இதற்கு மேல் அவமானம்..?
பழநி மடத்தின் ரூ.150 கோடி இடத்தை பாஜ பிரமுகர் மனைவி ஆக்கிரமிப்பு: மீட்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு
வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட கனிமவள தடையை எதிர்த்து பொதுநல வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
தமிழை தாழ்த்தி பேசியதற்கு அமைச்சர் மரியவில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.828.36 கோடி விடுவிப்பு
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், பிறகே தேசிய கீதம்; தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாட அறிவிப்பாணையில் வற்புறுத்தவில்லை: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்..
சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!
நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்.
நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் கோழைகள்: மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன்.
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
தமிழகம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு அமைப்பு - ரூ. 264 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு
தனது மனோன்மணீயம் நாடகத்தில் தமிழ்த் தெய்வ வணக்கமாகச் சுந்தரனார் அவர்கள் இயற்றிய பாயிரப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து அதனை தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் முதன்மையாக பாட மார்ச் 11.1970 அன்று அரசாணை வெளியிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த 2021 ஆம் ஆண்டு அரசாணை எண் 1037 நாள் 17.12.2021 மூலம், "தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள். பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்." என்ற அரசாணையே உள்ளது..
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதும் தான் தமிழ்நாட்டினுடைய நெடுங்கால மரபு.. அதனை மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிட்டதும் தலைவர் மு. க ஸ்டாலின் அரசு தான்..
ஆனால் அந்த மரபை பாதுகாக்க தெரியாமல், ஒன்றிய அரசுக்கும் & ஆளுநருக்கும் அடிபணிந்து மூன்றாவதாகவே "தமிழ்த்தாய் வாழ்த்து" இசைக்கப்பட்டது த.வெ.க ஆட்சியில்.
கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் கண் துடைப்புக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது த.வெ.க அரசு! 
இதற்கு மேல் அவமானம் வேண்டுமா?
காவிரி பிரச்சினையில் தனியாகச் சென்று கர்நாடக அரசிடம் பேசுவ தாகவும், ‘ஹீரோவைப் பார்த்த மயக்கத்தில்’ அவர்கள் தண்ணீரைத் திறந்து விடுவதாகவும், அதனைப் பெரிய சாதனையாகத் தமிழ்நாட்டு
மக்கள் கொண்டாடுவதாகவும் முதலமைச்சர் விஜய் கனவு கண்டார். அது நடக்கவில்லை என்றதும், ‘தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்குவேன்’ என்று சோக நடிப்பையும் காட்டுகிறார். எவ்வளவு
கோக்குமாக்கு?
‘காவிரியில் நீர் உரிமையை நிலைநாட்டுவதற்காக முதலமைச்சர் விஜய், கர்நாடகம் செல்லப் போகிறார்’ என்று முதலில் சொன்னது வேளாண் துறை அமைச்சர் தான். ‘இதனால் எந்தப் பயனும் இல்லை, சும்மா கணக்குக் காட்டத்தான் பயன்படும்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.
உழவர்அமைப்புகளும் இதே கருத்தைச் சொன்னார்கள். அதை மீறி கர்நாடகம் செல்வதில் உறுதியாக இருந்தார் விஜய்.
எதிர்ப்புகள் பலமாக, தொடர்ச்சியாக எழத் தொடங்கியதும்,
போகிறோமா, இல்லையா என்பதையே சொல்லாமல் மவுனம் சாதித்தார் முதலமைச்சர் விஜய்.
‘முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லும் திட்டம் இல்லை’ என்று இன்னொரு அமைச்சரை வைத்துச் சொல்ல வைத்தார்கள். ஆனால் இதில் முழு உண்மையை கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரே உடைத்து விட்டார்.
‘‘கர்நாடகா வரும் முதலமைச்சர் விஜய்யை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கக் காத்திருக்கிறேன். அவரிடம் கர்நாடகாவின் தற்போதைய நிலை குறித்து விளக்குவேன். காவிரி விவகாரம் குறித்து தொலைபேசியில் முதலமைச்சர் விஜய் என்னிடம் பேசினார்.
கர்நாடகாவின் நீர்நிலைகளைப் பார்வையிடவும் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மேகதாது உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை முதலமைச்சர் விஜய் பார்வை யிடுவதற்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கிறது” என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரே சொன்னார்.
கர்நாடக முதலமைச்சரிடம், தான் பேசி இருக்கிறேன் என்பதையும் விஜய் வெளிப்படுத்தவில்லை.
மாநிலத்தின் மிக முக்கியமான பிரச்சினை பற்றி, இன்னொரு மாநில முதலமைச்சருடன் பேசியதையே மறைத்தார் விஜய்.
அடுத்ததாக, ‘கர்நாடகா வந்து பேசுகிறேன் என்ற விருப்பமானது தமிழ்நாடு முதலமைச்சரிடம் இருந்துதான் வந்தது’ என்பதையும்
அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சொன்னார். அப்போதும் தமிழ்நாடு அரசு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
‘போகவேண்டாம்’ என்று தமிழ்நாட்டு மக்கள் சொன்னதைப் போலவே, ‘வரக்கூடாது’ என்று கர்நாடகாவிலும் பலரும் கொந்தளித்தார்கள்.
‘வர விடக் கூடாது’ என்று தடை போட்டார்கள்.
* முதலில் விஜய்யை வரச் சொன்னார் கர்நாடக முதலமைச்சர்.
பின்னர் அவரே வர வேண்டாம் என்றார். இந்த அவமானம் தேவையா?
* கன்னட அமைப்புகள் மிகக்கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.
* முதலமைச்சர் விஜய்யின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.
இந்த அவமானம் தேவையா?
* ‘ஜனநாயகன்’ பட விளம்பரப் பலகைகள் கிழித்து எரியப்பட்டுள்ளன.
இந்த அவமானம் தேவையா?
* மாண்டியாவில் பல திரையரங்குகளில் விஜய் படக் காட்சிகள் ரத்து
செய்யப்பட்டன. இந்த அவமானம் தேவையா?
* விஜய் வருகையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப் பட்டது. இந்த அவமானம் தேவையா?
* கர்நாடக – தமிழ்நாட்டு எல்லையில் தீப்பந்தம் ஏந்தி எதிர்ப்புத்
தெரிவித்துள்ளார்கள். இந்த அவமானம் தேவையா?
– இவ்வளவு அவமானங்களையும் பட்ட பிறகு, ‘தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்குவேன்’ என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? இவ்வளவு நாட்கள் கழித்து எதற்காக இதைச் சொல்ல வேண்டும்?
‘‘நட்பான ஒரு சூழலில் நாம் சந்திக்க வேண்டும் என்று நான் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நீதிமன்ற வழக்குகள் முடியட்டும். நதிநீர் தொடர்பாக மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைகள்
சீராகட்டும். இந்த நாட்டின் சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். இப்போது இருப்பதை விட இன்னும் இணக்கமான சூழலில் நாம் சந்திப்போம்” – என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சொல்வதும் –
“நான் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துத் தான் பெங்களூருவுக்குச் செல்ல நினைத்தேன். பக்கத்து மாநிலத்தோடு பேசிப் பார்த்தால் என்ன என்று நினைத்தேன். அந்த முயற்சியில் அவமானம் நேர்ந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் சொல்வதும் உலக மகா நடிப்புகளாக உள்ளது.
இரு மாநில முதலமைச்சர்களும் பேசி வைத்துக் கொண்டு ஏமாற்று கிறார்கள் என்பதை உணர முடிகிறது.
‘ஜனநாயகன்’ படம் கர்நாடகாவிலும் ரிலீஸ் ஆகிறது. அந்த வசூலையும் முடித்த பிறகு இப்பிரச்சினை பற்றி பேசலாம் என்று நினைத்திருந்தாரா விஜய்? ‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா
செல்லவே திட்டமிட்டாரா விஜய்? ‘கர்நாடகா வருகிறார் விஜய்’
என்பதன் மூலமாக அங்கு படத்தை ஓட்டத் திட்டமிட்டிருக்கிறார் விஜய் என்றே நினைக்கத் தோன்றுகிறது.