"விஜயிஸ்ட்"சண்முகம்.

‘குதிரை பேர விவ­கா­ரத்­தில் மக்­க­ளுக்கு கோபம் வர வேண்­டும். பிற கட்­சி­களை உடைத்து அதன் மூலம் பா.ஜ.க. தங்­க­ளது பலத்தை அதி­க­ரிக்­கின்­ற­னர். 

ஆனால் இங்கே இவர்­கள் ராஜி­னாமா செய்து விட்டு கட்சி மாறு­கின்­ற­னர். அதை­யும் இதை­யும் சம்­பந்­தப்­ப­டுத்­தக் கூடாது” என்று மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் மாநி­லச் செய­லா­ளர் சண்­மு­கம் கண்­டு­பி­டித்­தி­ருக்­கி­றார். ஒரு கம்யூனிஸ்ட்டாக,பாசிச எதிர்ப்பாளராக இருந்தவர் பக்கா விஜயிஸ்ட்டாக மாறிப்போன அவலம்தான் இந்நிலைக்கு காரணம்.உண்­மை­ய­றி­யும் கரு­வி­யைத் தோளில் தொங்க விட்­டுள்­ளார் போலும்!

11.7.2026 அன்று பேட்டி அளித்த முன்­னாள் அமைச்­சர் கரூர் எம்.ஆர்.

விஜ­ய­பாஸ்­கர், “விஜய் தலை­மை­யி­லான அரசு எங்­கள்ட்ட அப்­ரோச் பண்­ணு­னாங்க. 42 ஆண்டு காலம் நான் உறுப்­பி­னரா இருந்­தி­ருக்­கி­றேன். பல பத­வி­கள்ல இருந்­தி­ருக்­கேன். உள்­ளாட்­சி­யில இருந்து ... அமைச்­சர்ல்ல இருந்து பல பத­வி­யில இருந்­தி­ருக்­கேன்...’’ என்று வெளிப்­ப­டை­யா­கப் பேட்டி கொடுத்­தார். 

இது அனைத்து ஊட­கங்­க­ளி­லும் வந்­துள்­ளது. இது தானாக முன் வந்து வில­கி­யதா? இல்லை. முத­ல­மைச்­சர் விஜய் சொல்­லித்­தான் வில­கி­ய­தாக கரூர் எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர் சொல்லி இருக்­கி­றார்.

ம.தி.மு.க. பொதுக்­குழு 27.6.2026 அன்று சென்­னை­யில் கூடி­யது.

 அதன்­பி­றகு நடந்த ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் வைகோ வெளிப்­ப­டை­யாக குதிரை பேரம் நடந்­ததை ஒப்­புக் கொண்டு ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் கொடுத்­துள்­ளார்.

நிரு­பர்: நீங்­கள் முத­ல­மைச்­ச­ரைச் (விஜய்) சந்­தித்­தீர்­களா?

வைகோ: ஆமா. சந்­திச்­சேன்.

நிரு­பர்: ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜி­னாமா செய்­யச் சொல்­லுங்­கள், நான் பிரச்­சா­ரம் பண்­றேன்னு முத­ல­மைச்­சர் விஜய் சொன்­ன­தா­கச் செய்தி

வந்­ததே...?

வைகோ: ஆமாம். ரெண்டு எம்.எல்.ஏ.க்களும் ராஜி­னாமா செய்­தால் இடைத்­தேர்­தல் வரும். அப்­படி ஒரு இடைத்­தேர்­தல் வந்­தால் நானே வந்து உங்­க­ளுக்கு ஆத­ர­வா­கப் பிரச்­சா­ரம் செய்­வேன் என்று முத­ல­மைச்­சர்

என்­னி­டம் சொன்­னார். .... ஆனா அந்த ரெண்டு பேர்ட்ட (கடை­ய­நல்­லூர் தி.மு.இரா­சேந்­தி­ரன், சீர்­காழி செந்­தில் செல்­வன்) சொன்ன போது செந்­தில் செல்­வன் பதிலே சொல்­லல. ‘நான் தி.மு.க.வுல தான் இருக்­கப் போறேன்­னுட்டு’ போயிட்­டாரு. ராசேந்­தி­ரன், ‘நான் ம.தி.மு.க.வா தான் இருக்­கேன். ஆனா

எம்.எல்.ஏ.வாக தொடர்­றேன்னு’ சொல்­லி­யி­ருக்­காரு.

– இது­தான் வைகோ அளித்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் ஆகும். இது அனைத்து ஊட­கங்­க­ளி­லும் வெளி­யா­னது.

 ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இரு­வ­ரை­யும் விஜய் தான் ராஜி­னாமா செய்­யச் சொன்­னார் என்று வைகோவே சொன்­னார். இது குதிரை பேரம் அல்­லவா?

இந்­தப் பேட்­டிக்கு முன்­ன­தாக நடை­பெற்ற பொதுக்­கு­ழு­வில் வைகோ பேசிய பேச்­சின் காட்­சி­கள் அவ­ரது கட்­சி­யி­ன­ரால் வெளி­யில் பரப்­பப்­பட்­டது. 

‘‘நேத்து காலைல ராசேந்­தி­ர­னை­யும், செந்­தில் செல்­வ­னை­யும் கூப்­பிட்டு, ரெண்டு பேரும் ராஜி­னாமா செய்தா ஜெயிக்க வைக்­கி­றேன்னு சி.எம். சொல்­றாரு... ராஜி­னாமா செய்­றீங்­களா என்று நான் கேட்­டேன்.

 ரெண்டு பேரும் பதில் சொல்­லல. எனக்கு நேரம் ஆகி­விட்­டது என்று சொல்லி விட்டு நான் போய்­விட்­டேன். உயர் நிலைக் குழு நடந்த போது என்­னி­டம் தனி­யா­கப் பேச வேண்­டும் என்று ராசேந்­தி­ரன் சொன்­னார்.

 ‘ராஜி­னாமா செய்­தால் ஜெயிக்க முடி­யாது’ என்று ராசேந்­தி­ரன் சொன்­னார். ‘அண்ணா தோற்­க­லையா? அடி­யேன் தோற்­க­லையா?’ என்று நான் சொன்­னேன்.

 ‘உங்­களை இதை விட உயர்ந்த இடத்­தில் நான் உட்­கார வைப்­பேன்’ என்­றேன்

. ஆனால் பதில் சொல்­லா­மல் போன ராசேந்­தி­ரன் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்­டார்” என்று பேசி இருக்­கி­றார். இந்­தக் காட்­சி­க­ளும் வீடி­யோக்­க­ளாக வந்­துள்­ளது.

‘நீங்­கள் இரு­வ­ரும் ராஜி­னாமா செய்­தால், அதன்­பி­றகு நடக்­கும் இடைத்­தேர்­த­லில் நான் வந்து பிரச்­சா­ரம் செய்­கி­றேன்’ என்று விஜய் தன்­னி­டம்

சொன்­னதாக வைகோ சொன்­னது விஜய் நடத்­திய அப்­பட்­ட­மான குதிரை பேரம் அல்­லவா?

ராஜி­னாமா செய்­யுங்­கள், அதே இடத்­தில் நீங்­களே நிறுத்­தப்­ப­டு­வீர்­கள் என்­பது தானே பேரம்?

அதை விட பெரிய பேரம் நடத்­தி­யதை வைகோவே ஒப்­புக் கொள்­கி­றார். ராஜி­னாமா செய்ய மறுத்த கடை­ய­நல்­லூர் தி.மு.ராசேந்­தி­ர­னி­டம், ‘ இதை விட உயர்ந்த இடத்­தில் நான் உங்­களை உட்­கார வைப்­பேன்’ என்று வைகோ சொன்­னது எதை மன­தில் வைத்து? 

‘அமைச்­சர் ஆக்­கு­கி­றேன்’ என்­பது தானே? அந்த வாக்­கு­று­தி­யை­யும் வைகோ­வுக்கு விஜய் கொடுத்­துள்­ளது இதன் மூலம் அம்­ப­லம் ஆக­வில்­லையா?

இவை எல்­லாம், ‘வைகோ சொன்­னா­ராம்’ என்­பது மாதி­ரி­யான கற்­ப­னை­கள் அல்ல. அவரே பொதுக்­கு­ழு­வில் பேசி­யவை. பொதுக்­கு­ழு­வுக்­குப் பிறகு பேட்டி அளித்­தவை. சமூக ஊட­கங்­க­ளில் இவை அனைத்­தும் கிடக்­கின்­றன. 

🐴 பேரத்தை யாரோ ஒரு த.வெ.க. அநா­ம­தே­யம் நடத்­த­வில்லை. முத­ல­மைச்­சர் விஜய்யே நடத்­து­கி­றார் என்­ப­தற்கு வைகோ கொடுத்­துள்ள ஒப்­பு­தல்

வாக்­கு­மூ­லம் இவை. சண்­மு­கத்­துக்கு சந்­தே­கம் இருந்­தால் வைகோ­வி­டம் கேட்­டுக் கொள்­ளட்­டும். 

ராஜி­னாமா செய்­யக் கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்­கள் என்­ப­தற்கு இந்த ஒரு உதா­ர­ணம் போதும்.

விஜய் ஆட்­சிக்கு ஆத­ர­வாக 25 அ.தி.மு.க. உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளித்­துள்­ளார்­கள். இவர்­க­ளுக்கு அமைச்­சர் பதவி தரு­கி­றேன், வாரி­யத் தலை­வர் பதவி தரு­கி­றேன் என்று ஏமாற்றி அவர்­கள் ஆத­ர­வைப் பெற்­றார் முத­ல­மைச்­சர் விஜய்.

 வோட்­டுப் போட்­ட­தும் அவர்­க­ளுக்கு ‘அல்வா’ கொடுத்­தார். அதில் 19 பேர் மீண்­டும் அ.தி.மு.க.வுக்கே போய்­விட்­டார்­கள். இது அப்­பட்­ட­மான பேரம் அல்­லவா?

இதை அ.தி.மு.க.வின் சொந்­தக் கட்­சிப் பிரச்­சி­னை­யா­கப் பார்க்க

முடி­யாது. எடப்­பாடி பழ­னி­சாமி மீதான உண்­மை­யான கோபம் என்­றால் அவர்­கள் மீண்­டும் எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மையை ஆத­ரித்து

போயி­ருக்க மாட்­டார்­கள். விஜய் ஆசை வார்த்­தையை நம்பி வந்­தார்­கள். அது நிறை­வே­ற­வில்லை என்­ற­தும் போய்­விட்­டார்­கள். இது கூடவா புரி­ய­வில்லை?

விரா­லி­மலை விஜ­ய­பாஸ்­க­ருக்­கும் கரூர் விஜ­ய­பாஸ்­க­ருக்­கும் கிளீன்

சர்­டி­பி­கேட் கொடுக்­கும் வேலையை முன்னாள் மார்க்­சிஸ்ட்.,.,இந்நாள் விஜயிஸ்ட் சண்­மு­கம் பார்க்­கத் தொடங்கி இருப்­பது மகத்­தான மாற்­றம் தான்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை