உச்சத்தில் சூரியன்!

 
* வங்கக்கடலில்  காற்றழுத்தப் பகுதி.*

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.


தவறை ஏற்க மறுப்பதுதான் தப்பு, அகங்காரம்!

நான்காயிரத்து நானூற்றி நாற்பத்தி ஒன்று எனப் படிக்க வேண்டியதை, “நான் இப்படித்தான் பழகி இருக்கேன்” எனச் சொல்லி, “நாலாயிரத்தி நானூத்தி நாப்பத்தி ஒன்னு”ன்னு படிச்சிருந்தா, யாரும் கிண்டல் பண்ணப் போறதில்லை.

 அதைவிட்டுட்டு, “நாலாயிரத்து நாலு லட்சத்து நாற்பத்தி நானூறு ஒன்னு”ன்னு படிச்சா, கிண்டல் பண்ணத்தான் செய்வாங்க.

25 ஆண்டுகளாகத் தமிழகக் கல்வித் துறையில் இருந்தவருக்குத் தமிழே தெரியவில்லை என்றால், எவ்வளவு பெரிய கேவலம் அது?

பார்த்துப் படிக்கிறதையே தப்பாகப் படிப்பீங்களா என நக்கலாகத்தான் பேசுவார்கள். தமிழ் மட்டும் இல்ல, நீங்க நம்பரையே தப்பாத்தானே படிச்சீங்கன்னு சுட்டிக்காட்டத்தானே செய்வாங்க?

அவர் பேச்சு வழக்கை யாரும் கிண்டல் பண்ணல. “பேசவே தெரியல”ன்னுதான் கிண்டல் பண்றாங்க. தமிழ்நாட்டில் எத்தனையோ விதமான உச்சரிப்புகள் இருக்கு. அதற்காக எல்லாரும் எல்லாரையும் கிண்டல் பண்ணிக்கிட்டா இருக்காங்க?

அப்படி கேலியாகப் பேசியவருக்குப் பதிலாக, பொறுமையாக, “எனக்கு சரளமாகத் தமிழில் படிக்க, பேசத் தெரியவில்லை. 

அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சரி செய்து கொள்வேன்” என்று தாழ்மையோடு பேசியிருந்தால் பிரச்சனை இல்லை.

 ஏனென்றால், ஒட்டுமொத்த தமிழகத்தின் நிதியமைச்சருக்குத் தமிழைப் பார்த்துப் படிப்பதில் தகராறு என்றால், அனைவரும் எப்படி பொறுத்துக் கொள்வார்கள் எனப் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்.

அட, அப்படித்தான் நீங்கள் லண்டன் ரிட்டர்னாக இருந்தால் கூட, தமிழுக்குப் பதிலாகத் தங்கிலீஷில் எழுதி, உச்சரிப்பு தெளிவாகப் படித்திருக்கலாமே.

அதைவிட்டுட்டு...

பார்த்துப் படித்ததையே ஒழுங்காகப் படிக்காமல், “நான் அப்படித்தான் பேசுவேன்” எனப் பேசுவது அகங்காரத்தின் உச்சம்.

உங்கள் வீடியோ ஒன்றில் உங்கள் சகோதரர்வீட்டில் தகராறு செய்யும்போது நீங்கள் கெட்ட வார்த்தைகள் அனைத்தும் சுத்தமாக,தெளிவாக,தவறின்றி பேசும்போது உங்களுக்கு சட்டசபையில் மட்டும் தவறு ஏற்படுவது நம்பும் படி இல்லை.

அதிலும் மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்வது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?

தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நீங்கள் கொடுத்த பதிலும், உங்கள் முன்னால் உள்ள மைக்கைக் கோபமாக மடித்துத் தள்ளியதன் மூலம், நீங்கள் படித்ததாகக் கூறிய பைபிளின் மூலம் அன்பு மொழி, அமைதி மொழி எல்லாம் நீங்கள் கற்றுக் கொண்டதாகவும் அல்லது அதை பின்பற்றுவதாகவோ கொஞ்சம் கூடத் தெரியவே இல்லையே...தமிழ்த்­தாயை 

ஏமாற்­று­வதா?

‘ஆட்­டைக் கடித்து, மாட்­டைக் கடித்து, இறு­தி­யாக மனி­த­னையே கடிக்­க­லாமா?’ – என்று ஒரு பழ­மொழி உண்டு. 

அதைப் போல விவ­சா­யி­களை ஏமாற்­றி­னார்­கள். 

அடுத்து மக்­க­ளையே ஏமாற்­றி­னார்­கள். 

இப்­போது தமிழ்த்­தா­யையே ஏமாற்­று­கி­றார்­கள். 

உண்­மை­யில் முத­ல­மைச்­சர் விஜய்­யின் துணிச்­சலை பாராட்­டத்­தான் வேண்­டும். கூச்­சமே இல்­லா­மல் பொய்­க­ளை­யும் அநி­யா­யங்­க­ளை­யும் செய்­வது முத­ல­மைச்­சர் விஜய்­யின் பாணி­யாக இருக்­கி­றது.தமிழ்த்­தாய் வாழ்த்து பாடல் குறித்த அர­சி­னர் தனித் தீர்­மா­னத்தை முத­ல­மைச்­சர் விஜய் சட்­ட­ச­பை­யில் கொண்டு வந்­துள்­ளார். ‘‘தமிழ்­நாட்­டில் அமைந்­தி­ருக்­கும் அனைத்து கல்வி நிறு­வ­னங்­கள், பல்­க­லைக் கழ­கங்­கள், அலு­வ­ல­கங்­கள், பொதுத்­துறை அரசு நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட பொது அமைப்­புக­ளின் நிகழ்ச்­சி­க­ளி­லும் நிகழ்வு தொடங்­கு­வ­தற்கு முன் தமிழ்த்­தாய் வாழ்த்து கட்­டா­யம் முத­லில் பாடப்­பட வேண்­டும் என தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேரவை ஏக­ம­ன­தா­கத் தீர்­மா­னிக்­கி­றது” என்­ப­து­தான் அந்­தத் தனித்­தீர்­மா­னம் ஆகும

 இதனை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் உள்­பட அனைத்­துக் கட்­சி­க­ளும் ஒரு­மித்த உணர்­வோடு ஆத­ரித்­துள்­ளார்­கள்.

இப்­படி ஒரு தனித்­தீர்­மா­னம் கொண்டு வர என்ன கார­ணம்? முத­ல­மைச்­சர் விஜய்க்கு இருக்­கும் குற்­ற­வு­ணர்ச்­சி­தான் முதல் கார­ணம் ஆகும்.

அவர் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­றுக் கொண்ட விழா­வின் தொடக்­கத்­தில் வந்தே மாத­ரம் பாடப்­பட்­டது. அதன் பிறகு தேசிய கீதம் பாடப்­பட்­டது. மூன்­றா­வ­தாக தமிழ்த்­தாய் வாழ்த்து பாடப்­பட்­டது.

 தமிழை மூன்­றா­வது இடத்­துக்கு தள்ளி வைத்து தனது பத­வி­யேற்பு விழாவை நடத்­தி­னார் விஜய். ஆளு­ந­ரின் அஜெண்­டா­வுக்கு விஜய் தலை­யாட்­டி­னார்.

அதே போலத் தான் தனது உரைக்கு முன்­ன­தாக தேசி­ய­கீ­தம் பாடப்­பட வேண்­டும் என்ற ஆளு­நர் மாளி­கை­யின் கோரிக்­கைக்­கும் அடி­ப­ணிந்து விட்­டார்­கள். சபை­யில் ஆளு­நர் உரை­யாற்­றும் முன் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது.

இப்­படி ஒட்­டு­மொத்­த­மாக ஆளு­நர் ஆசைக்கு இணங்கி விட்டு, இப்­போது தமிழ்த்­தா­யைக் காப்­பாற்­று­வது போல நடிக்­கி­றது த.வெ.க. அரசு.

தமிழ்த்­தாய் வாழ்த்தை ஓங்கி ஒலிக்க வைத்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர்கலை­ஞர் அவர்­கள். 

56 ஆண்­டு­க­ளுக்கு முன்பே இத­னைச் செய்து விட்­டார். 11.3.1970 ஆம் நாள் முத­ல­மைச்­ச­ராக இருந்த கலை­ஞர் அவர்­கள் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடலை அனைத்­துப் பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள், பொது நிறு ­வ­னங்­கள், நிகழ்ச்­சி­க­ளில் முத­லில் பாட வேண்­டும் என்று அர­சாணைவெளி­யிட்­டார்­கள். 

அத­னால் தான் தமிழ்த்­தாய் வாழ்த்து இன்று வரை ஒலித்து வரு­கி­றது.

12.12.2021 ஆம் நாள் முத­ல­மைச்­ச­ராக இருந்த திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கட்­டா­யம் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடல் பாடப்­பட வேண்­டும் என்று அர­சாணை வெளி­யிட்­டார்­கள். 

தமிழ்த்­தாய் வாழ்த்து பாடப்­ப­டு­வதை நெறிப்­ப­டுத்­தி­னார் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள். அர­சாணை (நிலை) எண். 1037. பொதுத் (பொது-- --1) துறை, நாள். 17.12.2021.

மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் இயற்­றிய தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடல் தமிழ்­நாடு அர­சின் மாநி­லப் பாட­லாக அறி­விக்­கப்­பட்­டது.

 இப்­பா­டல் 55 வினா­டி­க­ளில் முல்­லைப் பாணி­யில் (மோகன ராகம்) மூன்­றன் நடை­யில் (திசு­ரம்) பாடப்­ப­ட­வேண்­டும். தமிழ்­நாட்­டில் அமைந்­தி­ருக்­கும் அனைத்து கல்வி நிறு­வ­னங்­கள். 


பல்­க­லைக்­க­ழ­கங்­கள், அரசு அலு­வ­ல­கங்­கள், பொதுத்­துறை நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட பொது அமைப்­பு­க­ளின் நிகழ்ச்­சி­க­ளி­லும், நிகழ்வு தொடங்­கு­வ­தற்கு முன்பு தமிழ்த்­தாய் வாழ்த்து கட்­டா­யம் பாடப்­பட வேண்­டும்.

தமிழ்த்­தாய் வாழ்த்து பாடப்­ப­டும்­போது அனை­வ­ரும் தவ­றா­மல் எழுந்து நிற்க வேண்­டும். மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், கர்ப்­பி­ணித் தாய்­மார்­கள் ஆகி­யோ­ருக்கு எழுந்து நிற்­ப­தில் இருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­கி­றது. 


பொது நிகழ்­வு­க­ளில் ‘தமிழ்த்­தாய் வாழ்த்து’ இசை­வட்­டு­க­ளைக் கொண்டு இசைக்­கப்­ப­டு­ வ­தைத் தவிர்த்து பயிற்சி பெற்­ற­வர்­க­ளால் வாய்ப்­பாட்­டா­கப் பாடப்­பட வேண்­டும். அன்­னைத் தமி­ழின் பெரு­மையை உல­க­றி­யச் செய்­வ­தி­லும், இளம் தலை­மு­றை­யி­ன­ருக்­குக் கொண்டு சேர்ப்­ப­தி­லும், தனி­யார் அமைப்­பு­க­ளும் பொது­மக்­க­ளும் பெரும்­பங்­காற்ற முடி­யும் என்­ப­தால், தமிழ்­நாட்­டில் தனி­யார் அமைப்­பு­கள் நடத்­தி­டும் கலை, இலக்­கி­யம். பொது­நி­கழ்­வு­கள் ஆகி­ய­வற்­றின் தொடக்­கத்­தில் தமிழ்த்­தாய் வாழ்த்து பாடப்­ப­டு­வது ஊக்­கு­விக்­கப்­ப­டும் - என்று அர­சாணை வெளி­யிட்­ட­வர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள்.

எனவே அனைத்­தும் அர­சா­ணை­க­ளாக இருக்­கி­றது. த.வெ.க. அர­சுக்கு துணிச்­சல் இருந்­தால் இதனை சட்­டம் ஆக்­குங்­கள். ஆளு­ந­ருக்குஅனுப்­புங்­கள். 

ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு அனுப்­புங்­கள். அதை விட்­டு­விட்டு தனித்­தீர்­மா­னம் போடு­வ­தால் என்ன பயன்?

நிகழ்ச்­சி­க­ளின் தொடக்­கத்­தில் வந்தே மாத­ரம் பாடுங்­கள் என்­கி­றது ஒன்­றிய பா.ஜ.க. அரசு. தேசிய கீதம் பாடுங்­கள் என்­கி­றார் ஆளு­நர். 

பல்­க­லைக் கழ­கங்­க­ளின் துணை­வேந்­தர்­கள் தங்­களை மன்­னர்­க­ளாக நினைத்­துக் கொண்டு தமிழ்த்­தாய் வாழ்த்தை மூன்­றா­வ­தாக தள்ளிவைக்­கும் அள­வுக்கு துணிச்­ச­லைப் பெற்­று­விட்­டார்­கள்.

 இவற்றை எல்­லாம் த.வெ.க. அர­சின் தனித்­தீர்­மா­னத்­தால் எது­வும் செய்ய முடி­யாது.

தனித்­தீர்­மா­னத்­தின் போது உரை­யாற்­றிய சபா­நா­ய­கர், ‘’யாருக்­கும் அனுப்பி அனு­மதி கேட்க வேண்­டிய அவ­சி­யம் நமக்கு இல்லை’’ என்று சொல்லி இருக்­கி­றார்­கள். 

அப்­ப­டி­யா­னால் இந்த தனித்­தீர்­மா­னம் எதற்­காக நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது? அரசே வைத்­துக் கொள்­வ­தற்கு எதற்­காக தனித்­தீர்­மா­னம்?

தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடல் குறித்து சர்ச்சை எழுப்­பு­வது ஆளு­நர் மாளிகை. அவர்­க­ளுக்கு இந்த தனித்­தீர்­மா­னம் அனுப்பி வைக்­கப்­படவேண்­டாமா?

 அவர்­களை ஒப்­புக் கொள்ள வைக்க வேண்­டாமா?

தமிழ்த்­தா­யை­யுமா ஏமாற்ற வேண்­டும்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய