சட்டத்தின் பரிதாப நிலை?

 






உலகில் முஸ்லீம்கள் அதிகம் வாழும்

ஏழு முன்னணி நாடுகள்...!

.1.இந்தோனேசியா: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 240 மில்லியன் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

 

2.பாகிஸ்தான்: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 230 மில்லியன் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

3.இந்தியா: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 210 மில்லியன் இலாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

 

4.வங்கதேசம்: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 150 மில்லியன் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

 

5.நைஜீரியா: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா 5வது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 100 மில்லியனுக்கு மேல் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

 

6.எகிப்து: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் எகிப்து 6வது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 90 மில்லியனுக்கும் மேல் இஸ்லாமிய மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. 

 

7.ஈரான்: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் ஈரான் 7வது இடத்தில் உள்ளது. ஈரானில் சுமார் 85 மில்லியன் இஸ்லாமிய மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. 

"துளியும் பயமில்லை!"

தமிழகத்தில் நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை” என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.

போதைப் பொருள் பயன்படுத்துவதையோ விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை. நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.

குறிப்பாக, பள்ளிகளில் கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.

மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்?.

இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் ஆலோசனை வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தகவலறியும் உரிமை சட்டத்தின்

பரிதாப நிலை?

மக்களாட்சியின் மாண்பையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்யும் மிக முக்கியமானஆயுதம், இடதுசாரி கட்சிகளின் உதவியுடன் 2005ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டதே ‘தகவலுரிமைச் சட்டம்’.


ஆனால், அச்சட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் மத்திய தகவல் ஆணையமே இன்றுசெயலற்று, முடங்கிக் கிடப்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் சவாலாகும்.


தற்போது வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, மத்திய தகவல் ஆணையத்தில் 40,083-க்கும் மேற்பட்ட வழக்குகள் (3,6350 மேல்முறையீடுகள் மற்றும் 3,733 புகார்கள்) தேங்கிக் கிடக்கின்றன.


தலைமைத் தகவல் ஆணையர் ராஜ்குமார் கோயல்உட்பட அனைத்து 10 ஆணையர் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டநிலையிலும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் இருப்பது பெரும்அதிர்ச்சியளிக்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால், தலைமைத் தகவல் ஆணையர் ஒருவரிடமே 5,317வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகஸ்ட் மாதம் முதல் 12 நாட்களில், ஒட்டுமொத்த ஆணையமும் சேர்ந்து வெறும் 3 மேல்முறையீட்டு வழக்குகளை மட்டுமே தீர்த்து வைத்துள்ளது.


8 தகவல்ஆணையர்கள் ஒரு வழக்கைக்கூட விசாரிக்காமல் பூஜ்ஜிய செயல்திறனைக் காட்டியுள்ளனர். தலைமை ஆணையரின் சராசரி வழக்குத் தீர்வுவிகிதம் வெறும் 46 சதவீதமாகவே உள்ளது.


முழுப் பணியாளர்களுடன் இயங்கும் ஒருமுதன்மை அமைப்பு, இவ்வாறு ஆமை வேகத்தில் செயல்படுவது தற்செயலானது அல்ல; ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் திட்டமிட்டு தகவல்கள் மறைக்கப்படுகின்றன.


சில தகவல்களை ஆணையம் தர மறுக்கிறது. இதுபோன்ற செயல்கள் தகவலுரிமைச் சட்டத்தின்வீரியத்தைக் குறைத்து, அதைச் செயலிழக்கச் செய்ய நடக்கும் திட்டமிட்ட மெத்தனப் போக்கோ என்ற ஐயத்தைவெளிப்படைத்தன்மை ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.


2015-ஆம் ஆண்டில் ஆணையர்கள் இல்லாததால் வழக்குகள் தேங்கின; ஆனால் இன்றோ, அனைத்து ஆணையர்களும் இருந்தும் வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன.


மக்களின் ‘தெரிந்துகொள்ளும் உரிமையை’ப் பறிக்கும் வகையில் தகவல் ஆணையம் இவ்வாறு மந்தகதியில் செயல்படுவதை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும் ஒன்றிய பாஜகஅரசின் போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது.


தகவல் ஆணையத்திற்குத் தேவையானசீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும், வழக்குகளை விரைந்து முடிக்க ஆணையர்களை முடக்கிமுடுக்கிவிடுவதிலும் ஒன்றிய அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.


ஒன்றியத்தில் மட்டுமல்ல தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இதேநிலையில்தான் தகவல் ஆணையங்கள் உள்ளன.

தகவல் ஆணையம் என்பது அதிகாரிகளின் கோப்புகளைப் பாதுகாக்கும் அரண் அல்ல.


மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஜனநாயகத்தின் வாசல்! ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு, நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கத்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


இல்லையெனில், ‘தகவலுரிமைச் சட்டம்’ வெறும்காகித அளவிலான சட்டமாகும் நிலையாகிவிடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய