வாக்குறுதிகள் என்னவாச்சு?"
உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க அவசர மனு
காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதன் அவசியம் என்ன என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.
அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தை பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன. இந்தியாவில் முதல்முறையாக இக்கணக்கெடுப்பில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக பிரத்யேக செல்போன் ஆப் மூலம் டேட்டா பதிவு செய்யப்படும். 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

"ரீல்ஸ் போடுவது அரசியல் அல்ல!" – ஆர்.பி. உதயகுமார்
திருநெல்வேலியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டணிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறுகையில், “தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரலாறும் இல்லை, தெளிவான கொள்கையும் இல்லை. அனுபவம் இல்லாத ஒருவரிடம் எட்டு கோடி மக்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சர் பதவியை ஒப்படைப்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவதால் அரசியல் செய்ய முடியாது. தொண்டர்களின் நாடித்துடிப்பை அறிந்து, மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து செயல்படுவதே உண்மையான அரசியல்,” என்று தெரிவித்தார்.
அரசு ஆவணத்தை கோயிலில் வைப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது.!
மடத்தனம்!" – முவீரபாண்டியன்
தமிழக வேளாண் அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட் வரைவு நகலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து வழிபட்ட சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட ஒருவரின் விவகாரமாக இருக்க வேண்டும்; அதை அரசுடனோ, அரசியலுடனோ கலக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
மேலும், அரசு ஆவணமான வேளாண் பட்ஜெட் வரைவு நகலை கோயிலில்
வைத்து வழிபட்டது இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு
எதிரான செயலாகும் என்றும், இதுபோன்ற மடத்தன நடைமுறைகளை தமிழக வெற்றிக் கழக
அமைச்சர்களும் அரசும் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள். இந்த மறுவரையறை தமிழ்நாடு மக்களிடம் இருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்.
இது தமிழ்நாட்டை கடுமையாக பாதிக்கும் விவகாரம் மட்டுமல்ல, மக்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினையாகும்.
எனவே, தொகுதி மறுவரையறை
திட்டத்தை தமிழ்நாட்டு மக்களும், அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைந்து
வீழ்த்த வேண்டும்" என்று வலியுறுத்தினா
"தேர்தல் வாக்குறுதிகள் என்னவாச்சு?"
தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக,
"நண்பா, நண்பா... தேர்தல் அறிக்கை என்ன ஆச்சு நண்பா? பயிர் கடன் தள்ளுபடி என்ன ஆச்சு நண்பா?" என்று கோஷமிட்ட அவர்கள்,
தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும்,
விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேகதாது அணைத் திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன், தமிழகத்தின் நீர்வள உரிமையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது அவர், "ஓடு ஓடு வேட்டைக்காரன் என்று பாடுனிங்களே... கர்நாடகாவுக்கு போய் வேட்டையாடுங்கண்ணே" என்று விமர்சனமாக பேசியது கவனம் பெற்றது.
மேலும், மேகதாது அணைத் திட்டத்தை மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் கைவிட வேண்டும் என்றும், காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
