காவி­ரிக்­காக பொங்­கிய

 காவி­ரிக்­காக பொங்­கிய 

பொங்கு தமி­ழர்க்கு இன்­னல் விளைந்­தால் சங்­கா­ரம் நிஜ­மென்று சங்கே முழங்கு- என்­றார் புரட்­சிக் கவி­ஞர் பார­தி­தா­சன். காவிரி உரிமை பறிக்­கப்­ப­டும் நேர­மான இன்று தனது வீறு­கொண்ட ஆர்ப்­பாட்ட போர்ப்­பாட்டை நிகழ்த்­திக் காட்டி இருக்­கி­றது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.காவி­ரி­யில் தமிழ்­நாட்­டுக்­குத் தர­வேண்­டிய உரிமை கொண்ட நீரைத் தர மறுக்­கி­றது கர்­நா­ட­கம். கடந்த ஜூலை மாதத்­தில் வெறும் 0.698 டி.எம்.சி.நீரை மட்­டுமே வழங்கி இருக்­கி­றது கர்­நா­ட­கம். கடந்த ஐம்­பது ஆண்­டு­ க­ளில் மிகக் குறைந்த நீரை கடந்த மாதம்­தான் பெற்­றுள்­ளோம். சட்­டப்­படி பார்த்­தால் நமக்கு 31.24 டி.எம்.சி. நீரை கர்­நா­ட­கம் வழங்கி இருக்க வேண்­டும். தண்­ணீர் வழங்­கத் தேவை­யில்லை என்ற துணிச்­சல் கர்­நா­ட­கா­வுக்கு எத­னால் வந்­தது? 

இங்­குள்ள அரசு மீது அவர்­க­ளுக்கு மரி­யா­தையோ பயமோ இல்லை என்­பது இதன் மூலம் தெரி­கி­றது. ‘விஜய்க்கு அர­சி­யல் தெரி­யாது, அனு­ப­வம் இல்லை’ என்று தனது பேட்­டி­க­ளில் தொடந்து சொல்லி வரு­கி­ற­வர் கர்­நா­டக முத­ல­மைச்­சர் டி.கே.சிவக்­கு­மார்.

‘எங்­க­ளுக்கே தண்­ணீர் இல்லை’ என்று ஒப்­பாரி வைக்­கி­றது கர்­நா­ட­கம். காவிரி ஆற்­றில் தமிழ்­நாட்­டுக்கு 15 நாட்­க­ளுக்கு தின­மும் 3,500 கன அடி தண்­ணீ­ரைத் திறந்து விடும்­படி காவிரி நீர் ஒழுங்­காற்­றுக் குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணை­யம் ஆகி­யவை உத்­த­ர­விட்­டும் அத­னைச் செயல்­ப­டுத்­தா­மல் இருக்­கி­றது கர்­நா­ட­கம்.

 இதை விட மோச­மாக மேக­தாது அணை­யைக் கட்­டியே தீரு­வோம் என்­ப­தி­லும் கர்­நா­ட­கம் பிடி­வா­த­மாக இருக்­கி­றது.

இத­னைத் தட்­டிக் கேட்க முது­கெ­லும்பு இல்­லாத அர­சாக முத­ல­மைச்­சர் விஜய் அரசு இருக்­கி­றது.


 கர்­நா­ட­கா­வில் மழை பெய்­வ­தால் உபரி நீர் தமிழ்­நாடு வரு­கி­றது. உடனே, ‘பார்த்­தீர்­களா, விஜய் தண்­ணீர் கொண்டு வந்­து­விட்­டார்’ என்று அளக்­கி­றார்­கள். உபரி நீருக்­கும் நமக்­குத் தர வேண்­டிய உரிமை நீருக்­கும் வித்­தி­யா­சம் காணத் தெரி­யாத தற்­கு­றி­க­ளுக்கு என்ன பதில் சொல்­வது?

கர்­நா­ட­காவை ஆள்­வது காங்­கி­ரஸ் அரசு. இங்கே முத­ல­மைச்­சர் விஜய்­யும் காங்­கி­ரஸ் தய­வில்­தான் அந்த நாற்­கா­லி­யில் இருக்­கி­றார். இரண்டு தரப்­பை­யும் காங்­கி­ரஸ் தலைமை உட்­கார வைத்து பேச­லாமே என்று கேட்­டால், ‘ராகுல் தமிழ்­நாட்­டுக்கு வரும் போது மழை­யைக் கொண்டு வந்­து­விட்­டாரே’ என்­கி­றார் காங்­கி­ரஸ் தலை­வர் மாணிக்­கம் தாகூர்.

 ராகுல் காந்­தியை மூன்று மாதத்­துக்கு தமிழ்­நாட்­டி­லேயே இருக்க வைக்­கி­றீர்­களா? இந்த மாதிரி எல்­லாம் ‘கம்பி கட்­டும்’ கதை­க­ளைச் சொல்­கி­றார்­கள். தீர்­வுக்கு முயற்­சிக்­கா­மல் திரு­கல் பதில்­க­ளைத்­தான் சொல்­லிக் கொண்டு இருக்­கி­றார்­கள்.

இந்த நிலை­யில் கர்­நா­டக மாநி­லத்­துக்கு ஒட்­டு­மொத்த எதிர்ப்­பைக் காட்­டு­வ­தற்­காக அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்ட வேண்­டும் என்று அர­சி­யல் கட்­சி­க­ளும், உழ­வர் பெரு­மக்­க­ளும் த.வெ.க. அர­சுக்கு சொல்­லி­யும் அவர்­கள் செய்­ய­வில்லை. ‘அனைத்­துக் கட்­சிக் கூட்­டம் தேவை­யில்லை’ என்று சொல்லி விட்­டார்­கள். 


கர்­நா­ட­கா­வுக்கு போய் சீன் பண்ண நினைத்­தார் விஜய். அது­வும் அனை­வர் எதிர்ப்­பால் செய்­ய­மு­டி­ய­வில்லை. இப்­படி ஏது­வும் செய்­யத் திரா­ணி­யற்ற அர­சாக விஜய் அரசு இருக்­கி­றது.

இந்த நிலை­யில் ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டின் உணர்வை வெளிப்­ப­டுத்த வேண்­டிய கட­மையை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் செய்­தார்­கள். 

மேக­தாது அணை கட்­டு­வ­தைத் தடுக்­கத் தவ­றிய த.வெ.க. அர­சைக் கண்­டித்­தும், விவ­சா­யக் கடனை முழு­மை­யா­கத் தள்­ளு­படி செய்­யக் கோரி­யும், டெல்டா மாவட்­டங்­களை வறட்சி மாவட்­டங்­க­ளாக அறி­விக்க வலி­யு­றுத்­தி­யும், த.வெ.க. அர­சைக் கண்­டித்­தும் தஞ்­சா­வூ­ரில் மாபெ­ரும் ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­றும் என்று தி.மு.க. தலை­வர் அவர்­கள் அறி­வித்­தார்­கள்.

சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரு­மான மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் தலை­மை­யில் நடை­பெ­றும் என்­றும் உத்­த­ர­விட்­டார்­கள்.

நேற்­றைய தினம் (ஆகஸ்ட் 3) தஞ்சை மண்­ணில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டம் ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்டு மக்­க­ளின், உழ­வர் பெரு­மக்­க­ளின் உணர்வை கர்­நா­டக அர­சுக்­குத் தெரி­விப்­ப­தாக அமைந்­தது. 

எங்கே திரும்­பி­னா­லும் பச்­சைத் துண்­டு­க­ளா­கக் காட்சி அளித்­தது. தி.மு.க. விவ­சாய அணி, விவ­சா­யத் தொழி­லா­ளர் அணித் தோழர்­க­ளு­டன் கழக உடன்­பி­றப்­பு ­க­ளும் சாரை சாரை­யா­கக் கலந்து கொண்டு தங்­க­ளது உணர்ச்­சியை வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள். 

தி.மு.க.வின் தோழ­மைக் கட்­சித் தலை­வர்­கள் கலந்து கொண்­டார்­கள். விவ­சாய அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளும் ‘இது நமது மேடை’ என்ற உணர்­வோடு பங்­கெ­டுத்­தார்­கள். அனைத்து விவ­சாய அமைப்­பி­ன­ரும் ஆர்ப்­பாட்­டத்­தில் முழங்­கி­னார்­கள்.

‘‘விவ­சா­யி­கள் கண்­ணீர் வடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அமைச்­சர்­கள் படம் பார்த்து கண்­ணீர் விட்­டுக் கொண்டு இருக்­கி­றார்­கள். ஜோக்­கர் கூட்­ட­மாக அமைச்­ச­ரவை இருக்­கி­றது. காவிரி டெல்டா மாவட்­டம் வறண்டு காட்சி அளிக்­கி­றது. 

குறு­வை­யைக் காப்­பாற்ற த.வெ.க. அர­சால் முடி­ய­வில்லை. டம்மி முத­ல­மைச்­ச­ராக விஜய் இருக்­கி­றார். நிர்­வா­கத் திற­னற்ற அர­சாக த.வெ.க. அரசு இருக்­கி­றது” என்று கடு­மை­யா­கக் கண்­டித்­துள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின். இது­தான் ஒட்­டு­மொத்த உழ­வர்­க­ளின் உணர்­வாக அமைந்­துள்­ளது.

‘‘காவிரி பெருக்­கெ­டுக்க வேண்­டிய ஆடிப்­பெ­ருக்கு நாளில் டெல்டா

விவ­சா­யி­கள் ஆதங்­கம் பெருக்க போராடி வரு­கி­றார்­கள். அண்டை மாநி­லத்­தில் தனது திரைப்­ப­டம் ஓடு­வ­தற்­காக நம் விவ­சா­யி­க­ளின் வாழ்க்­கை­யையா அடகு வைப்­பீர்­கள்?’’ என்று கேள்வி எழுப்பி இருக்­கி­றார் தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.

‘விஜய் நினைத்­தார், காவி­ரி­யில் தண்­ணீர் வரு­கி­றது’ என்று துணை நடி­கை­களை வைத்து ரீல்ஸ் போட்­டுக் கொண்டு இருக்­கி­றார்­கள். தொழில் முத­லீ­டு­கள் அத­ல­பா­தா­ளத்­துக்கு போகி­றதே. 

ஏன் விஜய் நினைக்­க­வில்­லையா? வேறு நினைப்­பில் இருக்­கி­றாரா? தமிழ்­நாடு இன்­னும் என்­னென்ன கூத்­து­களை எல்­லாம் பார்க்­கப் போகி­றதோ? இன்­னும் எவ்­வ­ளவு துன்­பத்­தைத்­தான்

அனு­ப­விக்­கப் போகி­றதோ? 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய