மேகதாது :பா.ஜக துரோக நிலைபாடு!
📌 காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழ்நாடு அரசின் அனுமதி கர்நாடகாவுக்கு தேவையில்லை. நாடாளுமன்றத்தில் ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் அளித்த பதிலால் அதிர்ச்சி.
📌 தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் புதிய வானிலை மாற்றம் உருவாகி உள்ளதாக ஸ்பெயின் அரசு கவலை. இதுவரை 77 ஆயிரம் ஹெக்டேர் நிலம் எரிந்து சேதம் என தகவல்.
📌 கரூர் நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது. விஜய் அரசின் அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீ்ர்ப்பு.
📌 போகிற போக்கில் அரசு வேலை வழங்குவதா என தவெக அரசுக்கு நீதிபதிகள் காட்டம். சாலை விபத்தில் தினந்தோறும் உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க முடியுமா? என்றும் சரமாரி கேள்வி.
📌 எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை.
📌 ராணிப்பேட்டை தவெக மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார். 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் புகார்.
📌 போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற வாக்குறுதி மீறப்பட்டதாக கரப்பான் ஜனதா கட்சி குற்றச்சாட்டு. இன்றைக்குள் எழுத்துப்பூர்வ உறுதிமொழியை அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை.
📌மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது பீகார் அரசு. யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் உறுதி.
📌 டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் போது பெல்லட் கன் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு. பெல்லட் குண்டுகளால் மாணவர்களின் கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார்.
📌 ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை முந்தைய திமுக அரசு நிலைநாட்டியது. தற்போதைய தவெக அரசு ஆளுநருக்கு அடிபணிந்து விட்டதாக விசிக ஆளுர் ஷாநவாஸ் விமர்சனம்.
📌 தமிழ்நாட்டில் 15 நாட்களில் அரிசி விலை கிலோவுக்கு 25 ரூபாய் வரை அதிகரிப்பு. ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றதே காரணம் என தகவல்.
📌 காகித ரூபாய் நோட்டுக்கு பதிலாக விரைவில் நீண்ட நாள் உழைக்கும் வகையில் பிளாஸ்டிக் தாள். ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்.
📌 தூதரக ரீதியான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தீவிர தாக்குதல். ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை.
மேகதாது பிரச்னையில்பாஜக,தமிழக துரோக நிலைப்பாடு!
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கான காவிரி நீர்ப் பங்கீடு கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், தமிழக அரசு இத்திட்டத்திற்குத் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
காவிரி நதியின் குறுக்கே புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்குத் தமிழ்நாடு உள்ளிட்ட கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று பா.ஜ.க,ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ், மேகதாது திட்டத்தைச் செயல்படுத்தும் முன் கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற வேண்டியது அவசியமா என்பது குறித்துக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பைக் சுட்டிக்காட்டினார்.
2007-ஆம் ஆண்டு காவிரி நீர் தீர்ப்பாயம் (CWDT) வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு சரியானதே என உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.நடுவர் மன்ற உத்தரவுக்கு முரண்படாத வகையில், ஒரு மாநிலம் தன் எல்லைக்குள் இருக்கும் நீரைப் பயன்படுத்துவதையோ அல்லது சீரமைப்பதையோ இந்த உத்தரவு தடுக்காது என்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" ராஜ் பூஷண் சவுத்ரி தெரிவித்தார்.
மேகதாது குடிநீர் மற்றும் சமநிலை நீர்த்தேக்கத் திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர், கர்நாடக அரசு 2019-இல் சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை (DPR) குறித்துக் குறிப்பிட்டார்:
கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் (CWC) வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இல்லை.
இதனால், நடுவர் மன்றத் தீர்ப்புக்கு அமைவாகத் திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரி, பழைய DPR கர்நாடக திட்ட அதிகாரிகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கான காவிரி நீர்ப் பங்கீடு கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், தமிழக அரசு இத்திட்டத்திற்குத் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பாஜக ஒன்றிய அரசின் இந்த விளக்கத்திற்குத் தமிழகத்தைச் சேர்ந்த வல்லுநர்களும் அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர். சுப்பிரமணியன் தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிய மத்திய அரசின் விளக்கம் தவறானது மற்றும் அரைகுறையானது.
உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை ஒன்றிய பா.ஜ.க,அரசு தவிர்த்துவிட்டது.
இத்தகைய நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பலவீனப்படுத்துவதோடு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) போன்ற சட்டப்பூர்வ அமைப்புகளின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது” என்று தெரிவித்தார்.


