சென்ற 100நாட்கள்......
📄 முதலமைச்சர் அலுவலக டெண்டர் இறுதியாகும் முன்பே பணிகளைத் தொடங்கிய விவகாரம். பதிலுரையிலும் விளக்கம் அளிக்காததால் மேலும் வலுக்கும் சந்தேகம்.
📄கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அதிகாரப்பூர்வ கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசு. சட்டப்பேரவையில் கர்நாடகத்தின் versionயே அமைச்சர் எதிரொலித்ததாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.
📄தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாட எந்த தடையும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை என்றும் உயர் நீதிமன்றம் விளக்கம்.
📄சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க ஒப்புதல். 15 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு ரயில்வே வாரியம் ஒப்புதல்.
📄சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரியை இணைக்கும் வகையில் புதிய கடல்வழி உயர்மட்டச் சாலை. பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.
இந்தியாவின் கடனை அடைக்க அமைச்சர் கில்லி சரத் சொன்ன யோசனை.நிர்மலா சீதாராமன் கவனிக்கவும்.
அதானியை எதிர்த்து செய்தியா .கைது!
அதானி குழுமம் குறித்து ‘தி வாசிங்டன் போஸ்ட்’ செய்தி நிறுவனத்துடன் இணைந்து கட்டுரை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் ரவி நாயரின் இல்லத்தில், டில்லி காவல்துறையின் உதவியுடன் குஜராத் காவல்துறை தீவிர சோதனை மேற் கொண்டது.
அதானி குழுமத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ரவி நாயர் மீது முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இச்செய்தியை வெளி யிட்ட ‘தி வாசிங்டன் போஸ்ட்’ நிறு வனத்தின் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற நடுவரின் சோதனை ஆணையைக் காட்டி காவல் துறையினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது ரவி நாயரின் 2 கைப்பேசிகள், அவருடைய மகனின் மடிக்கணினி மற்றும் சம்பவ இடத்தில் தற்செயலாக இருந்த, இவ்வழக்கில் தொடர்பில்லாத அவருடைய நண்பர் ஒருவரின் மடிக் கணினி மற்றும் அய்பேட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.டிஜிட்டல் சாதனங்களைப் பறி முதல் செய்யும்போது, அவற்றில் உள்ள தரவுகள் பின்னர் மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வழங்கப்படும் ‘ஹேஷ் வேல்யூ’ – (டிஜிட்டல் சான்றொப்ப எண்) விவரங்களை வழங்க காவல் துறையினர் மறுத்துவிட்டனர் .பத்திரிகையாளர் மீதான இந்த நடவடிக்கை ஊடக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு அதானியை விமர்சித்தால் கைது!இங்கு ஒரு நடிகையை விமர்சித்தால் கைது!
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?மூன்று மாதங்களில் வந்த பயம்!
சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் ஒரு
நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் மாறி மாறி சல்யூட் வைத்துள்ள காட்சியை அவருக்கு வாக்களித்தவர்களாலேயே சகிக்க முடியவில்லை.
அசிங்கத்தையும் அருவருப்பையும் பட்டவர்த்தன மாகச் செய்வதன்மூலமாக அதனை நியாயப்படுத்த நினைக்கிறவர் தான் இன்று தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துள்ளார்.
மூன்றே மாதங்களில் அவருக்கு தனது செல்வாக்கு நிலைக்குமா, பதவி நிலைக்குமா என்ற பயம் வந்துவிட்டது. அதையும் அவர் உரையே காட்டிக் கொடுத்துவிட்டது.
கொடி ஏற்றிவிட்டு முதலமைச்சர் விஜய் பேசுகிறார்... “எல்லோரும் வாக்களித்துவிட்டோம், விஜய்யை ஜெயிக்க வைத்து முதலமைச்சர்
ஆக்கிவிட்டோம், எனவே கடமையெல்லாம் முடிந்து விட்டது என்று யாரும் ஒதுங்கிப் போய்விடாதீர்கள். இனிமேல்தான் நீங்கள் நம்முடனே, அரசுடனே இருக்க வேண்டும்.
அப்போதுதான் உங்களுக்காக இருக்கிற அனைத்து நல்ல திட்டங்களையும் என்னால் செயல்படுத்த முடியும்” என்று அழுது புலம்பி இருக்கிறார்.
இந்தப் புலம்பலுக்கு, இந்த அழுகைக்கு என்ன காரணம்? அவரை நம்பி வாக்களித்தவர்கள், ‘தவறு செய்துவிட்டோம்’ என்று வருந்திக் கொண்டு இருக்கிறார்கள். 10 வயது சிறுமி கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டபோது அதை மறைக்க நினைத்தது விஜய் அரசு.
‘நீங்க ஆக்ஷன் ஹீரோ... தப்பு நடந்தா நட வடிக்கை எடுப்பீங்கன்னு நினைச்சு தானே வாக்களித்தோம்’ என்று ஒரு பெண் கதறினாரே. இப்படி பல பேரும் கதறிக் கொண்டு இருக்கிறார்கள்.
தனது படத்தைத் தயாரித்த சினிமா தயாரிப்பாளர்களுக்கு மகுடம் சூட்டிக் கொண்டு இருக்கிறார் விஜய்.
‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்த வெங்கட நாராயணா தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாம். ‘பிகில்’, ‘கோட்’ படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி கோவில்களுக்கான அறங்காவலர்களைத் தேர்வு செய்யப் போகிறாராம்
. ‘லியோ’ படத்தைத் தயாரித்த ஜெகதீஷ் பழனிசாமிதான் முதலமைச்சரின் தனிச் செயலாளர். தனது ஜோசியருக்கு மகுடம். தேர்தலுக்கு முன்னதாக தனக்கு செலவு செய்தவருக்கு பதவி. இதுதான் நடக்கிறது.
இதை எல்லாம் தலையாட்டி ஏற்றுக் கொள்வார்கள் மக்கள் என்று நினைக்கிறாரா விஜய்?
பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாள் இல்லை. இதை விஜய் அரசு மறைக்கும் என்பதற்கு உதாரணம் தான் கோவைச் சம்பவம். போதை மருந்து நடமாட்டம் துளியும் கட்டுப்படுத்தப்படவில்லை. போதைப் பொருள் நடமாட்டம் குறித்து தகவல் கொடுத்த காரணத்தால் கோவை மாணவன் அமுதன் அந்தக் கும்பலால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.
அதையே மறைக்கும் வகையில், ‘இது கோஷ்டி தகராறால் ஏற்பட்ட மரணம்’ என்று சட்டமன்றத்தில் சொன்னார் அமைச்சர் ராஜ்மோகன். காவல் துறையைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், வாய் திறக்கவில்லை.அமைச்சர்கள் மீது, எம்.எல்.ஏ.க்கள் மீது வந்த புகார் மீதாவது நட வடிக்கை எடுத்துள்ளாரா விஜய்? திருவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது விஜய் ரசிகை ஒருவரே பாலியல் புகார் சொன்னார். அந்த
ரசிகையை கட்சியைவிட்டு நீக்கிவிட்டு சரவணனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார் விஜய். ‘அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில்
லஞ்சம்’ என குற்றம் சாட்டிய த.வெ.க. வழக்கறிஞர் கட்சியை விட்டு
நீக்கப்பட்டுள்ளார். பவுடர் பயன்படுத்தி அதை வீடியோ எடுத்துப் போட்ட அமைச்சர் சரத்குமார் இன்னமும் அமைச்சரவையில் இருக்கிறார்.
100 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்தை அபகரித்த செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் ரமேஷ் இன்னமும் அமைச்சராகத் தான் நீடிக்கிறார். எவர்மீதும் இதுவரை விஜய் நடவடிக்கை எடுத்தது இல்லை.
அரசைப் பற்றி விமர்சித்து ‘ட்விட்டர்’ போட்டால் கைது. நீதிமன்றங்கள் நித்தமும் த.வெ.க. ஆட்சியாளர்கள்மீது தலையில் கொட்டுகின்றன.
சொரணையே இல்லை இவர்களுக்கு. இப்படித்தான் போய்க் கொண்டு இருக்கிறது ஆட்சி. இதை எல்லாம் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறார் விஜய்.
சுதந்திர தின விழாவுக்கு ஒரு நடிகையை அழைத்துவந்து, அவருக்கு ‘சல்யூட்’ அடிப்பதை விஜய் ரசிகர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடிய
வில்லையே... மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
சுதந்திர தினத்தன்று விடுதலைப் போராட்ட வரலாறுகளை ஊடகங்கள் வெளியிடும். ஆனால் இம்முறை நடிகை ஒருவருடன் முதலமைச்சர் இதுவரை ஐந்து முறை ஒன்றாக வெளியில் வந்துள்ளார் என்று வரலாறு போடும் கேவலத்தைப் பார்க்கிறோம்.
‘விஜய் நன்றாக டான்ஸ் ஆடுவார்’ என்பதற்காக ஏறிய மின்சாரக்
கட்டணத்தை ஏற்றுக் கொள்வார்களா மக்கள்? ‘விஜய் அழகாகச் சிரிக் கிறார்’ என்பதற்காக ‘சொத்து வரியை எவ்வளவு வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி விடுவார்களா தமிழ்நாட்டு மக்கள்?
சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். ‘உங்களுக்குத் தான் வாக்களித்தோம்... வாக்களித்ததற்காக வருத்தப்படுகிறோம்’ என்று சொல்லும் வீடியோக்கள்தான் அதிகமாகப் பரவுகின்றன.
அதனால்தான், ‘என்னோடு இருங்கள், போய்விடாதீர்கள்’ என்று கழிவிரக்கம் தேடப்பார்க்கிறார் விஜய்.
மக்கள் ஏமாளிகள் அல்ல. அவர் இன்னமும் தனிமைப்படுத்தப்படுவார்.
அந்த நூறு நாட்கள்!கடந்த 100 நாளில் 546 குற்றச்சம்பவங்கள் நடந்தது தான் தவெக அரசின் சாதனை என திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் இ.பரந்தாமன் கூறினார்.
" தவெக அரசு பொறுப்பேற்ற போது ‘இட்ஸ் எ பிகினிங் ஆப் ஏ நியூ எரா’ என்று சொன்னார். உண்மை தான், இது ஒரு நியூ எரா 100 நாளில் 546 குற்றச்சம்பவங்களைச் செய்த ஒரு நியூ எரா இன்னைக்கு விஜய்யினுடைய சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியின் சாதனை இது.
‘பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன்னு சொன்னார். ஆனால், இன்னைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும்.
காவல் துறையை கையில் வச்சிருக்கக்கூடிய முதல்வர் ‘ஜென்-ஸி’ பிள்ளைகள் எல்லாம் உங்களுக்கு ஆர்வமாக வாக்களித்தார்களே, இந்த முதல்வருக்கு, இன்னைக்கு ‘ஜென்-ஸி’கள் மட்டும் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்றைக்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள்,
இந்த கொலைப் பழியை முதல்வர் ஏற்று தான் ஆக வேண்டும். கோவையில் போதைப்பொருளைப் பற்றி தகவல் கொடுத்ததாகச் சொல்லி, மாணவனை அடித்துக் கொன்றுள்ளனர்.
அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், ‘அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தான் எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்’ என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. நேற்றைக்கு திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை (ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன்) ஓடவிட்டிருக்கிறார்கள்.
இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்களை தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை.
சினிமா படத்தில் நடிப்பது போலவே இன்னைக்கு ஆட்சியிலும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். 100 நாளில் சாதித்தது என்ன என்று ஒரு வீடியோ வெளியிடுகிறீர்கள், அதில் பதவி ஏற்பு விழாவில் பேசிய பேச்சையும் விட்ட டயலாக்குகளையும்தான் காட்டியிருக்கிறீர்களே தவிர, சாதனையை அல்ல பத்திரிகையாளர்களைச் சந்தித்துச் சாதனை எதையாவது சொல்லியிருக்கிறாரா?
100 நாள் ஆச்சே இது அறிவிக்கப்படாத அவசரநிலை.
மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லும் முதலமைச்சர் விஜய், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் யூஜிசி பிரதிநிதியை நியமிக்க ஒப்புக்கொண்டது ஏன்?
பொம்மை முதலமைச்சராக, டம்மி முதலமைச்சராகத்தான் இவர் இருக்கிறார். இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான ‘சர்க்கார்’ அல்ல, வெறும் ‘சர்க்கஸ் சர்க்கார்’ நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது. இவ்வாறு அவர் கூறினார்.
‘‘மேகதாது அணணை கட்டப்படுவதை தடுக்கத் தனியாக டிரிப்யூனல் அமைக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடத்தில் போய்க் கேட்டிருக்கீங்களா? ஒன்றிய அரசிடத்தில் பம்புகிற முதலமைச்சராகத்தான் இருக்கிறீர்களே
தவிர, தமிழ்நாட்டில் சட்டமன்றத்திலும் வெளியிலேயும் மட்டும்தான் பாயும் முதலமைச்சராகக் காட்டிக்கொள்கிறீர்கள்’’ என்று பரந்தாமன் தெரிவித்து உள்ளார்.





