்ப வேண்டும்.
மாமேதை ராகுல் சாங்கி ருத்தியாயனின் அறிவார்ந்த சுடர் எப்போதும் அணையாது; நிலைபெற்று விட்ட நியாயங்களை, நிலைகொள்ளாது தடுமாறும் தத்துவங்களால் ஒரு போதும் அழித்து விட முடியாது.
பெட்ரோல் விலை குறையுமா?
சவூதி அரேபியா 26 வருஷத்துல இல்லாத அளவு விலை குறைச்சிருக்கு* - ஆனா இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உடனே குறையும்னு சொல்ல முடியாது.
சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் ஆசியாவுக்கு விற்கும் *அரபு லைட் கச்சா எண்ணெய் விலையை ஆகஸ்ட் 2026-க்கு பேரலுக்கு $11 குறைத்தது*. இது 26 வருஷத்துல மிகப்பெரிய மாதாந்திர குறைப்பு. ஜூலைக்கும் $6 குறைச்சிருந்தாங்க.
1. *ஹோர்முஸ் ஜலசந்தி திறப்பு* - ஜூன் மாசம் US-ஈரான் சமாதான ஒப்பந்தத்துக்கு பிறகு எண்ணெய் கப்பல் போக்குவரத்து சகஜமானது
2. *சப்ளை அதிகம்* - OPEC+ ஆகஸ்ட்டில் உற்பத்தியை 188,000 பேரல்/நாள் அதிகரிக்க ஒப்புக்கொண்டது
3. *ரஷ்யா போட்டி* - ரஷ்யா மலிவு விலையில் ஆசியாவுக்கு எண்ணெய் விற்பதால் சவூதி மார்கெட் ஷேர் இழக்க விரும்பவில்லை.
இந்தியாவுக்கு என்ன பலன்?
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதி செய்யுது. சவூதி குறைப்பு நேரடியா பலன் தரும்:
1. *இறக்குமதி பில் குறையும்* - கரன்ட் அக்கவுண்ட் டெஃபிசிட் குறையும், ரூபாய் வலுப்பெறும்2. *எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம்* - IOC, BPCL, HPCL மாதிரி OMC-க்கள் முன்னாடி ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முடியும்
3. *பணவீக்கம் குறையும்* - போக்குவரத்து, விமானம், லாஜிஸ்டிக்ஸ் செலவு குறையும்
ஆனா பெட்ரோல், டீசல் விலை உடனே குறையுமா?
*இப்போதைக்கு இல்லை*.
காரணம்:
1. *OMC-க்கள் நஷ்டத்துல இருக்காங்க* - கடந்த சில மாசமா சர்வதேச விலை அதிகமா இருந்ததால பெட்ரோல், டீசலை விலைக்கு கீழ வித்தாங்க. இதனால ₹74,781 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கு. இப்போ கிடைக்கும் லாபத்துல அதை ஈடுகட்டுறாங்க.
2. *தனியார் நிறுவனங்கள் மட்டும் குறைச்சாங்க* - ஜூலை 1-ல இருந்து Nayara Energy பெட்ரோல் ₹5, டீசல் ₹3 குறைச்சது. ஆனா IOC, BPCL, HPCL இன்னும் குறைக்கல
எப்போ குறைய வாய்பு?
நிபுணர்கள் சொல்றதுபடி, *2026 இரண்டாம் பாதியில* குறைய வாய்பிருக்கு.
அதுக்கு 2 நிபந்தனை:
1. கச்சா எண்ணெய் $70-75 பேரலுக்கு கீழ நீடிக்கணும்
2. OMC-க்களின் நஷ்டம் கணிசமா குறையணும்
இப்போ பிரெண்ட் க்ரூட் $72 சுத்தி இருக்கு. இது $75-க்கு கீழ போனா வாய்பு அதிகம்.
*சுருக்கமா*:
சவூதி அதிரடி விலை குறைப்பு இந்தியாவுக்கு நல்ல செய்தி தான்.
ஆனா அது முதல்ல அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட போகுது.
உடனே பம்பில் விலை குறையும்னு கனவு வேண்டாம்.
குறைந்தது 2-3 மாசம் ஆகும்.



