மூன்றே மாதத்தில்..

 தமிழ்நாட்டில் பதவியேற்ற மூன்று மாதங்களில் த.வெ.க. அரசு பல்வேறு திட்டங்களுக்காக, 20 ஆயிரத்து 881 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றாததற்கு முந்தைய அரசு கடன் வாங்கியதை காரணம் காட்டிய விஜய், தற்போது வாங்கியுள்ள கடன் தொகைக்கு என்னப் பதில் சொல்லப்போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசுக்கு, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி என, பல வகையில் வருவாய் கிடைக்கிறது. அரசு பணியாளர்கள் சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி போன்றவற்றுக்காக செலவு செய்யப்படுகிறது. வரவை விட, செலவு அதிகம் இருப்பதால், கடன் பத்திரங்கள் விற்பனை, வங்கிகள் போன்றவற்றில் கடன்கள் வாங்கப்படுகின்றன. இவற்றில், கடன் பத்திரங்கள் விற்பனை வாயிலாக பெறப்படும் கடன்தான் அதிகம்.

இவ்வாறு வாங்கப்படும் கடன்களில், சாலை அமைத்தல், பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை, அரசு மேற்கொள்கிறது. இந்த நோக்கங்களுக்காகவே முந்தைய தி.மு.க. அரசு கடன் வாங்கியது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், 20 ஆயிரத்து 881 கோடி ரூபாய் கடன் த.வெ.க. ஆட்சியில்

வாங்கப்பட்டுள்ளது. இந்த முழு ஆண்டில், 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் மொத்த கடன், ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்காக முந்தைய அரசு கடன் வாங்கியிருந்ததை விஜய் விமர்சித்திருந்தார். இப்போது ரூ. 20 ஆயிரத்து 881 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதற்கு த.வெ.க. அரசு என்னை விளக்கம் சொல்லப் போகிறார்கள் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை