இத்தாலி காதல் முதல்,.,

 

'"இத்தாலிய கிராமத்து காதல் முதல் ஸ்ரீபெரும்புதூர் கண்ணீர் வரை' 


சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம்

60 ஆண்டு கால இந்திய வாழ்க்கையின் வலிகளை முதன்முறையாக புத்தகமாக எழுதியுள்ளார் சோனியா காந்தி.

இந்திய அரசியலின் மிக சக்தி வாய்ந்த, அதே நேரத்தில் எப்போதும் ஒரு புதிரான ஆளுமையாகவே பார்க்கப்படுபவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி (79) தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.

544 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், அமெரிக்காவின் புகழ் பெற்ற பதிப்பகமான ‘ஆல்ஃபிரட் ஏ நாஃப்’ மூலம் வரும் நவம்பர் 10 அன்று உலகளவில் வெளியாகிறது.


அன்றைய தினம் அச்சுப் புத்தகம் மற்றும் மின்புத்தக வடிவில் வெளியிடப்படும். இதன் ஒலிப்பதிப்பு பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும்.


முதற்கட்டமாக 1,00,000 பிரதிகள் அச்சிடப்படும் என பதிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில பகுதிகள் தற்போது வெளியாகி சர்வதேச மற்றும் இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சுயசரிதை புத்தகம், 1965-ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவியாக இருந்த சோனியா மைனோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரனும், இந்திரா காந்தியின் மகனுமான ராஜீவ் காந்தியை முதன் முதலில் சந்தித்து காதல் வயப்பட்ட தருணத்தில் இருந்து தொடங்குகிறது.


2-ம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியின் எளிய கிராமத்து சூழலில் வளர்ந்த ஒரு பெண், இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திற்குள் மருமகளாக நுழைந்த பிறகு சந்தித்த சவால்கள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.


இந்தியா வந்த புதிதில் அவர் புடவை கட்டக் கற்றுக் கொண்டது, இந்தி மொழியை கற்ற விதம், இந்திய உணவு முறைகளை ரசித்தது போன்ற சுவாரஸ்யமான பல நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.


ஆனால், 1984-ல் மாமியாரும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தி தன் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட போது, சோனியா காந்தியின் அமைதியான குடும்ப வாழ்க்கை முற்றிலும் தலைகீழாக மாறியது என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்திரா காந்தியின் மரணத்தை தொடர்ந்து, அரசியலுக்கு வர சற்றும் விருப்பமில்லாத ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்றார். அதன் பின்னர், அடுத்த 7 ஆண்டுகளில் (1991-ல்) தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தியும் மனித வெடிகுண்டால் மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.


இந்த தொடர் மரணங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிழப்புகள் குறித்து சோனியா காந்தி இந்த புத்தகத்தில் மிக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலில் சோனியா காந்தி, "அதுவரை எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், ரகசியங்களையும் நான் மிகவும் தீவிரமாக பாதுகாத்து வந்தேன். ஆனால், என் வாழ்க்கையில் ஏற்பட்ட இதயத்தை நொறுக்கிய அந்த சம்பவம் மற்றும் ஈடு செய்ய முடியாத இழப்புகளும் தான் என்னை எனக்கு சற்றும் தொடர்பில்லாத இந்த அரசியல் உலகிற்குள் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டன" என்று குறிப்பிட்டுளார்.


மேலும், "என் சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுவது எனக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. அதற்கு என் மனதைத் திறந்து, நான் இத்தனை காலம் எனக்குள் ஆழமாக பூட்டி வைத்திருந்த மிக அந்தரங்கமான தருணங்களையும், வலிகளையும் உலகத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது" என்று தன் எழுத்துப் பயணத்தின் தயக்கங்களை உடைத்துப் பேசியுள்ளார்.


கணவரின் மரணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த சோனியா காந்தி, பின்னர் காங்கிரஸின் நீண்டகால தலைவராக பொறுப்பேற்று கட்சியை வழி நடத்தினார்.


குறிப்பாக, 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஒட்டுமொத்த தேசமே அவர் பிரதமராவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தது.


ஆனால், அன்று நள்ளிரவில், அவர் எடுத்த அதிரடி முடிவு இந்திய வரலாற்றையே மாற்றியது. தன்னை தேடி வந்த மிக உயரிய பிரதமர் பதவியை எதனால் நிராகரித்தார்?


மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய அந்த வியூகத்தின் பின்னணியில் இருந்த உண்மையான காரணங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் என்னென்ன?


என்பதை இந்த புத்தகத்தில் அவர் முதல்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


மேலும், "நான் படிப்படியாக அரசியலில் இருந்து விலகி, என் கடந்த காலத்தை திரும்பி பார்க்கும் போது, ஒரு மெல்லிய அழகான காதல் தான் என் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வழிநடத்தியது என்பதை புரிந்து கொண்டேன்" என்று சோனியா காந்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு சாட்சியாக நெருங்கி பார்த்த தனது இந்த வாழ்க்கை பயணத்தை, "நான் சார்ந்திருக்கும், எனக்கு சொந்தமான அழகான தேசத்தின் கதை" என்று நெகிழ்ச்சியுடன் சோனியா காந்தி நிறைவு செய்துள்ளார்.

சாணியை கரைத்து தலையில் ஊற்றிக் கொண்ட அரசு..!! 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த விவகாரம் தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், தற்போதைய தவெக அரசின் செயல்பாடானது அனுபவமற்ற ஒருவர் மலைப்பாதையில் பேருந்தை ஓட்ட முயற்சிப்பதற்கு ஒப்பானது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசியலிலும், நிர்வாகத்திலும் ஒரு கொள்கை முடிவின் மீதான மக்களின் பொதுப் பார்வை எவ்வளவு முக்கியமானது என்பதை ஆட்சியாளர்கள் உணரத் தவறிவிட்டதாக குறிப்பிட்ட அவர்,

சட்டமன்றத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான 3 முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்ட முக்கியத்துவத்தை மறைத்து, ரூ.150 கோடி மதிப்பிலான கார் விவகாரத்தைப் பெரிய பேசுபொருளாக மாற்றிவிட்டதாக சுட்டிக்காட்டினார்.

வட்டாட்சியர், பிடிஓ உள்ளிட்ட வட்டார அளவிலான அதிகாரிகளுக்கே வாகனங்கள் வழங்கப்படும் நிலையில், எம்எல்ஏ-க்களுக்கு வாகனம் வழங்குவது இயல்பான ஒரு நிர்வாக நடைமுறைதான் என்றாலும், அதனை ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்ற பாணியில் அணுகி அரசு தனக்குத்தானே பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.


இத்தகைய சூழலை திமுக அரசு எவ்வாறு கையாண்டிருக்கும் என்பதை விளக்கிய அவர், மாவட்ட நிர்வாகத்திற்கு முதற்கட்டமாக கூடுதல் வாகனங்களை ஒதுக்கி,


பின்னர் நிர்வாக ரீதியாகப் படிப்படியாக சட்டமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு மாற்றியமைத்து, உரிய நிதியை அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒதுக்குவதே முறையான அணுகுமுறையாக இருந்திருக்கும் என குறிப்பிட்டார்.


அரசியலில் ஒரு திட்டத்தின் நோக்கம் என்ன என்பதை விட, மக்கள் அதனை எவ்வாறு பார்க்கிறார்கள் என்ற உளவியலைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்


ஆனால் இந்த அடிப்படைப் புரிதல் இல்லாமல் தவெக அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.


வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டின் நிர்வாகத்தை எவ்வித முன் அனுபவமும் இல்லாதவர்களின் கையில் ஒப்படைத்திருப்பது பெரும் ஆபத்தானது என்று எச்சரித்த துரைமுருகன்,


பேருந்தை ஓட்டத் தெரியாத ஓட்டுநருக்குப் பக்கத்தில் நின்று பலரும் பலவிதமான ஆலோசனைகளைக் கூறுவது போல் இந்த ஆட்சி நடப்பதாகவும், செங்குத்தான வளர்ச்சிப் பாதையிலிருந்து இறங்குவது சுலபம் .

ஆனால் மீண்டும் ஏறுவது மிகக் கடினம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய