மாநில மொழிக்குஎதிரான அத்துமீறல்!

 தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடமா?

. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன் றாவது இடத்திற்கு தள்ளியிருக்கும், ஆளுநர் அர்லேகரின் அடாவடி.


திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா, ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது.

இந்நிகழ் வில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்கிறார். எனவே, இந்நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதம், மூன் றாவதாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் அலு வலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள் ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரி வித்துள்ளதை ஏற்க முடியாது. இது மாநில உரிமை மற்றும் மாநில மொழி யின் மீது நடைபெறுகிற அத்துமீறலா கும் 

ஆளுநர் தமிழ்நாடு கொடுக்கின்ற சம்பளம் வாங்கும் ஒன்றிய அரசால் நியமனம் செய்யப்பட்டவர் மட்டுமே..

மனோன்மணியம் சுந்தரனாருக்கு இழைக்கப்படும் அவமதிப்பு.


ஆளுநர் பங்கேற்கிறார் என்பதற்கா கவே ஒரு மாநிலத்தின் பாடலை பின் வரி சைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல.


மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரு பல்கலைக்கழகத்தில் மாநிலப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு ஆகும். இந் நிலையில் ஆளுநர் அலுவலக சுற்ற றிக்கை விரும்பத்தகாத சூழ்நிலை களை ஏற்படுத்தியுள்ளது.

இது அநீதி யானது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் ஒரு பல்கலைக்கழ கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாவது இடம் என்பது அவருக்கு இழைக்கப்படுகிற அவமரியாதை யாகும்.

மேலும்,’வந்தே மாதரம்’ பாடலின் சில வரிகள் பாடப்படுவது அரசியல மைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆட்சேபணையற்ற வரிகள் மட்டுமே பாடப்பட வேண்டும்.

ஆளுநரின் சுற்ற றிக்கை திரும்பபெறப்பட வேண்டும். ஆளுநர் அலுவலக சுற்றறிக்கையின் படி நடக்காவிட்டால் தன்மீது நட வடிக்கை வரும் என்று துணைவேந்தர் கூறியிருப்பதிலிருந்தே, மாநில நிர்வா கத்தில் ஆளுநர் தேவையற்ற தலையீடு கள் செய்து மிரட்டலில் ஈடுபடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே, எவ்வித நிபந்தனைகளுக் கும் அடிபணியாமல் தமிழ்த்தாய் வாழ்த்து, முதலில் பாடப்படுவதை தமிழ் நாடு அரசு உறுதி செய்திட வேண்டும்.


அதன் பிறகு தேசிய கீதமும், மூன்றா வதாக வந்தே மாதரத்தின் ஆட்சேப ணையற்ற வரிகள் மட்டுமே பாடப்படும் வகையில் பட்டமளிப்பு விழா நடைபெற வேண்டுமென்றும் இந்த அடிப்படை யில் பட்டமளிப்பு விழா நடைபெறு வதை மாநில அரசு உறுதி செய்திட வேண்டும் .


மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச் சுதந்திரத் துக்கும், தனிமனித உரிமைக்கும், பன் முகப் பாரம்பரியத்துக்கும் எதிரான ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட வேண்டுமென்ற ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டாய சுற்றறிக்கை யை திரும்பப் பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

கேவலத்திலும்!

 மகா கேவலம்!ஓடாத படத்தை உட்கார வைத்து பார்க்கச் சொல்வதால் வேதனை தாங்காமல் அழுகிறார்கள் அமைச்சர்கள்.

டெல்லி முதல் சென்னை வரை நீட் தேர்வுக்கு எதிராக மகத்தான போராட்டங்கள் நடந்து வரும் போது, தனது படம் வெளியாவது மட்டும்தான் தனக்கு முக்கியம் என்று முதலமைச்சர் விஜய் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

தினமும் பாலியல் வன்கொடுமைகள் – போதைப் பொருட்கள் நடமாட்டம் – கொலைகள் – கொள்ளைகள் – கனிம வளங்கள் திருட்டு – ஊழல்கள் – லஞ்சம் வாங்கி த.வெ.க. நிர்வாகிகள் மாட்டிக் கொள்வது – கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவது – அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் – டாஸ்மாக் கடைகளை மூடுவதைப் போல மூடி ‘எலைட் பார்’களாகத் திறந்தது – காவல் நிலைய மரணங்கள் – ஆணவக் கொலைகள் – தினமும் தலைமைச் செயலகம் வந்து தூங்கிவிட்டுச் செல்வது – எந்த அரசாணைகளையும் போடாமல் பழைய திட்டங்களின் பெயரை மட்டும் நீக்குவது என, மக்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு அரசாங்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய், இதனை மறைக்கவே தனது படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.ஆறு சிலிண்டர் இலவசம் என்று சொன்னதை மறக்க வேண்டாமா? மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் என்பதை மறக்க வேண்டாமா? திருமணத்தின்போது 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை என மாமன் சீரை மறக்க வைக்க வேண்டாமா? மூத்த குடிமக்களுக்கு மாதம் 3000 என்பது நினைவுக்கு வரக்கூடாது. 

வேலை இல்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய் என்று சொன்னது நினைவுக்கு வரக்கூடாது. அதற்காக மீண்டும் சினிமா போதையை ஊட்டித் தூங்க வைக்கப் பார்க்கிறார்.

‘ஜனநாயகன்’ என்ற சொல்லைச் சொல்வதற்கு அவருக்கு யோக்கியதை இருக்கிறதா? ஜனநாயகப் பூர்வமாகப் போராடும் இளைஞர்கள், மாணவர்கள், மாணவியரை லத்தியாலும் குண்டாந்தடியாலும் தாக்கித் தரதரவென இழுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறது விஜய் போலீஸ்.

 சாலையில் திரண்டால் கைது என்பதைத் தாண்டி, கல்லூரிகளுக்குள் – கல்லூரி விடுதிக்குள் சென்று மாணவர்களைக் கைது செய்கிறது விஜய் போலீஸ். டெல்லியைப் போலவே ‘நேம் போர்டு’களை எடுத்து விட்டு வந்து போலீஸார் அராஜகம் செய்கிறார்கள். போராடும் உரிமையைக்கூட பறித்துவிட்ட விஜய்க்கு ‘ஜனநாயகன்’ என்ற பெயர் ஒரு கேடா?

அரசாங்கத்தைப் பற்றி, முதலமைச்சரைப் பற்றி, அமைச்சர்கள் பற்றி சிறு விமர்சனம் செய்தாலே உடனே கைது. ‘’அரசை, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றம் ஆகாது.

 சமூகத்துக்கு இடையிலான பகை, வெறுப்பை விதைப்பதாகக் கூற முடியாது’’ என்று விஜய் தலையில் கொட்டி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

100 கோடி ரூபாய் மதிப்பிலான பழனி கோவில் சொத்தை 2 கோடி ரூபாய்க்கு தனியாருக்குத் தாரை வார்த்த அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷை விமர்சித்துப் பதிவு போட்ட வினோத் சூர்யா என்பவரைக் கைது செய்தார்கள்.

 அவரைப் பிணையில் விடுதலை செய்யச் சொன்ன உயர்நீதிமன்றம்தான் இத்தகைய அறிவுரையைக் கூறியுள்ளது. யார் பதிவு போட்டாலும் கைது செய்யும் விஜய், ‘ஜனநாயகன்’ என்ற சொல்லை உச்சரிக்கலாமா?

தேர்தலுக்கு முன்னதாக இணையத்தில் அவர்களாகவே படத்தை வெளியில் விடுகிறார்கள். வெளியில் யாரோ விட்டு சதி செய்ததாக ஒப்பாரி வைக்கிறார்கள். இதற்குக் காரணம் என்று ஒருவர் கைது செய்யப்படுகிறார். 

விஜய் கையில் ஆட்சி வந்ததும் அந்த நபர் விடுதலை செய்யப்படுகிறார். படத்தின் தயாரிப்பாளருக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதியாக டெல்லியில் பதவி தரப்படுகிறது. படம் மீண்டும் வெளியாகிறது.வாக்களித்த ரசிகனுக்கு தனது கடைசிப் படத்தில் கூட நன்மை செய்தாரா என்றால் இல்லை. 200 ரூபாய் டிக்கெட் 2000 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டுள்ளது.

 பட்டப்பகலில் முதலமைச்சர் பெயரைச் சொல்லி ‘கொள்ளையோ கொள்ளை’ நடந்துள்ளது. சில இடங்களில் திரையரங்குகளிலேயே 500க்கும் 600க்கும் விற்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தைக் கையில் வைத்துள்ள விஜய் தனது ரசிகர்களின் பாக்கெட்டுகளையே சூறையாடி இருக்கிறார். ‘ஆன்லைனில் டிக்கெட்டுகள் இருப்பதுபோலக் காண்பித்தாலும் டிக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை’ என்றும் சில ஊர்களில் புகார்கள் வந்துள்ளன.

“டிக்கெட்டுக்கு அதிக விலை கேட்டால் உங்க அண்ணனிடம் சொல்லுங்கள் என்னும் குரல் ஏன் இன்னும் வரவில்லை?’’ என்று எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கேட்டுள்ளார். ஊழலை ஒழிக்ச்சொல்பவரே தன்சினிமா டிக்கெட் விற்பனையில் ஊழல் செய்ய வற்புறுத்துகிறார்.

தனது தொழிலில், தனது படத்தில், தனது ரசிகர்களுக்குத் துரோகம் இழைத்திருக்கிறார் விஜய். தனது கடைசிப் படத்தில்கூட துளி நன்மையும் செய்யவில்லை விஜய்.

ஓடாத படத்தைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழ்நாடு அமைச்சரவையும் தியேட்டருக்கு ஓடி இருக்கிறது. தலைமைச் செயலகமே வெறிச்சோடியது. தாங்கள் படம் பார்க்கும் காட்சியை தாங்களே எடுத்துப் போட்டு சல்லித்தனங்கள் நடக்கிறது. 

ஒரு அமைச்சர் அழுகிறார். அதை வீடியோவாக்கிப் போடுகிறார். அதைப் பார்த்து அனைத்து அமைச்சர்களும் அழுது ‘மீம்ஸ்’ போடுகிறார்கள். 

முக்கியச் சாலைகளில் ஆட்கள் நடமாட முடியவில்லை. வாகனங்கள் செல்ல முடியவில்லை.

விஜய் என்ற தனிமனிதனின் விளம்பர வெறிக்காக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் தியேட்டராக மாற்றப்படுவது கேவலம்! மகா கேவலம்!

‘வடக்கு வடக்கு என்று கிண்டலடித்தீர்களே! இப்போது வடக்கு கல்விக்காகப் போராடுகிறது. தெற்கு சினிமா தியேட்டரில் சீரழிகிறது’ என்று சமூக வலைதளங்களில் வரும் விமர்சனத்தைப் படிக்கும் போது அவமானத்தால் துடிக்கிறோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை