த.வெ.க,வை வெறுக்கிறோம்..
நவோதயா பள்ளி வழக்கு விசாரணையில், 9ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குமரி மகா சபா என்ற அமைப்பு நவோதயா பள்ளிகளை அமைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.தான்.
இதைத்தொடர்ந்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த பிரம்மாண பத்திரத்தில், ”நவோதயா பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. இந்தி திணிப்புக்கு நவோதயா பள்ளிகள் வழிவகுக்கும்.
இது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரு மொழிக் கொள்கைக்கு எதிரானது.
தமிழகத்தில் 38 உறைவிட மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மாதிரி பள்ளிகளில் படித்த 1,340 மாணவர்கள் 2024-2025 கல்வியண்டில் அகில இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்
. பல மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெற்று சர்வதேச கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.
கூடுதல் செலவை ஏற்படுத்தும் நவோதயா பள்ளிகளை கொண்டு வர நினைக்கும் மத்திய அரசு, சமகிரக சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் உள்ளது.
கூடுதலாக நிறுவனங்களை கொண்டு வருவதற்கு பதிலாக மத்திய அரசு ஏற்கனவே ஏற்றுள்ள தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்தசூழலில் நீதிபதிகள் நாகரத்னா, மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு இன்று (ஜூலை 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிப்பிரியா, ”இந்த வழக்கை 12 வார காலம் ஒத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், ”ஏற்கனவே இந்த கடிதத்தை கொடுத்திருக்கிறீர்கள்.
தற்போது தமிழகத்தில் புதிய அரசு அமைந்திருக்கிறது. ஏன் நவோதயா பள்ளிகளை எதிர்க்கிறீர்கள்? என்று தெரிவியவில்லை. இந்த அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்று கூறினர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியதர்ஷினி, ”தமிழ்நாட்டில் 1500க்கும் அதிகமான சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆனால் இந்தியை காரணம் காட்டி தமிழக அரசு நவோதயா பள்ளிகளை எதிர்க்கிறது.
இதில் உள்நோக்கம் இருக்கிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கல்வியில் சமநிலை இல்லாத சூழல் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார்.
இதைகேட்ட நீதிபதிகள், ”தமிழ்நாட்டில் யாரும் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைதான் எதிர்க்கின்றனர். இதை மனதில் வைத்து வாதங்களை முன் வையுங்கள்” என்று கூறினர்.
தமிழக அரசு சார்பில், ”நவோதயா பள்ளிகள் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதால் 12 வாரம் கால அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ”மத்திய அரசு அனைத்து செலவுகளையும் செய்யும். நீங்கள் நிலத்தை மட்டும் வழங்கினால் போதும். மற்ற எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் அதை மறுக்கிறீர்கள்?
‘நவோதயா பள்ளி மத்திய அரசால் நடத்தப்படுகிறது என்பதால், அது எங்களுக்கு எதற்கு என்ற மனப்பான்மையைக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ”மூன்றாவது மொழி என்பது பிரச்சினைக்குரியதாகவே இருக்கிறது. தயவுசெய்து 9 ஆம் வகுப்பில் ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்தாதீர்கள்.
பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கு அது கூடுதல் சுமையாக இருக்கும். 5 அல்லது 6 ஆம் வகுப்பில் மூன்றாவது மொழியைத் தொடங்கலாம். 9 ஆம் வகுப்புக்குள் அந்த மூன்றாவது மொழியை நிறுத்திவிட வேண்டும்.
மாணவர்கள் படும் மன அழுத்தத்தைப் பாருங்கள். அதுபோன்று மூன்றாவது மொழியாக இந்திதான் கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சமஸ்கிருதம் கூட கற்கலாம்” என்று கூறினர்.
தொடர்ந்து தமிழக அரசு கேட்ட 12 வார கால அவகாசத்துக்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
தவெகவின் போக்கை வெறுக்கிறோம்..
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருவதை இடதுசாரிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
அந்த வகையில் சிபிஐ எம்பி சுப்பராயன் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
தவெக ஆட்சி அமைப்பதற்கு இடதுசாரி இயக்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அமைச்சரவையில் பங்கேற்ற மாட்டோம் என திட்டவட்டமாக கூறினார்கள்.
அந்த வகையில் சிபிஐ எம்பி சுப்பராயன் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதன்படி வெளியில் இருந்து மட்டும் ஆதரவு என்பதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதியாக இருந்தன. இதனிடையில் சில தினங்களுக்கு முன்பாக சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக சூழல் வந்துள்ளதாக பேசியிருந்தார்.
அவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கெடுக்க போகிறதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இப்படியான நிலையில் சிபிஐ கட்சியை சார்ந்த எம்பி சுப்பராயன் இவ்விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். சமீபத்தில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்த சுப்பராயன் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது அவரிடம் தவெக அமைச்சரவையில் சிபிஐ இடம்பெறுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுப்பராயன், ஒரு போடும் அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதோடு மாநில செயலாளர் வீரபாண்டியனே அமைச்சரவையில் சிபிஐ பங்கெடுக்கும் என்று சொல்லவில்லை என மறுத்துள்ளார். அவர் அப்படி சொல்லி இருக்கவும் மாட்டார். ஏனென்றால் கட்சி அதுபோல் ஒரு முடிவினை எடுக்கவில்லை.
உறுதிப்பட ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம். உங்களுடைய மற்ற நடவடிக்கையில் பங்கு பெற மாட்டோம். மற்ற நடவடிக்கைகளிலும் ஆதரவு அளிக்க மாட்டோம் என அன்றைக்கே சிபிஐ மாநில செயலாளர் அறிவித்து விட்டார்.
தற்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளார் எம்பி சுப்பராயன்.
தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாகவும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு இரண்டு மாதக்காலம் என்பது ஒரு கட்சியை மதிப்பிட செய்வதற்கான காலம் என்று கருதி விட முடியாது.
ஆனாலும் தேர்தல் காலத்தில் பிரச்சாரத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை தவெக கடுமையாக எதிர்த்தது.
அந்த கருத்துக்களை மக்கள் முன்னிலையில் வைத்த தவெக அரசு, தற்போது அக்கறையுடன் பரிசீலிக்க வேண்டும். இது குறையாமல் அதிகரித்து கொண்டிருப்பது ஆபத்தானது.
இந்த போக்கை நாங்கள் ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அதோடு அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணையும் போக்கை வெறுக்கிறோம். எதிர்க்கிறோம் என்றும் விமர்சனங்களை சுப்பராயன் முன்வைத்துள்ளார்.
அவருடைய இந்த பேட்டி தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
முன்னதாக ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், இந்த மண்ணில் இருந்தும் ஒருவர் அமைச்சராக வரலாம்.
அதற்கான சூழல் வந்து கொண்டிருக்கிறது என பேசியிருந்தார்.
அவருடைய இந்த கருத்தினை தொடர்ந்து தவெக அமைச்சரவையில் இடம்பெற சிபிஐ தயாராகி வருகிறது என்ற அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
விசிக தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் பங்கேற்றால் வரவேற்போம் எனவும் தெரிவித்து இருந்தார்.
இப்படியான நிலையில் தவெக அமைச்சரவையில் சிபிஐ இடம் பெறாது என திட்டவட்டமாக எம்பி சுப்பராயன் தற்போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவில் சிறையில் நடந்த கொலை!‘தூயசக்தி’ ஆட்சியில் கொலைகொலையாய் கொலைகள் நடப்பதை தினந்தோறும் பார்த்து வருகிறோம். உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் எப்போதும் ‘சைலண்ட்’ மோடில் இருப்பதால் சிறைக்குள்ளும் கொலைகள் நடக்கத் தொடங்கி இருக்கின்றன.
‘இதோ இந்த நிமிடம் முதல் எந்தத் தவறும் நடக்க விடமாட்டேன்’ என்று விஜய் தனது பதவி ஏற்பின் போது சொன்னார். அந்த நிமிடம் முதல் தான் அதிகமான தவறுகள் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக அவரது உள்துறையில் தான் அதிகப்படியான தவறுகள் நடக்கின்றது.
மாற்றுத்திறனாளியான சபரி வர்மன் கொலை த.வெ.க. ஆட்சி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதற்கு உதாரணம் சொல்லத்தக்கதாக நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன். 35 வயதான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் செந்தாமரைக்குளம் காவல் நிலையத்திற்கு மாமூல் கொடுக்காத காரணத்தால் குட்கா விற்பனை செய்ததாக அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளார்கள். கடந்த 9 தேதி நாகர்கோவில் கிளைச் சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த
14 ஆம் தேதி காலையில் அவர் சிறையில் உயிரிழந்ததாகக் கூறி ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்டார். உடல் பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சாவு குறித்து நாகர்கோவில் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். உடற்கூறாய்வில் சபரி வர்மனை சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து நாகர்கோவில் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் தலைமையில் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ‘உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட சபரி வர்மன் குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பிரச்சினையில் தொடர்புடையது காவலர்கள் என்பதாலும், சிறையில்
மரணம் அடைந்துள்ளதால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும் என்பதாலும் இதனை மறைக்க முயற்சி செய்தது த.வெ.க. அரசு.
சபரி வர்மனின் மனைவி ஆனந்தவல்லியிடம் புகார் மனு பெற்று நேசமணி நகர் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரச்சினை பெரிதானால் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றிவிட்டோம் என்று சொல்லி பிரச்சினையை அமுக்கப் பார்த்தது
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
கடுமையான அறிக்கையை வெளியிட்டார். தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதற்காகவே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
‘விசாரணைக் கைதியான சபரி வர்மன் மரணத்தை த.வெ.க. அரசு கண்டுகொள்ளவில்லை. சிறையில் கைதியை அடித்தே கொலை செய்துள்ளார்கள். கைதி கொல்லப்பட்ட நாளில் காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், பெரம்பூரில் சூட்டிங் நடத்திக் கொண்டு இருந்தார்.
எங்களுக்கு ரீல்ஸ் வேண்டாம்.நீதி வேண்டும்’ என்று சொன்ன வழக்கறிஞர் பரந்தாமன், இதில் தொடர்புடைய காவலர்கள் யார் யார் என்பதையும் அம்பலப்படுத்தினார். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். இல்லாவிட்டால் சி.பி.ஐ.
விசாரணை கேட்டு நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம் என்றார். இது
த.வெ.க. அரசுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது.
மூன்று மணி நேர ஆலோசனைக்குப் பிறகு தொடர்புடைய காவலர்களை கைது செய்யும் முடிவை த.வெ.க. அரசு எடுத்தது. சபரி வர்மன் கொலை
சம்பவம் தொடர்பாக தலைமை சிறைக் காவலர் சுரேஷ், சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர் சிவகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தே ஆக வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது த.வெ.க. அரசு.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அறிக்கை, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் பரந்தாமன் பேட்டி ஆகியவை வராமல் இருந்தால் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் கொலைக்கு நீதி கிடைத்திருக்காது. ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என்றே மூடி மறைத்திருப்பார்கள்.
மாற்றுத்திறனாளியான சபரி வர்மன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். உடற்கூறு அறிக்கையின் படி அவரது உடலில்
19 இடங்களில் படுகாயம் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
1. வலது கையில் 6 இடங்களில் காயம்
2. வலது கால் மற்றும் மூட்டுப் பகுதியில் காயம்.
3. இடது கால் மற்றும் மூட்டுப் பகுதியில் காயம்
4. இடது நெஞ்சின் கீழ் பகுதியில் 7 CM அளவில் காயம்.
5. தலையில் இரண்டு இடங்களில் காயம்.
6. மண்டை ஓடு சேதம்.
7. பின்னங்கழுத்தில் பலத்த காயம்.
8. பின்னந் தலையில் பலத்த காயம்.
– இப்படி உடல் முழுக்க காயங்கள். அதாவது அடித்தே கொன்றுள்ளது த.வெ.க. ஆட்சியில் சிறைத் துறை அதிகாரிகள். யார் கொடுத்த தைரியத்தில் இவை நடக்கிறது?
ஒரு பக்கம் குற்றங்களைக் கண்டு கொள்ளாத, தடுக்க முடியாத போலீஸ். இன்னொரு பக்கம், சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதியை அடித்துக்
கொள்ளும் போலீஸ். இதுதான் விஜய் ஆட்சிக் கால போலீஸ். ஒரு ஆட்சி
எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது விஜய் தூயசக்தி ஆட்சி.







