பின்னோக்கி செல்லும்.....

மு 🗞️ காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் பதில் மனுவை நிராகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு. அணைகளில் தண்ணீர் இருந்தும் தர மறுக்கிறது கர்நாடகம் என்றும் குற்றச்சாட்டு.🗞️ டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராட்டம். ஒருபோக சாகுபடி செய்வதற்காவது காவிரியில் தண்ணீர் வருமா? என ஏக்கத்துடன் காத்திருப்பு.🗞️ தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு. தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதே தங்கள் நிலைப்பாடு என உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்.🗞️ தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்திற்கு அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக எதிர்ப்பு. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது.🗞️ எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு இன்று தொடக்கம். தரவரிசைப் பட்டியலில் 363 பேர் கூடுதலாக இணைந்ததால் மாணவர்கள் குழப்பம்.🗞️ சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது மேலும் ஒரு நில மோசடி புகார். பழனி அருகே ஆயக்குடி பகுதியில் தனியார் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு.🗞️ எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் தமிழ்நாட்டு மீனவர்கள் கொந்தளிப்பு.🗞️ கடலூர் அருகே ரியல் எஸ்டேட் முன்விரோதத்தில், கார் ஓட்டுநர் கொலை செய்த வழக்கு. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்த சிறுவன் உள்பட 8 பேர் கைது. ராசிபுரம் அருகே காரும், லாரியும் மோதிய விபத்தில் 2 வயது பேரனுடன் பாட்டி பலி. குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது நேரிட்ட சோகம்.🗞️ சென்னையில் சொத்துவரி 3 முதல் 4 மடங்கு அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி.  சொத்துவரி மாற்றியமைப்பு என்றும், உயர்த்தப்படவில்லை எனவும் மாநகராட்சி விளக்கம்.🗞️ சென்னை மாநகராட்சியின் சொத்து வரி உயர்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். மக்களின் வருமானம் பெருகாமல், விலைவாசி உயர்வுக்கு மத்தியில் வரியை உயர்த்துவதா? என வீரபாண்டியன் கேள்வி.

🗞️ டெல்லியில் பணமூட்டை சிக்கிய விவகாரத்தில் முன்​னாள் நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம். யஷ்வந்த் வர்​மாவை பத​வி நீக்​கம்​ செய்​ய நாடாளுமன்றக் குழு​ பரிந்துரை.கேரளம் என பெயர் மாற்றும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம். கேரளாவை போன்று மேற்கு வங்கத்துக்கும் பெயர் மாற்ற பாஜக கோரிக்கை..🗞️ ஐரோப்பாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய முழு சூரிய கிரகணம். ஸ்பெயின், கிரீன்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் கண்டு ரசிப்பு.
🗞️ இந்தோனேஷியாவின் பாலி தீவில் சென்று கொண்டிருந்த கப்பலில் தீ விபத்து. 19 வயதுடைய இந்தோனேசிய பெண் உயிரிழந்த நிலையில் 211 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை.
🗞️ சீனாவின் சி-919 விமானம் சர்வதேச வணிக பயண சேவை கோலாகலமாக தொடக்கம். பெய்ஜிங்கில் இருந்து மங்கோலியாவுக்கு செல்லும் விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு.
💥 சீன பொருளாதாரத்தின் சிற்பி - முன்னாள் பிரதமர் Zhu Rongji காலமானார்!சீனாவின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு உதவிய, புதிய சந்தைச் சீர்திருத்தங்களை செய்த முன்னாள் பிரதமர் Zhu Rongji (97) காலமானார்.
பின்னோக்கி

செல்லும்

தமிழகம்.

தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் எனக்கூறி பொதுக்கூட்டங்களில் சினிமா வசனம் பேசி ஆட்சிக்கு வந்தார் முதல்வர் விஜய். ஆட்சிக்கு வந்து 100வது நாளை நெருங்கி விட்டது. மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை.


200 யூனிட் வரை இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பயனை நுகர்வோர் அனுபவிக்க முடியவில்லை. மாறாக மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.


காவிரி விவகாரம், மேகதாது பிரச்னை, ெதாகுதி மறுவரையறை ஆகியவற்றை விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என தவெகவின் கூட்டணி கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்தன. ஆனால் தவெக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.


காவிரி பிரச்னை ெதாடர்பாக விவசாயிகள், பொதுமக்களிடம் விஜய் ஆலோசனை நடத்துகிறார் என அமைச்சர்கள் பேட்டி அளிக்கின்றனர்.

அதற்கான படங்கள் வெளியிடுவதில்லை. முழுக்க முழுக்க பொய்களையே கூறி வருகின்றனர்.

அதற்கு மாறாக திமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையும், திமுகவினர் மீது வழக்கு பதியவும், கைது செய்யும் படலமும் தான் நடக்கிறது.


மக்களுக்கான பணிகள் இந்த ஆட்சியில் நடக்கவில்லை.

தொழில் ஈர்ப்பு மூலதனம் தொடர்பாக தேசிய அளவில் நடத்திய ஆய்வில் தமிழ்நாடு 6வது இடத்தில் இருந்து 17வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. மே மாதம் ஆட்சிக்கு வந்த 4 பேரின் செயல் திறனில் முதல்வர் விஜய் 4ம் இடத்தில் உள்ளார். 5வது இடத்தில் புதுவை உள்ளது.

கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையாவிடம் இருந்து டி.கே.சிவக்குமார் ஆட்சி பொறுப்பை ஏற்றார். மே, ஜூன், ஜூலை மாதத்தில் இவரது திட்டங்களின் எண்ணிக்கை 319ல் இருந்து 400க்கு உயர்ந்து இருக்கிறது. ரூ.23 ஆயிரம் கோடியாக இருந்த முதலீடு ரூ.83 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஒரு அலுமினியம் தொழிற்சாலை மற்றும் ஏர்போர்ட்டை கொண்டு வந்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் கைவிடப்படுவதாக தெரிகிறது.

கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. ரூ.3 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.12 ஆயிரம் கோடியாக முதலீடு உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் தனியார் துறை முதலீடு 100 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் திட்டங்களின் எண்ணிக்கை 183ல் இருந்து 121 ஆக குறைந்துள்ளது. மொத்த முதலீடாக ரூ.44 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.11 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.

தனியார் துறை முதலீடு 75 சதவீதம் குறைந்துள்ளது. 4 மாநிலத்தில் தமிழ்நாட்டின் முதலீடு தடாலடியாக குறைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 4 மாநிலத்தில் கடைசி இடத்துக்கு தமிழ்நாடு வந்துள்ளது.

இதற்கு காரணம் முதல்வர் விஜய் மீது தொழில் நிறுவனங்களுக்கு நம்பிக்கை வரவில்லை. இந்த ஆட்சிக்கு நிர்வாக திறமை இல்லை என்பதையே காட்டுகிறது.

அமைச்சர்கள், தங்களது துறைகளை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாமல் ரீல்ஸ் மோகத்திலேயே இருந்து வருகின்றனர். இதனை விஜய் அரசு கவனத்தில் கொள்ளவில்லையென்றால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்பட்டு விடும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய