எண்ணித் துணிக கர்மம்

 பிர­த­மர் மோடியி டம் பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் குறித்து கேள்வி எழுப்­பிய நார்வே பெண் பத்­தி­ரி­கை­யா­ள­ரின் சமூ­க­வ­லை­தள பதி­வு­கள் இந்­தி­யா­வில் பெரும் விவா­தத்தை ஏற்ப டுத்­தி­யுள்­ளன.

கடந்த மே மாதத்­தில் நார்வே நாட்­டின் ஒஸ்லோ நக­ரில் நடந்த இந்­தி­யா–­நார்வே உச்சி மாநாட்­டின் போது, அங்கு வருகை தந்த இந்­திய பிர­த­மர் மோடியிடம் நார்வே நாட்­டைச் சேர்ந்த பெண் பத்­தி­ரி­கை­யா­ளர் ஹெல் லிங் ஸ்வென் சன் பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் மற்­றும் மனித உரி­மை­கள் குறித்து கேள்வி எழுப்பினார். உல­கி­லேயே மிக உயர்ந்த பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் கொண்ட நார்வே நாட்­டின் பத்­தி­ரி­கையா ளர்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு ஏன் பதி­ல­ளிக்க மறுக்­கி­றீர்­கள் என்று அவர் கேட்­டார்.

 உலக பத்­தி­ரிகை சுதந்­திர குறி­யீட்­டில் 180 நாடு­க­ளில் நார்வே 1வது இடத்­தி­லும், இந்­தியா 157வது இடத்திலும் உள்­ளதை சுட்­டிக்காட்டி அவர் கேட்ட இந்த கேள்­வியை பிர­த­மர் மோடி புறக்­க­ணித்­து ­விட்டு அங் கிருந்து சென்­றார்.

 அதே நாளில் ஒன்­றிய வெளி­யு­றவு அமைச்­ச­கம் பிற பத்­தி­ரிகையாளர்­க­ளு­டன் இவ­ரை­யும் அழைத்து இந்­தி­யா­வின் பண்­டைய கலா­சா­ரம் குறித்து விளக்­கம் அளித்­தது. இந்த சம்­ப­வத்தை தொடர்ந்து, பிர­த­மர் மோடி­யின் ஆத­ர­வா­ ளர்கள்

 அந்­த­பெண் பத்­தி­ரி­கை­யா­ளரை வெளி­நாட்டு உள­வுத்­துறை முக­வர் என்­றும், முட்­டாள் பெண் என்­றும் சமூ­க­வ­லை­த­ளங்­க­ளில் கடுமையாக விமர்­சித்து மிரட்டல் விடுத்­த­னர்.

மக்­கள் வரிப்­ப­ணத்­தில் மாம்­ப­ழம் சாப்­பி­டு­கி­றார்­கள்!

தற்­போது இந்த பெண் பத்­தி­ரி­கை­யா­ளர் ஹெல் லிங் ஸ்வென்­சன் இந்தி யாவின் அர­சி­யல் மற் றும் சமூக நில­வ­ரங்­களை சமூ­க­வ­லை­த­ளங்­க­ளில் தொடர்ந்து கண்­கா­ணித்து கார­சா­ர­மான கருத்­துக் களை பதி­விட்டு வரு­கி­றார். 

பிர­த­மர் மோடி­யின் சமீ பத்­திய ஆஸ்­தி­ரே­லிய பய ணத்தை விமர்­சித்து அவர், ‘பிர­த­மர் மோடி இந்­தியா மற்­றும் வெளி­நா­டு­க­ளில் சுற்­றி ­வ­ரு­வதை விரும்­புகிறார். அவர் நினைத்­தி­ருந்தால் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள அரசு பள்­ளி­களை பார்­வை­யிட்டு, அங்கு அரசு வழங்­கும் தர­மான இல­வச கல்வி முறை மற்றும் தொழில்­நுட்ப கற்­பித் தல் முறை­களை பார்த் திருக்­க­லாம். ஆனால் எனக்கு என்ன கவலை?’ என்று பதி­விட்­டுள்­ளார்.

 மேலும், ‘இந்த வாரத்­தில் பெய்த கன மழை­யால் நடந்த விபத்­துக்­க­ளில் 23 பேர் உயி­ரி­ழந்த ஸ்மார்ட் சிட்­டி­யான சூரத் நக­ரம் வெள்­ளத்­தில் மூழ்­கி­யி­ருந்த போது, பிர­த­மர் வெளி­நாட்டில் நடன நிகழ்ச்­சி­ களை ரசித்­துக் கொண்­டி­ருக்கிறார்

; 15 ஆண்­டு­கள் முதல்வ ராக­வும் 15 ஆண்­டு­கள் பிர­த­ம­ரா­க­வும் இருந்­தும் சொந்த ஊரை கூட ஊழலின்றி ஆள முடி­யா­த­வர் வெளி­நாட்­டில் பொழுதை கழிக்­கி­றார்’ என்று சாடி­யுள்­ளார்.

ஒன்­றிய அர­சுக்கு ஆத­ர­வாக இந்­திய ஊட­கங்­கள்!

இந்­தி­யா­வின் அரசு பள்­ளி­க­ளின் அவல நிலை குறித்து கேள்வி எழுப்பி யுள்ள அவர், 5 டிரில்லி யன் டாலர் பொருளா தாரத்தை பற்றி பேசும் நாட்­டில் மக்­க­ளுக்கு என்ன மாதி­ரி­யான வசதி கள் செய்­யப்­பட்­டுள்­ளன என்று கேட்­டுள்­ளார்.

உத்­த­ர­பி­ர­தேச முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் மற்­றும் பாஜக தலை­வர் நிதின் நபின் ஆகி­யோர் மக்­கள் வரிப்­ப­ணத்­தில் மாம்பழம் சாப்­பி­டு­வதை கிண்டல் செய்­துள்ள அவர், எதிர்க்­கட்­சித் தலை­வர் ராகுல் காந்தி மக்­கள் பிரச்­னை­க­ளின் போது களத்­தில் இல்­லா­த­தை­யும் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

 இந்­திய ஊட­கங்­கள் ஒன் றிய அர­சுக்கு ஆத­ர­வாக கரும்­ப­ல­கையை வைத்து பாடம் நடத்­து­வ­தா­க­வும், கடந்த 10ம் தேதி­யன்று பிரதமர் மோடி­யு­டன் இருப்பது போன்ற செயற்கை நுண்­ண­றிவு புகைப்ப டத்தை பகிர்ந்து தனக்கு நடந்த மறக்க முடி­யாத தரு­ணம் என்­றும் பதி­விட்டுள்­ளார்.

இவ­ரது இந்த பதிவு, இந்­தி­யா­வில் பெரும் விவா­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.


கார்பரேட் பல்கலைக் கழகங்கள்!

கில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு – 2026 (All India Survey on Higher Education – AISHE) அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் அரசு பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்படுவது மட்டுமின்றி, அவை மூன்று மடங்கிற்கும் மேல் அதிவேகமாக உருவெடுத்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 550-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை உயர் கல்வித்துறையின் கீழ் இணைத்துள்ளது.

 ஒட்டுமொத்தமாக, நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் மொத்த எண்ணிக்கை 76.9 சதவீதம் அதிகரித்து, 723-லிருந்து 1,279-ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தனியார் நிர்வாகத்தின் (Deemed Universities) கீழ் இயங்குபவை.

அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு 2026 (AISHE) மூலம் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2013 – 2014 முதல் 2023 – 2024 வரையிலான கல்வியாண்டில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை சுமார் 219-லிருந்து 546 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, தனியார் கல்வி நிறுவனங்கள் ஒப்பீட்டளவில் 149.3 சதவீதம் மூன்று மடங்கிற்கும் மேல் விரிவடைந்துள்ளன.

 தனியார் பல்கலைக்கழகங்களை ஒப்பிடுகையில் அரசுப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 504-லிருந்து 733 ஆக உயர்ந்து, ஒப்பீட்டளவில் 45.4 சதவீதம் மிகவும் குறைந்த அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.மாநில அளவில், குஜராத் மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக விரிவடைந்துள்ளது. 

தற்போது 57 பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ள ராஜஸ்தானை விட, குஜராத் 2023-24 ஆம் ஆண்டில் 51 பல்கலைக்கழகங்களைச் சேர்த்து, மொத்த தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை 67 ஆக அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசம் 52 தனியார் பல்கலைக்கழகங்களுடன் இரண்டாம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா 45 மற்றும் 42 தனியார் பல்கலைக்கழகங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதில் மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் முதல் ஐந்து இடத்திற்குள் உள்ளன.

இருப்பினும், அரசு பல்கலைக்கழகங்களே பெரும்பான்மையான மாணவர்களுக்கு முறையான கல்வி அளித்து வருகின்றன.

 ஆனால், அரசு பல்கலைக்கழகத்தின் மொத்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஐந்தில் நான்கு பங்கிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு என்ற விகிதத்தில் (81.3% லிருந்து 68.1% வரை) மிகவும் குறைந்துள்ளது. 

அதையே தனியார் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் மொத்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஐந்தில் ஒரு பங்கிலிருந்து மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் (18.6% லிருந்து 31.9 வரை) பூதாகரமாக அதிகரித்துள்ளது.

மொத்தமாக, அரசு பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி விகிதம் 42.5% ஆகவும், தனியார் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி விகிதம் 191.8% மூன்று மடங்காகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrollment Ratio – GER), 2013 – 2014-ல் 23.0 ஆக இருந்ததிலிருந்து 2023 -2024-ல் 30.0 ஆக விரிவடைந்துள்ளது. மாணவர்களின் சேர்க்கை விகிதம் மாணவர்களை விட மாணவிகளுடையது அதிகமாக உள்ளது.

 மாணவர்களின் GER – 28.9 ஆக இருக்கும்போது, மாணவிகளின் GER – 31.2 உயர்ந்துள்ளது. இத்தரவுகள், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக மாணவிகள் அதிக சேர்க்கை விகிதத்தைப் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. காவி கும்பல் மறுகாலனியாக்க கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது

 இதனால், ஒட்டுமொத்த கல்வி கட்டமைப்பையும் மாற்றி கார்ப்பரேட்மயமாக்கி வருகிறது.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை