திருப்பதிக்கு அரோகரா(

 பரந்தூர் ஏர்போர்ட் அரோகரா 

திருப்பதிக்கு கிடைத்த வாய்ப்பு .

 வேகமாக வளர்ச்சியை எட்டும் ஆந்திர அரசு

தமிழக அரசு இன்றைய தினம் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்த சூழலில் ஆந்திர மாநிலத்தின் திருப்பதி விமான நிலையத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டிற்கு 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் புதிய பயணிகள், சரக்கு போக்குவரத்து,

சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, புதிய விமான சேவை என நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இதை கருத்தில் கொண்டு கடந்த திமுக ஆட்சியில் பரந்தூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.


ஆனால் அப்பகுதி கிராம மக்களின் தொடர் எதிர்ப்பால் நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி ஏற்பட்டது.


ஏறக்குறைய. 94%நிலம் எடுக்ப்பட்டு அதற்கானப் பணத்தையும் நில உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டபின் வெறும் கீழ்த்தரமான த.வெ.க,அரசியல் செயததால் திட்டத்தை விஜய் கைவிடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் விவசாயிகளையும், குடியிருப்புகளையும் அதிக அளவில் பாதிப்பதாக கூறி பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதனால் சென்னையின் வளர்ச்சி பின் தங்கும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

ஆந்திரா மற்றும் கர்நாடகா அரசு புதிய விமான நிலையங்களுக்கான வேலைகளில் மும்முரம் காட்டி வரும் நிலையில் அடுத்தகட்ட வளர்ச்சியில் சீறிப் பாய தயாராகி கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் தாமதமாவது அருகிலுள்ள திருப்பதி விமான நிலையத்திற்கு பல்வேறு விதங்களில் சாதகமாக மாறும் என்கின்றனர் வல்லுநர்கள்.


ஸ்ரீ சிட்டி தொழில் மண்டலத்தில் இருந்து எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமோட்டிவ், ஐடி உபகரணங்கள் உள்ளிட்டவை சென்னை விமான நிலையத்தில் இருந்து சரக்கு விமானங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான தேவை அதிகரிக்கும் போது சென்னைக்கு மாற்றாக திருப்பதி விமான நிலையத்தை தேர்வு செய்யக்கூடும். இரண்டிற்கும் இடையிலான பயண நேரம் என்பது வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே.

அதுமட்டுமின்றி திருப்பதி, நெல்லூர், சித்தூர் ஆகிய தெற்கு மாவட்டங்களில் MRO எனப்படும் பராமரிப்பு, பழுதுபார்க்கும் வசதிகள், சீரமைப்பு கட்டமைப்பு, விண்வெளி சார்ந்த தயாரிப்பு வளாகங்கள், சிறப்பு குளிர்பதன சரக்கு கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இது திருப்பதி விமான நிலையத்தின் தேவையை அதிகப்படுத்தும்.

திருப்பதி என்றவுடன் ஏழுமலையான் கோயில் தான் பலருக்கும் நினைவிற்கு வரும். இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இவர்களில் பலர் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஒருபுறம் பயணிகள் விமான சேவை, மறுபுறம் சரக்கு விமான சேவை என இரண்டிலும் முக்கியத்துவம் அளிப்பதற்கு ஆந்திர மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இத்தகைய சூழலில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது, திருப்பதியை ஒட்டி புதிய முதலீடுகள் வருவதற்கு வாய்ப்பாக அமையும் என்கின்றனர்.

ஏனெனில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை சர்வதேச விமான சேவை வசதிகள் கொண்ட நகரங்களில் அமைக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மாற்றாக திருப்பதி நல்ல தேர்வாக இருக்கக்கூடும்.

ஆந்திர மாநில ஏவியேஷன் திட்டம் 2026 – 2031 திட்டத்தின் கீழ் மிகப்பெரிய திட்டத்தை அம்மாநில அரசு கையில் எடுத்துள்ளது. இதன்மூலம் புதிய விமான நிலையங்கள் கட்டமைப்பது மட்டுமின்றி, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். அதில் திருப்பதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் ஆந்திர மாநில பொருளாதார வளர்ச்சி தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் திட்டமிடல் துறை அதிகாரிகள் சமர்பித்தனர்.

அதில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளில் தேசிய பொருளாதார வளர்ச்சியை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ஆந்திர மாநில ஏவியேஷன் திட்டம் இந்த வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் என்கின்றனர்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய