மாற்றம் இல்லை!

📰 அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
📰 தேர்தலுக்கு பின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டோரை மீண்டும் சேர்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் வற்புறுத்தல்.
📰 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு.
📰 ஜார்க்கண்டில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து 3 தேர்வுகளை ரத்து செய்ய அரசு ஒப்புதல். தேர்வு முறைகேடு புகாரில் மாநில தேர்வாணையத்தின் 3 உறுப்பினர்கள் ராஜினாமா
📰 அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தை கைவிட்டு ஈரான் போரை முடிவு கொண்டு வர டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல். ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்க முன்வர வேண்டும் என நிபந்தனை வைக்கவும் திட்டம்.
📰 அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்க வேண்டும். ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் நிபந்தனை
இந்தியாவிற்குப் பெரும் ஆபத்து - எச்சரிக்கை
வழக்கமாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பசிபிக் பெருங்கடலில் நிகழும் எல் நினோவின் போது கடல்நீர் சற்று வெப்பமடையும்.
ஆனால், தற்போது உருவாகி வரும் 'சூப்பர் எல் நினோ' ஒட்டுமொத்த உலக வானிலையையுமே தலைகீழாக மாற்றிப்போடும் சக்தி வாய்ந்தது.
அதாவது முன்பு எப்போதும் இல்லாத வகையில், கலிபோர்னியா அருகே சுமார் 8,000 கிலோமீட்டர் நீளத்திற்கு உதாரணத்திற்கு இந்தியாவிலிருந்து லண்டன் வரையிலான தூரம் என்று மாபெரும் கடல் வெப்ப அலையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
1870-களுக்குப் பிறகு உருவாகும் மிக வலிமையான இந்த எல் நினோ, கடல் வாழ் உயிரினங்களை அழிப்பதுடன், உலகளாவிய காலநிலை அமைப்பையே சீர்குலைக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியா, மத்திய ஆப்பிரிக்கா மற்றும் அமேசான் காடுகளில் கடுமையான வறட்சியையும், கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீயையும் இது உருவாக்கும்.
அதே நேரத்தில், அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்குப் பெய்யும் பெருமழை, பேரழிவு வெள்ளத்தை ஏற்படுத்தும்.
சூப்பர் எல் நினோவால் இந்தியாவின் விவசாயத்தையும் வானிலையையும் நேரடியாகப் பாதிக்கவுள்ளது.
கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பருவமழைக்கு முன்பே ஏப்ரல் மாதத்திலேயே 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பம் பதிவானது.
ஜூன்-செப்டம்பர் தென்மேற்குப் பருவமழை பலவீனமடையும்.இதனால் வடமேற்கு இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் அழியும் என அமெரிக்காவின் S&P Global Ratings நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உணவு தானிய உற்பத்தி குறைவதால், மார்க்கெட்டில் பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரிக்கும். இறுதியில் இது சாதாரண மக்களின் மாபெரும் பொருளாதார நெருக்கடியாக மாறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயிர் இழப்புகளைக் குறைப்பதற்காக மாவட்ட ரீதியாக விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, திறமையான நீர் மேலாண்மை மற்றும் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை ஊக்குவிப்பது போன்ற முன்முயற்சிகளை இந்திய அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது
இச்சூழலில் நாம் 'வெட்-பல்ப் வெப்பநிலை' (Wet-Bulb Temperature) என்ற அறிவியல் விதியைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, வெப்பமும் உயரும் போது, மனித உடலால் வேர்வை மூலம் தன்னைத் தானே குளிர்வித்துக்கொள்ள முடியாது.
இது உயிரியல் ரீதியாக மனித உயிருக்கே ஆபத்தானது. ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்கத் தொடங்க வேண்டும். விவசாயிகள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மாற்றுப் பயிர்களுக்கு மாற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொள்கையில் மாற்றம் இல்லை!சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற தி.மு.க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வி.சி.க நிர்வாகியுமான ஆளூர் ஷாநவாஸ், அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் தங்களது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் ஆளூர் ஷாநவாஸ் பேசியதாவது; மாற்றம் நடந்துவிட்டது. ஆட்சி மாறிவிட்டது, காட்சி மாறிவிட்டது, அணிமாற்றம் நடந்துவிட்டது.
ஆனால் அதற்காக எம்மைப் போன்றவர்கள் கொள்கையை மாற்ற முடியுமா? 3 மாதத்திற்கு முன்னால் வரை முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க, அவர் ஆற்றிய பணிகள் என்னென்ன என்றெல்லாம் பட்டியல் போட்டு நீட்டி முழங்கிய நாங்கள், இப்போது எங்கள் வாயைப் பூட்டி வைக்க முடியுமா?
‘திராவிட மாடல், இந்தியாவுக்கே ரோல் மாடல்’ என்று சொல்லி மேடைதோறும் முழங்கியிருக்கிறோம், மக்களிடம் போய் பேசியிருக்கிறோம்.
இல்லை இல்லை இப்போது மூன்று மாதத்தில் அது திராவிட மாடல் அல்ல என்று மாற்றிப் பேச முடியுமா? பேச முடியாது. பல ஆண்டுகளாக எந்தக் கருத்தை மக்களிடம் சொன்னோமோ, எந்தக் கொள்கையை முன்னிறுத்தினோமோ, எந்தக் கொள்கையின் ஐகானாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பார்த்தோமோ, அதை அப்படியே பார்க்கிறோம்,
அப்படியே தொடர்கிறோம். எந்த மாற்றமும் எங்களிடம் இல்லை. மாற்றிப் பேச முடியாது; மாற்றிப் பேசினால் அது மலிவான அரசியலாகப் போய்விடும். மலிவான அரசியல் செய்ய எமக்குத் தெரியாது” என்று அவர் பேசினார்.



