கோவை பிணநாயகன்?

 நியாயமான மறுசீரமைப்பு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக திமுக திட்டவட்டம். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தவர் ஸ்டாலின் தான் என உதயநிதி பேச்சு.📄 தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று எம்பிக்கள் கூட்டம். மேகதாது விவகாரத்தில் திசைதிருப்ப(டேக் டைவர்ஷன்) அரசியல் என திமுக விமர்சனம்.சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்.

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.832 கோடியில் அண்ணன் சீர் திட்டத்தை செயல்படுத்த முடியாது: ரகுபதி பேச்சு📄 காங்கிரஸின் அழுத்தத்தால் எம்.பி.க்கள் கூட்டத்தை தவெக அரசு நடத்துவதாக அன்புமணி குற்றச்சாட்டு. திமுகவின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள திட்டம் என்றும் பேட்டி.பெண் செய்தி வாசிப்பாளர் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை; பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர், மனைவியை ரிமாண்ட் செய்ய மாஜிஸ்திரேட் மறுப்பு: தம்பதி நள்ளிரவில் விடுதலை📄 மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட என்ன பயம்? என உதயநிதி கேள்வி. டெல்டா மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.📄 கடந்த ஆட்சியின் திட்டங்களின் பெயர்களை மாற்றக்கூடாது என இபிஎஸ் வலியுறுத்தல். திட்டங்களின் பெயர்களை மாற்றுவதுதான் மாற்றமா? என அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கேள்வி.



🔴 கோவையில் 
ஜனநாயகன் பிணநாயகன்?
பட பாணியில் கொடூர கொலை


🔴 சுத்தியலால் அடித்தும், கழுத்தை அறுத்தும், ரத்தத்தை ருசித்தபடி ரீல்ஸ் வெளியிட்ட சிறுவன்

🔹கோவை கிணத்துக்கடவு அருகே சிக்கலாம்பாளையம், உதயம் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் அஸ்வின் (22)

🔹இதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் சேகர் என்பவரது மகன் மாதேஷ் (22), ஆகிய மூவரும் நண்பர்கள்

🔹நேற்று முன்தினம் இரவு மற்றொரு நண்பரான விக்னேஷ் என்பவரின் காலி வீட்டில் மது குடித்தனர். போதை தலைக்கு ஏறியதும் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

🔹இதில், ஆத்திரமடைந்த சிறுவன் மற்றும் மாதேஷ் சேர்ந்து அஸ்வின் தலையில் சுத்தியலால் கொடூரமாக தாக்கினர்

🔹அவர் உயிருக்கு போராடியபோது துடிக்க, துடிக்க கழுத்தை அரிவாள் மற்றும் கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். அஸ்வின் இறந்ததை உறுதி செய்த பின்னர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்


🔹அஸ்வினின் சடலம் அருகே ரத்தக்கறையுடன் சுத்தியல், அரிவாள், கத்தி ஆகியவை கிடந்தது. சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

🔹அண்மையில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீசானது. இதில், சுத்தியலால் வில்லனை அடித்துக்கொல்லும் விஜய் அதில் வடிந்த ரத்தத்தை ருசித்தபடி வருவார்

🔹அதே போன்று அஸ்வினை பயங்கர ஆயதங்களால் தாக்கிய கொலையாளிகள் இருவரும், அவரது கழுத்தை அறுத்த கத்தியில் வழியும் ரத்தத்தை ருசித்தபடியும், அஸ்வினின் சடலத்தின் மீது ஏறி நடனமாடியபடியும் செல்போனில் படம் பிடித்து ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர்

🔹இந்த சைக்கோ தனமான வீடியோவை நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த கொடூர கொலை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இவை தவிர, ஜி20 (G20), பிரிக்ஸ் (BRICS), குவாட் (QUAD) மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) போன்ற சர்வதேச அமைப்புகளின் உச்சி மாநாடுகளிலும் பங்கேற்று வருகிறார்.


அந்த வகையில் பிரதமர் மோடியின் பயணச் செலவுகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், “நடப்பாண்டில் மலேசியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி, பிரான்ஸ், ஸ்லோவாக்கியா, சீஷெல்ஸ், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதாகவும் இதற்காக சுமார் 74.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் கடந்த ஆண்டு, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஜப்பான், பிரேசில், சவுதி அரேபியா, பூடான், தென்னாப்பிரிக்கா, ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா உட்பட மொத்தம் 23 நாடுகளுக்குப் பயணம் செய்த நிலையில், அதற்காக சுமார் 187 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 2021 முதல் 2026 வரை பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 550 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளத

ஆபத்தான கேள்வி


மேற்கு வங்கத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் சுவேந்து அதிகாரி,

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புச் திருத்தச் செயல்பாட்டில் சேர்க்கப்படாத 27 லட்சம் பேரைச் சுட்டிக்காட்டி, அவர்கள் குடியுரிமை இல்லாதவர்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.


இக்கூற்றை உடனடியாக மறுத்த அம்மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர், கணக்கெடுப்பு என்பது வாக்காளர் பட்டியலிலிருந்து முற்றிலும் தனித்துவமானது என்றும், அந்நிய நாட்டவர் உட்படநாட்டின்எல்லையிலுள்ள ஒவ்வொரு நபரும் இதில் கணக்கிடப்படுவர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.


இந்தியச் சட்டத்தின்படி வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை கணக்கெடுப்பு, குடியுரிமை தீர்மானம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகிய நான்கும்முற்றிலும் வேறுபட்ட சட்டப்பூர்வ நோக்கங்களைக் கொண்டவை. வாக்காளர் பட்டியல் தொகுதியில் வாக்களிக்கத்தகுதியானவரைத் தீர்மானிக்கிறது;

மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்கிறது;குடியுரிமை என்பது குடியுரிமைச் சட்டத்தின் கீழ் மட்டுமே தீர்மானிக்கப்பட முடியும்.


மேலும், மேற்குவங்க அரசுத்தரப்பில் கூறப்படும் 27 லட்சம்’ பேரின் மேல்முறையீடு என்ற புள்ளிவிவரத்திற்கு முறையான சான்றுகள் இல்லைஎன்பதோடு, உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 34 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளுடன் இத்தரவுமுரண்படுகிறது.


1948ஆம் ஆண்டின் மக்கள் தொகைகணக்கெடுப்புச் சட்டத்தின்படி, கணக்கெடுப்புத் தரவுகள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.


இத்தரவுகளை வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுவதோ அல்லதுகுடியுரிமைச் சோதனையாக மாற்றுவதோ சட்டவிரோதமானது. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு, இம் மாநில பெண்களுக்கு அளிக்கப்படும் நிதியுதவி திட்டம் மற்றும்ரேஷன் கார்டு சரிபார்ப்பு போன்ற பிற நிர்வாகத் துறைகளில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரதிருத்தமுடிவுகளை மேற்கு வங்க அரசு பயன்படுத்தி வருகிறது.


பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரதிருத்த பணி குறித்த வழக்கில், தேர்தல் ஆணையம் வாக்காளர் தகுதிக்காக மட்டுமே குடியுரிமை குறித்து விசாரிக்க முடியும் என்றும்,அது குடியுரிமையை இறுதியாகத் தீர்மானிக்கமுடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


எனவே, ஒரு நபர் வாக்காளர் பட்டியலின் சிக்கலான மேல்முறையீட்டு செயல்பாட்டில்பங்கேற்காததை, அவர் இந்தியரே அல்ல என்பதற்கான ஆதாரமாகச் சித்தரிக்கமுயல்வதுமேற்குவங்கமுதல்வரின் ஒரு தீவிரமான எல்லை மீறலாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய