உரிய பங்கு நீர் தேவை!
தமிழ்நாடுஅரசுபோக்குவரத்துக்கழகத்தில் த.வெ.க. அரசால் பணியில் அமர்த்தப்படும் வடமாநிலத் தொழிலாளர்கள்.
📰 கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சம் வரை பயிர்க்கடன் வாங்கியிருந்தால் ரூ.75,000 வரை தள்ளுபடி.. விவசாயிகள் போராட்டம் வலுத்த நிலையில் கூடுதல் தள்ளுபடி அறிவித்தார் முதலமைச்சர் .
📰 தவெகவின் நூறு நாட்கள் ஆட்சியில் 540-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு.. சட்டமன்றத்தில் கேள்விகளுக்கு தொடர்பில்லாமல் துறைக்கு தொடர்பில்லாத அமைச்சர்கள் பதில் அளிப்பதாகவும் குற்றசாட்டு.
ஜார்க்கண்டில் மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்த மாநில அரசு.. அரசுப் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புதவெக உடன் விசிக இணைந்தே பயணிக்கும் என திருமாவளவன் அறிவிப்பு.. தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக விசிக பரிணமிக்கும் என்றும் பேச்சு.
📰 பாமக தலைவர் அன்புமணியுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் திடீர்சந்திப்பு.. எடப்பாடி பழனிசாமியின் அனுமதியோடுதான் சந்தித்ததாக பேட்டி
📰 உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டின் ேமடையில் கூட்ட நெரிசல்.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் உரையை சுருக்கமாக முடித்துக்கொண்ட திருமாவளவன்
📰 மகாஷ்டிராவில் மெட்ரோ ரயில் பணியின்போது கீழே விழுந்த கிரானைட் கற்கள். ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.12.50 கோடி அபராதம் விதிப்பு
📰 ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அடுத்த சில வாரங்களுக்குள் முழுமையாக செயல்படுத்தாவிட்டால் தாக்குதல்... அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்.
உரிய நீர் வேண்டும்!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்’’ என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைக் கர்நாடக அரசு திறந்து விடக் கோரியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவைஎதிர்த்தும் திமுக தொடர்ந்த மனு,தமிழக அரசு தாக்கல் செய்த மனு மற்றும் ஆகியவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, ‘‘காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடக அரசு எப்போதும் செயல்படுத்துவதில்லை. தற்போது கர்நாடக அணைகளில் 76 சதவீதம் அளவுக்குத் தண்ணீர் இருப்பு இருந்தும், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்காமல் இருப்பதால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.கர்நாடக அரசு மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘‘இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் பின்பற்றப்பட்டன.
முதலில் கடந்த ஜூலை 30-ம் தேதி வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், அதை விட அதிகமான நீர் தமிழகத்துக்குத் திறக்கப்பட்டது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,000 கன அடியை விட அதிகமான அளவு தண்ணீர் தமிழகத்துக்குத் திறக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘கர்நாடகா சார்பில் அதிகளவிலான நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் எப்படி தண்ணீர் வரவில்லை என்று கூறுகிறீர்கள்?’’ என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், ‘‘ சமீபத்தில் கபினி உள்ளிட்ட பகுதிகளில் மழை அதிகமாகப் பெய்ததால் கிடைத்த உபரி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
ஆனால், இதற்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் எதையும் கர்நாடகா முறையாகச் செயல்படுத்தவில்லை’’ என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், விகிதாச்சாரப்படி முந்தைய பற்றாக்குறை நீர் மற்றும் ஆகஸ்ட் 31-க்குள் தரவேண்டிய நீர் என மொத்தம் 36.635 டிஎம்சி நீரைத் தமிழ்நாடு பெறுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் தி.மு.க.தரப்பை விசாரித்தனர்."மழை அதிகம் பெய்து அணைகள் நிரம்பியதால்தான் உபரி நீரை கர்நாடகா வெளியேற்றுகிறது.உரியமுறையில் நடக கவில்லை" என்று தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘கர்நாடகாவில் தற்போது மழை நிலவரம் நன்றாக இருப்பதால், இந்த வழக்கை ஒரு வாரத்துக்குப் பின்னர் விசாரிக்கலாம்’’ என்று கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், “வழக்கு விசாரணை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள வினாடிக்கு 12,000 கன அடி நீர் என்ற உத்தரவை கட்டாயம் கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.



