ஒரே அர்த்தம்தான்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,998 கனஅடியாக அதிகரிப்பு
🗞️ 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு. தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து ஒன்றரை மணி நேரம் போலீசார் விசாரணை.
🗞️ ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என தவெக அரசின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம். முதலமைச்சர் விஜய், தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமென அறிவுரை.
🗞️ கொட்டும் மழையிலும் செங்கிப்பட்டி காவல்நிலையம் முன் திரண்ட திமுக தொண்டர்கள். விசாரணை முடிந்து வெளியே வந்த உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு.
🗞️ உதயநிதி கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தலைவர்கள் கண்டனம். எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையை நடத்த திட்டமா? என கேள்வி.
🗞️ விவசாயிகள் பிரச்சனையை திசைதிருப்பவே கைது செய்திருப்பதாக உதயநிதி குற்றச்சாட்டு. 3,000 போலீசாருடன் தீவிரவாதி போன்று அழைத்துச் சென்றதாக கண்டனம்.
ஒரே அர்த்தம்தான்....!
காவிரி பிரச்சினை தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை. ஒரே அர்த்தத்தில் தான் பேசினேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த பின் விடுக்கப்பட்ட அவர், சென்னை செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று இரவு கூறியது: தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் நடைபெற்றற ஆர்ப்பாட்டத்தில், இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்களை பற்றித்தான் பேசினேன்.
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்து பேசவும் தைரியம், தெம்பு இல்லை. எனவே முதல்வர் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
நாங்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத திராணியில்லாத டம்மி முதல்வர் நமக்கு வாய்த்துள்ளார்.
அதையெல்லாம் விட்டுவிட்டுநான் பேசாத ஒரு விஷயத்தை ‘கட் காபி பேஸ்ட்’ செய்து சில விஷயங்களை சேர்த்துள்ளனர். இந்த அரசின் கொள்கையே திசைத் திருப்பும் யுக்தி தான்.
நான் பேசாத விஷயத்தை திரித்து பரவவிட்டுள்ளனர். போலீஸார் கைது செய்ய வந்தனர். நானும் முழு ஒத்துழைப்பு அளித்தேன்.
நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கைது செய்யும் நோக்கம் கிடையாது, விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றார். போலீஸார் முறையாக நடத்தவில்லை.
நான் எந்தவிதமாக தவறான எண்ணத்தில், புண்படுத்த வேண்டும்; பெண்களை தாழ்த்திப் பேச வேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட கிடையாது. என்குடும்பம் என்னை அப்படி வளர்க்கவில்லை.
எனக்கு திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தை, தங்கை உள்ளனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தாய்மாரும் எனது தாயாக, தங்கையாக நினைக்கிறேன். பொய் வழக்கு போட்டு அச்சுறுத்த நினைத்தனர். அதற்கு பயப்படும் ஆள் நான் இல்லை.
சில தலைவர்கள் நான் பேசியதை பார்க்காமல் ஆராயாமல் நான் தவறாக பேசியதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னை கைது செய்ததற்காக நான் பயப்பட மாட்டேன்.
நான் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை. ஒரே அர்த்தத்தில் தான் பேசினேன். தொடர்ந்து பேசுவேன். இந்த அரசுக்கு நிச்சயம் மக்கள் பதிலை தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசின் கொள்கைத் தோல்வி!
கேரளாவில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி (யுடிஎப்) அரசு, ஒன்றிய பாஜகஅரசின் ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான விசயத்தில் எடுத்துள்ள வெளிப்படைத்தன்மையற்ற, முரண்பாடான நிலைப்பாடு அதன்சித்தாந்த ரீதியான வீழ்ச்சியையும் கொள்கைத் தோல்வியையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றிய பாஜக அரசின் தேசியக்கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்தும், இத்திட்டத்தில் முந்தைய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கையெழுத்திட ஆலோசித்ததை ‘காவிமயமாக்கல்’ என்றும் சாடிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள்,அதிகாரத்திற்கு வந்தவுடன் ஒரே அடியாக தலைகீழ்பல்டி அடித்துள்ளனர்.
ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ள 1,158.13 கோடி ரூபாய் கல்வி நிதியைப் பெறுவதற்காகவே இத்திட்டத்தைச்செயல்படுத்துவதாகக் கூறித்தப்பித்துக் கொள்ள யுடிஎப் அரசு முயல்கிறது. முதலமைச்சர் வி.டி. சதீசனும், யுடிஎப் அமைப்பாளர் அடூர் பிரகாஷும் இத்திட்டம் குறித்து அடுத்தடுத்து முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்துமக்களின் கவனத்தைத் திருப்பப் பார்க்கின்றனர்.“ஒப்பந்தத்தில் இருந்து விலக மாநிலத்திற்கு அதிகாரமில்லை” என்றும், “முந்தைய அரசின் முடிவைத்தொடர்கிறோம்” என்றும் சாக்குப்போக்கு கூறும் யுடிஎப் தலைவர்கள், தேசியக் கல்விக் கொள்கையை மாநிலக் கல்வி முறைக்குள் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டத்திற்குப் பலியாகியுள்ளனர்.
முந்தைய எல்டிஎப் அரசு உடனடியாக அந்தயோசனையைக் கைவிட்டு, தனது மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது நினைவு கூரத்தக்கது.
கல்விப் பாடத்திட்டத்தில் ஒன்றிய அரசின்தலையீடு, என் சி இ ஆர் டி வழிகாட்டுதல்கள்மற்றும் மாநில சுயாட்சி மீதான தாக்குதல்களை உணர்ந்தும், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பாஜகவின்திட்டத்திற்கு அடிபணிவது வெட்கக்கேடானது.
தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஒன்றிய அரசின் நிதி மிரட்டலுக்குப்பணியாமல் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தங்களின் மாநிலக் கல்வி உரிமையைப் பாதுகாத்துப் போராடி வரும் நிலையில், யுடிஎப் அரசின் இந்தச் சரணாகதி அரசியல் அம்மாநிலப் பொதுக் கல்வித்துறைக்கே பேரபாயமாக உருவெடுத்துள்ளது.
அமைச்சரவை உபகுழு அமைத்து நாடகமாடுவதை நிறுத்திவிட்டு, மாநிலக் கல்வி சுயாட்சியைக் காக்கவும், சங் பரிவாரத்தின் கல்விக் கொள்கையைத் தடுத்து நிறுத்தவும் யுடிஎப் அரசு உடனடியாகஉறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாநில உரிமைகளையும் மதச்சார்பற்ற கல்வி அமைப்பையும் ஒன்றிய பாஜக அரசிடம் அடகு வைக்கும் யுடிஎப் அரசின் இந்த இரட்டை வேடத்தையும் கொள்கையற்ற போக்கையும் அம்மாநில முற்போக்குச் சக்திகளும் மக்களும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
