பழனிக்கே மொட்டை,?

 

காவலர்கள் நியமனத்தை தொடங்க வேண்டும் -

அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

@ பழனி கோவில் நில மோசடி வழக்கு - சார் பதிவாளருக்கு நிபந்தனை ஜாமீன்

பழனி கோவில் நில மோசடி வழக்கில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என கோவில் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

# தொகுதி மறுவரையறை; தி.மு.க முடிவு தான் முக்கியம் - நவாஸ் கனி பேட்டி

தொகுதி மறுவரையறை மசோதாவை தி.மு.க எதிர்க்க வேண்டும். கடந்த முறை எடுத்த நிலைப்பாட்டைத்தான் தி.மு.க தற்போது எடுக்க வேண்டும் என விரும்புகிறோம்.

இந்த விவகாரத்தில் த.வெ.க-வை விட தி.மு.க-வின் முடிவுதான் சரியாக இருக்கும்,முக்கியம் என்று ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி நவாஸ் கனி, புதுக்கோட்டையில் பேசியுள்ளார்.

@ விஜய்க்கு டூப் போடும் விதத்தில் வைகோ நடந்து கொள்கிறார் - ம

உணவகத்துடன் கூடிய மதுபான கடைகளை திறக்கப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. இந்த ரெஸ்ட்ரோ பார்களை த.வெ.க அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது.

அப்படி செய்தால் அது நீங்கள் சொன்ன வாக்கில் இருந்து பின்வாங்குகிறீர்கள் என்பதாக தான் அர்த்தம். இதற்கு மல்லுக்கட்டுவதற்கு ம.தி.மு.க தலைவர் வைகோ வரக் கூடும், எனென்றால் அவர் தான் துருப்பிடித்த ஈட்டி, வாள், கேடயத்தை எல்லாம் வைத்துள்ளார்.

முதல்வர் விஜய்க்கு டூப் போடும் விதத்தில் வைகோ நடந்து கொண்டிருக்கிறார் என்று திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.

@ 6 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிவிட்டது த.வெ.க: அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி

த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, அ.தி.மு.க சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரை அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்/பி இன்பதுரை ஆகியோர், த.வெ.க தரப்பு 6 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிவிட்டதாக அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மேலும், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை விலகல் செய்த உடனே அவர்களுக்குத் தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் டிஜிபியிடம் தற்பொழுது புகார் மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

@ “தி.மு.க-வுடன் எந்த நேரத்திலும் அ.தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தவில்லை” - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாக அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிரி கிருஷ்ணமூர்த்தி, “தி.மு.க-வுடன் எந்தவொரு நேரத்திலும்  நாங்கள் (அ.தி.மு.க) பேச்சுவார்த்தை நடத்தவில்லை. குதிரைபேர ஊழல்கள் தொடர்பாக புகார் கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.

@ பழனி நில மோசடி விவகாரம்: கிரயம் செய்த அந்த 2 பேர் யார்? - பரந்தாமன் கேள்வி

பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் கிரயம் செய்திருக்கக்கூடிய அந்த 2 நபர்கள் யார் என்பதைப் போலீஸ் தரப்பு இன்னும் வெளிக்காட்டவில்லை என்று தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.


தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்ட அந்த 2 பேரும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சொத்து வாங்குவதற்குக் கூட பொருளாதார ரீதியாகப் பலம் வாய்ந்தவர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு மிகவும் எளிய பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர்கள், இந்த மோசடியில் எப்படி ரூ.2 கோடியில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அவர் இந்த விவகாரத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளார்.


பழனி கோயில் விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக வழக்கறிஞர் பரந்தாமன், பழனி கோயிலில் மொட்டை போட்டுப் பார்த்திருப்போம், ஆனால் தற்பொழுது பழனிக்கே மொட்டை போடப்பட்டுள்ளது என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த மோசடிக்காக 60, 70 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து சப் ரிஜிஸ்டரை அழைத்து வந்து, ஒரு நாள் வேலை கொடுத்துள்ளதாகவும், இதில் பினாமி பெயரில் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகச் சந்தேகம் எழுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த நபரை அரசு கைது செய்வதுடன், சதிகளை மறைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த விவகாரத்தில் விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றால் சிறிது காலம் பொறுத்திருந்துவிட்டு தி.மு.க நீதிமன்றத்திற்குச் செல்லும் என்றும்  தெரிவித்துள்ளார்.

பழனி கோயில் நில மோசடி தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “அறியாமை காரணமாக அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்துவிட்டனர்” எனக் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்துக் குற்றச்சாட்டு எழுப்பியுள்ள திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், முறையான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு பொறுப்புள்ள அமைச்சர் இவ்வாறு கூறுவது, இந்த மோசடியில் ஈடுபட்ட குற்றவாளியைக் காப்பாற்றுவதற்கு அவர் துணையாகப் போவதையே தெளிவாகக் காட்டுகிறது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

@அ சென்னையில் குடியிருப்புப் பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவளிப்பதால் பொதுமக்களிடையே ஏற்படும் தகராறுகள் மற்றும் மோதல்களைத் தவிர்க்கும் பொருட்டு, சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட 39 இடங்களின் பட்டியலை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் கொளத்தூர், விருகம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பொதுமக்கள் எங்கு முறையாக உணவளிக்கலாம் என்ற விரிவான விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன.



@ தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பெண் தொண்டர்களை இழிவாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பேட்டியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே தான் பதிலளித்ததாக பொன்ராஜ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, தன் மீதான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


எனினும், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், பொன்ராஜ் தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.



@ கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க - காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கோவை காங்கிரஸ் கவுன்சிலர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மேயர் ரங்கநாயகி தெரிவித்தார். இதனால், மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.



பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த முருகானந்தம் என்பவரிடமும், பழனி அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளிடமும் சி.பி.சி.ஐ.டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சஜிதா நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.


பாசிஸ்ட் ஆட்சி!

த.வெ.க.வின் தேர்­தல் வாக்­கு­றுதி vs த.வெ.க.-வின் பாசிஸ்ட் ஆட்சி என்று தி.மு.க. ஐ.டி. விங் ட்விட்­டர் பதி­வில் விமர்­சித்­துள்­ளது.

இது குறித்து தி.மு.க. ஐ.டி. விங் பதிவு வரு­மாறு:–

உங்­கள் தேர்­தல் அறிக்­கை­யின் 89-வது பக்­கத்­தில்,

1. “ஒவ்­வொரு காவல் படு­கொ­லை­யும் அர­சின் தோல்வி” என நீங்­களே எழுதி வைத்­து­விட்டு, இன்று உங்­கள் ஆட்­சி­யின் கீழ் ஒரே வாரத்­தில் மூன்று காவல் மர­ணங்­களை அனு­ம­தித்­தி­ருப்­பது உங்­கள் தோல்­வி­யின் உச்­ச­மல்­லவா?

2. அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­திற்கு ‘Party Fund’ பெய­ரில் 30 லட்­சம் வரை உங்­கள் கட்­சி­யி­னரே லஞ்­சம் வசூ­லிப்­ப­து­தான் உங்­கள் நீதித்­துறை மேம்­பாடா?

3. நிஜத்­தில் பாட்­டி­லுக்கு 30 ரூபாய் கமி­ஷன், FL2 பார் உரி­மத்­திற்கு லட்­சக்­க­ணக்­கில் Party Fund எனக் கூறி லஞ்­சம் என உங்­கள் அரசு ஊழ­லில் ஊறித் திளைக்­கி­றது!

ஆட்சி நிர்­வா­கத்­தில் ABCD கூடத் தெரி­யாத ‘பொம்மை’ முதல்­வ­ரா­க­வும், கட்­சி­யி­னரை கட்­டுக்­குள் வைக்­கத் தெரி­யாத ‘டம்­மி’­யா­க­வும் நீங்­கள் இருப்­ப­தால், மாநி­லமே முடங்கி நிற்­கி­றது – என்று தி.மு.க. ஐ.டி.விங் ட்விட்­ட­ரில் பதிந்­துள்­ளது.ஒவ்வொரு ஆண்­டும் ஜூன், ஜூலை மாதங்­க­ளில் ஆசி­ரி­யர் பணி­யிட பொது மாறு­தல் கலந்­தாய்வு ஆன்­லைன் வழி­யாக

நடை­பெ­றும். ஆன்­லைன் மூலம் விண்­ணப்­பப்­ப­திவு, கலந்­தாய்வு வெளிப் ­ப­டை­யாக நடப்­ப­தாக கடந்த ஆட்­சி­யில் எதிர்­கட்­சி­களே பாராட்டு தெரி­வித்த நிகழ்­வும் நடை­பெற்­றது. நடப்பு கல்­வி­யாண்­டுக்­கான பணி­யிட மாறு­தல் கலந்­தாய்­வுக்கு பள்­ளிக்­கல்­வித்­து­றை­யின் எமிஸ் இணை­ய­த­ளம் வழி­யாக ஜூன் 15 முதல் 22ம் தேதி வரை ஆசி­ரி­யர்­கள் விண்­ணப்­பித்­த­னர்.

அதனை தொடர்ந்து, பணி­யிட மாறு­தல் கலந்­தாய்வு ஜூலை 1ம் தேதி தொடங்­கி­யது. இடை­நிலை ஆசி­ரி­யர்­க­ளுக்­கான மாவட்­டம் விட்டு மாவட்­டம் பணி மாறு­த­லுக்­கான கலந்­தாய்­வும், மாவட்­டத்­துக்­குள்­ளேயே பணி­யிட மாறு­தல் கலந்­தாய்­வும் நடந்­தது. 

தொடர்ந்து ஜூலை 6ம் தேதி தொடக்­கப்­பள்ளி தலைமை ஆசி­ரி­யர்­க­ளுக்கு கலந்­தாய்வு நடை­பெ­ற­வி­ருந்த நிலை­யில், நீதி­மன்ற உத்­த­ர­வின் கார­ண­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், தமிழ்­நாடு அர­சில் மின்­சா­ரம் மற்­றும் சட்­டத்­துறை அமைச்­ச­ராக இருக்­கும் நிர்­மல்­

­குமா­ரின் மனை­விக்கு கலந்­தாய்வே நடை­பெ­றா­மல் பணி­யிட மாறு­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ரின் மனைவி பல்­லா­வ­ரம் மறை­மலை அடி­கள் அரசு மேல்­நி­லைப்­பள்­ளி­யில் பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரிந்து வந்­தார்.

அவ­ருக்கு தற்­போது சென்னை திரு­வல்­லிக்­கே­ணி­யில் உள்ள லேடி வெலிங்­டன் பெண்­கள் மேல்­நி­லைப் பள்­ளிக்கு பணி­யிட மாறு­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ருக்கு பசுமை வழிச்­சா­லை­யில் உள்ள பங்­களா ஒதுக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அவ­ரது மனை­விக்கு பணி­யிட மாற்­றம் வழங்­கி­யி­ருப்­பது பள்­ளிக்­கல்­வித்­துறை வட்­டா­ரத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.


பணி­யிட மாறு­தல் கவுன்­ச­லிங் நடை­பெ­றும் போது பல இடங்­களை வெளிப்­ப­டை­யாக காட்டு­வ­தில்லை என்ற குற்­றச்

­சாட்டை கடந்த பல ஆண்­டு­க­ளாக தெரி­வித்து வரு­வ­தாக கூறும் ஆசி­ரி­யர்­கள், இவ்­வாறு மறைக்­கப்­ப­டும் இடங்­க­ளில் இது­போன்ற செல்­வாக்கு உள்­ள­வர்­க­ளுக்­கும், பணத்­திற்­காக விற்­ப­தா­க­வும் தொடர்ந்து குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­ற ­னர்.

ஆனால் அமைச்­சர் என்ற கார­ணத்­துக்­காக அவ­ரது மனை­விக்கு அயல்­பணி வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும், அது­வும் பணி மாறு­தல் நிறுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில் இந்த உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ளது. 

மேலும், அவ­ருக்கு வழங்­கப்­பட்ட பணி­யிடத்தை காலி­யி­ட­மாக காட்­டா­மல் மறைத்து வைத்து அயல்­பணி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக ஆசி­ரி­யர்

சங்­கங்­கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன.




பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு பத விஐபிக்களுக்கு தொடர்பு?


பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் எஸ்பி சாஜிதா இன்று அதிரடி விசாரணை நடத்தினார்.


இது தொடர்பாக தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் இந்த முறைகேட்டில் விஐபிக்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், பதிவுத்துறை மாவட்டப் பதிவாளர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயில் அடிவாரம், ஆண்டவன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமாக 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த இடம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் வாகன நிறுத்துமிடமாக உள்ளது.


இந்த நிலத்தை முருகதாஸ் என்பவர் சேதுபதி மற்றும் வெள்ளைத்துரை ஆகியோருக்கு கடந்த 6ம் தேதி ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.


இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, பழநி கோயில் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை கிரையம் செய்து கொடுத்த முருகதாஸ், கிரையம் பெற்ற வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகிய 4 பேர் மீது அடிவாரம் போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.


இதையடுத்து, துறைரீதியான நடவடிக்கையாக ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட் கிளையில் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் நேற்று முன்தினம் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது.


தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கு நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.


இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம், இஸ்பெக்டர் சந்தானலட்சுமி தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் ஆவணங்கள், கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் உள்ளிட்டவைகளை சிபிசிஐடி போலீசாரிடம், பழநி அடிவாரம் போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.


இதையடுத்து நேற்று மாலை பழநி கோயில் தலைமை அலுவலகத்தில் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான 15க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


அங்குள்ள நிலங்கள் பிரிவுக்கு சென்று, பிரச்னைக்குரிய நிலத்தின் ஆவணங்களை பெற்றனர். தொடர்ந்து நிலம் தொடர்பாக, கோயில் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு விவரங்கள், மேல்முறையீட்டு ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.


மேலும் பிரச்னைக்குரிய நிலத்தின் அமைவிடம், எல்லைகள், இடத்தின் சந்தை மதிப்பீடு குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், 2வது நாளாக இன்று சிபிசிஐடி போலீசார், கோயில் நிர்வாகத்திடம் பெறப்பட்ட ஆவணங்கள், நிலத்தின் மூலப்பத்திரம், நிலத்தின் உரிமையாளர் எழுதி கொடுத்த தானசெட்டில்மென்ட் போன்ற ஆவணங்களை ஆய்வு செய்தனர்.


இந்த நிலையில், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் முருகானந்தம் உள்பட 5 அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி எஸ்பி சாஜிதா இன்று அதிரடி விசாரணை நடத்தினார


மேலும், இது தொடர்பாக தலைமறைவான முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில் சிபிசிஐடி எஸ்பி சாஜிதா இன்று பழநிக்கு வந்து சார்பதிவாளர் அலுவலகம், கோயில் தலைமை அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனால் பத்திரப்பதிவு குறித்து பூர்வாங்கமாக நடந்த விசாரணையில், ‘பத்திரப்பதிவுக்காக ஆவணங்கள் கொடுத்தபோது, பழனி சார்பதிவாளர் அதை வாங்கியுள்ளார்.


ஆனால் தள்ளுபடி செய்யாமல், நிலுவையில் உள்ளதாக வைத்துவிட்டு விடுமுறையில் சென்று விட்டார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா, கொடைக்கானலில் உதவியாளராக உள்ள ஜஸ்டின் மணிகண்டனை ஒரு நாள் விடுமுறைக்காக வரவழைத்து ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.2 கோடிக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார்.


பதிவு முடிந்ததும் அவர் கொடைக்கானலுக்கு மீண்டும் பணிக்குச் சென்று விட்டார்.

இதனால் கண்டிப்பாக பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.


த.வெ.க,விஐபிக்களுக்கு கண்டிப்பாக தொடர்பு இருப்பது நிரூபணமாகியுள்ளது.


இதனால் சசிகலாவிடம் விசாரணை நடத்தினால், கண்டிப்பாக இந்த பதிவுக்குப் பின்னால் இருக்கும் விஐபி யார் என்பது தெரிந்து விடும். இதனால் அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.


சசிகலா கடந்த 6 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் மாற்றப்படாமல் இருந்துள்ளார

எந்த அதிகாரிகள் வந்தாலும் அவர் மட்டும் மாற்றப்பட மாட்டார்.


இவருக்கு பல ஐஏஎஸ், அரசியல் பிரமுகர்கள் பின்புலமாக இருப்பதாக கூறப்படுகிறது. சர்வ செல்வாக்கு படைத்தவராக சசிகலா இருந்து வந்தார்.


இவர்தான் இந்த பதிவுக்கு பக்கபலமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடத்தினால் முழு விவரமும் தெரியவரும் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை