அதிகரிக்கும் டிஜிட்டல் மோசடி..

 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 10 கி.மீ சுற்றளவுக்குள் நடக்கும் விபத்து இடங்களுக்கு ஆம்புலன்ஸ்கள் 10 நிமிடங்களுக்குள் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்.விழுப்புரம் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு.8 லட்சம் பட்டதாரிகள் எழுதும் குரூப் 2, 2ஏ தேர்வுக்கு குறைவான காலிப் பணியிடங்களே அறிவிப்பு. இளைஞர்கள் ஏமாற்றம் மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது. உணவு பாக்கெட்டுகளில் எச்சரிக்கை லேபிள் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு 2 வாரம் கெடு: உச்ச நீதிமன்றம் .கோவை ஆவாரம்பாளையம் அருகே ரயில் மோதி பெண் ஒப்பந்த தொழிலாளர்களான கவிதா (45), யசோதா (24) ஆகியோர் உயிரிழப்பு.பதவி வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணிட்டு போணும்... தவெக நிர்வாகிகள் தொடர்ந்து பாலியல் டார்ச்சர், கொலை மிரட்டல்: நடவடிக்கை கோரி தூத்துக்குடி எஸ்பி ஆபீசில் பெண் நிர்வாகி புகார்.கர்நாடகா அரசு மீண்டும் பிடிவாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு: தமிழ்நாடு அரசு பதில் மனு கடும் அமளியால் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு: இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்: கடைசி நாளில் மட்டும் அவைக்கு வந்த மோடி, அமித்ஷா.பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலுக்கு கத்திக்குத்து: மகாராஷ்டிராவில் பயங்கரம்.

மியூல் கணக்கு மோசடி



நாட்டின் மூலை முடுக்கெல்லாம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஊடுருவியிருப்பது இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகும்.


அதே டிஜிட்டல் மயமாக்கல், ஏழை எளிய மக்களையும் இளைஞர்களையும்அறியாமலேயே குற்றவாளிகளாக்கும் ‘மியூல் கணக்கு’ என்ற பேராபத்தாகஉருவெடுத்துள்ளது என்பதுதான் வேதனையான உண்மையாகும்.


‘டிஜிட்டல் அரஸ்ட்’, போலி ஆன்லைன் வர்த்தகம், வேலைவாய்ப்பு மோசடி, கிரிப்டோ முதலீடு,போலிக் கடனுதவி போன்ற வழிகளில் பொதுமக்களின் ஆசை, பயம், மனிதாபிமானம் மற்றும் அவசரத்தைப் பயன்படுத்திப் பணத்தைப் பறிக்கின்றனர்.


சைபர் குற்றவாளிகள் நேரடியாகத் தங்களின்பெயரில் பணத்தைப் பெறுவதில்லை.இவ்வாறு திருடிய பணத்தின் ஆதாரத்தை மறைக்கவும், காவல்துறையிடம் சிக்காமல் தப்பிக்கவும் மற்றவர்களின் வங்கிக் கணக்குகளை வாடகைக்கோ கமிஷன் அடிப்படையிலோ ‘சுமை தாங்கியாக’ (Mule) பயன்படுத்துகின்றனர்.

இந்தப் பினாமிகணக்குகளே ‘மியூல் கணக்குகள்’ என அழைக்கப்படுகின்றன.

சட்டப்படி மொபைல் மூலமாகவோ வாட்ஸ்-அப்பிலோ கைது வாரண்ட் மற்றும் சம்மன் அனுப்பமுடியாது.


ஆனால், போலி வீடியோ கால் மூலம்தொடர்புகொண்டு, “உங்கள் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவாகியுள்ளது” எனமிரட்டி லட்சக்கணக்கில் பணத்தைப் பறிக்கின்றனர்.


போலி செயலிகள் மூலம் பெண்களிடம்பேசுவது போல ஆசை காட்டி, வீடியோ கால்களைப் பதிவு செய்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர், “இந்த வீடியோவை உன் குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவோம்” என மிரட்டிப் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர்.


“மாதம் ₹20,000 சம்பாதிக்கலாம்”, “பணத்தை மாற்றி அனுப்பினால் 5 சதவீதக் கமிஷன்” என்ற ஆசைவார்த்தைகளில் பாமர மக்கள் எளிதில் சிக்குகிறார்கள். உண்மையான குற்றவாளி தப்பிவிட, கமிஷனுக்குஆசைப்பட்டவர்கள் மாட்டிக்கொள்கின்றனர்.


நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 32.08 லட்சத்திற்கும் அதிகமான மியூல் கணக்குகள் கண்டறியப்பட்டுமுடக்கப்பட்டுள்ளன.


15.75 லட்சம் சிம் கார்டுகளும், 5.77 லட்சம் ஐ.எம்.இ.ஐ எண்களும், 3,718 போலிசெயலிகளும் முடக்கப்பட்டுள்ளன. 32 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது,


மோசடிக்காரர்களின் செயல் எந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.


டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம்விதிப்பதில் காட்டும் தீவிரத்தை, மோசடிகளைத் தடுப்பதில் ஒன்றிய அரசு காட்டுவதில்லை.


மோசடிக் கும்பல்கள் மக்கள் மத்தியில் ஊடுருவிய அளவிற்கு, அரசின் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் கடைக்கோடி மக்களைச் சென்றடையவில்லை என்பதேநிதர்சனமாகும்.“எனக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது” என்ற அறியாமை, சட்டத்தின் முன் நம்மைக் காப்பாற்றாது.

விழிப்போடு இருப்போம்.


நிதி அமைச்சரின் ஆணவம்!

நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் மரியவில்சன், வாசிப்பில் மட்டுமல்ல, பொருட்பிழை ஏற்படும் வகையில் தான் தனது அறிக்கையை வாசித்தார். உச்சரிப்பில் தவறுகள் இருப்பது இயல்பு தான்.

நிதி அமைச்சராக இருக்கக் கூடியவர் எண்களைக் கூடச் சரியாகச் சொல்லவில்லை. இது பற்றி இணையத் தளங்களில் கடுமையான விமர்சனங்கள் அவர் மீது விழுந்து வருகின்றன. இது சட்டமன்றத்திலும் விவாதப் பொருள் ஆனது. இது தவறான விவாதம் ஆகாது.

முன்பு கூட இது போன்ற விவாதங்கள் நடந்துள்ளது. முதலமைச்சராக தலைவர் கலைஞர் இருந்த போது ஒரு உறுப்பினர், ‘எனது தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வதற்கு மாறாக, ‘எனது தொகுதியை எடுத்துக் கொல்லுங்கள்’ என்று சொன்னார். ‘நீங்களே உங்கள் தொகுதி யைக் கொல்லக் கூடாது’ என்றார் முதலமைச்சர் கலைஞர். அவையினர் அனைவரும் சிரித்தார்கள். அது போலத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய இயல்பு நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இல்லை. இணையத்தில் விமர்சிப்பதற்கும் சேர்த்து சபையில் பதில் சொன்னார்.

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் தி.மு.ராசேந்திரன், மிகத் தன்மையாகத் தான் தனது கருத்தைச் சொன்னார்.

‘’மாண்புமிகு நிதி அமைச்சர், தென்கோடி முனையில் எங்களது குமரி முனையின் மாப்பிள்ளை என்ற முறையில் அவருக்கு எனது மதிப்பை பதிவு செய்கின்றேன். ஆனால் அவர் தனது பட்ஜெட்டை வாசிக்கிற போது, அவர் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆங்கில உச்சரிப்பு மிக நேர்த்தியாக இருந்தது. தமிழில் பல சொற்றொடர் களை அவர்கள் பேசாமல் விட்டுவிட்டார்கள். சில சொற்றொடர்கள் இலக்கணப் பிழையாக அமைந்தது. இதைக் குறையாகவோ குற்றச்சாட்டாகவோ இந்த அவையில் வைக்க விரும்பவில்லை. வருங்காலத்தில் பிழையின்றி பட்ஜெட் வாசிக்க வாய்ப்பு ஏற்பட வேண்டும். பணிவோடு நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று தான் உறுப்பினர் தி.மு.ராசேந்திரன் சொன்னார். இதில் ஒரு சொல் கூட தரக்குறைவானதாக இல்லை.

இதைக் கேட்டதும் ஒரு சிரிப்புடன் கடந்து போயிருக்கலாம். மாறாக, ஆத்திரம் கொண்டவராகப் பேசி இருக்கிறார் நிதி அமைச்சர். அதில் ஆணவம் மட்டுமே இருந்தது.

“எனக்கு என்னுடைய கிறிஸ்தவம் ஒரு மொழியைக் கற்றுக் கொடுத்துள்ளது. அது அன்புமொழி, பண்புமொழி. இரக்கத்தின் மொழி. இது பாதிப் பேருக்கு எத்தனை தமிழ் படித்தாலும் புரியாது” என்று சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் மரியவில்சன்.

‘ஆங்கிலம் படித்தவன் நான்’ என்ற மேட்டிமை தான் இதில் இருக்கிறது. ‘தமிழ் படித்தால் புரியாது’ என்ற ஏளனம் தான் இதில் இருக்கிறது.

இவர் தவறாகத் தமிழ் பேசுவதற்கும், தப்புத் தப்பாக எண்களைச் சொல்வதற்கும் கிறிஸ்துவத்துக்கும் என்ன தொடர்பு? நல்ல தமிழை வளர்த்ததில் கிறிஸ்துவ மதத்துக்கும் தொடர்பு உண்டு. வெளிநாடுகளில் இருந்து சமயப் பரப்புரைக்கு வந்த பாதிரியார்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு மலையளவு. தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கும் அளவுக்கு தமிழ்ப்பாதிரியார்கள் தொண்டாற்றி இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் தேவாலயங்களில் அழகான தமிழில், கனிவான குரலில், அழுத்தமாகப் பேசும் எத்தனையோ பாதிரியார்களைப் பார்க்கிறோம். இது எதையும் அறியாதவராக இருக்கிறார் அமைச்சர் மரிய வில்சன்.

தனது தவறான தமிழுக்கு கிறிஸ்தவத்தின் மீது பழிபோடும் பாவத்தையும் சேர்த்துச் செய்துள்ளார் மரியவில்சன். இப்படித்தான் பேசுவேன், இது என்னுடைய ஸ்டைல் என்பது எல்லாம் சபை மாண்பை மதிக்காத போக்கு ஆகும்.

‘இதெல்லாம் எத்தனை தமிழ் படித்தாலும் தெரியாது’ என்கிறார் மரியவில்சன். மதத்தையும் மொழியையும் எதற்காக ஒப்பிட வேண்டும்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மதத்தின் பின்னால் எதற்காக ஒளிந்து கொள்ள வேண்டும்? ஒழுங்கான தமிழைப் படிக்கப் படிக்கத்தான் ஒவ்வொன்றும் ஒழுங்காகவே தெரியும்.

இங்கே பிரச்சினை என்பது அவர் பேசும் மொழியில் இல்லை. மதத்தில் இல்லை. மரிய வில்சனிடம் தான் பிரச்சினை இருக்கிறது. கிறிஸ்தவத்தில் இருந்து அன்பையோ, பண்பையோ அவர் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தான் அவரது பேச்சு எடுத்துக் காட்டுகிறது.

இவருக்கு அன்பு மொழியோ, பண்பு மொழியோ, இரக்க மொழியோ தெரியாது என்பதற்கு அவர் உருட்டுக் கட்டையைத் தூக்கிக் கொண்டு சொந்தக் குடும்பத்தினரைத் தாக்கும் காட்சிகளே சாட்சி.

நிதி அமைச்சரான இவர், கட்டையைத் தூக்கி ஒரு குடும்பத்தைத் தாக்கும் வீடியோ இணையத் தளத்தில் பரவி அனைவரும் பார்த்த காட்சிகள் ஆகும். மரிய வில்சனுக்கும் அவரது அண்ணன் மரிய குளோத்துக்கும் இடையே சொத்துப் பிரச்சினை இருந்துள்ளது. 8.8.2022 ஆம் நாள் புதுச்சேரியில் உள்ள மரிய குளோத்தின் வீட்டுக்கு சென்று அவரையும் அவரது மனைவியையும் கட்டையை வைத்து தாக்கி இருக்கிறார் மரிய வில்சன். கதறக் கதற தாக்கி இருக்கிறார். வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. மரிய வில்சன், அவரது அப்பா நெஸ்தோஸ் ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார் நிதி அமைச்சர். அதனைத் தான் அவர் அவைக்குள்ளும் காட்டுகிறார்.

சினிமாவில் நடிக்கும் போது விஜய்யாக இருந்தவர், கட்சி ஆரம்பித்ததும் ‘ஜோசப் விஜய்’யாக அடையாளம் காட்டிக் கொண்டதைப் போல, தனது மத அடையாளத்தைக் காட்டி கழிவிரக்கம் தேடப் பார்க்கிறார் மரியவில்சன்.

இவருக்கு தமிழும் தெரியவில்லை. கிறிஸ்தவமும் தெரியவில்லை. சபை மாண்பும் தெரியவில்லை. பொது நாகரிகமும் தெரியவில்லை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய