யார் அந்த சூப்பர் பவர்? -
முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக, தமிழக அரசின் செயல்பாடுகளை 'துக்ளக் தர்பார்' என விமர்சித்துள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்றைய தினம் அதிகார ஆணவத் திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இன்றைய தினம் மாண‘வ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழக காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்ட நிலையில், சுற்றறிக்கைகளை திரும்பப் பெறுவதாக தவெக அரசு பின்வாங்கியுள்ளது.
அப்படியெனில், சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியவர் யார்?
முதல்வர் விஜய்க்கே தெரியாமல் இவையெல்லாம் நடக்கிறதா? அல்லது முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?
ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு இணையாக தமிழகத்தை ஆளும் தவெக அரசும் இத்தகைய மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை திமுக வன்மையாக கண்டிக்கிறது.
தவெக அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் தங்கள் போராட்டக் குணமிக்க கட்சிகள் காணாமல் போகும் வரை த.வெ.கவுக்கு முட்டுக் கொடுத்து இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா?’ என்றும் திமுக விமர்சித்துள்ளது.* எப்சிஆர்ஏ சட்டப்படி பதிவு செய்து இயங்கும் அமைப்புகள் 14,451
* லைசென்ஸ் ரத்தானவை 22,494
* காலாவதியானவை 15,230
இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கான சட்ட விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது ஒன்றிய பாஜ அரசு. இதற்காக வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதா - 2026ஐ கடந்த மார்ச் மாதம் மக்களவையில் அறிமுகம் செய்தது. இதில், சில முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் முக்கிய திருத்தங்களாக வெளிநாட்டு நிதியினை பெறக்கூடிய ஓர் அமைப்பின் எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காலாவதியானாலோ வெளிநாட்டு நிதியுதவி மூலம் வாங்கப்பட்ட அல்லது கட்டப்பட்ட சொத்துக்கள் (நிலம், கட்டிடங்கள்) அரசின் சிறப்பு அதிகார அமைப்பிடம் ஒப்படைக்கப்படும். இதுபோல், சொத்துக்களை அரசு துறைகளுக்கு மாற்றேவா அல்லது விற்பனை செய்யவோ இந்த அதிகார அமைப்புக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்டதன் மூலம் கிடைக்கும் தொகை இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் சேர்க்கப்படும். மேலும், குறித்த காலத்துக்குள் புதுப்பிக்கப்படாத அல்லது புதுப்பிக்க மறுக்கப்பட்ட எப்சிஆர்ஏ உரிமங்கள் தானாகவே செல்லாததாகிவிடும். இதுமட்டுமின்றி வெளிநாட்டு நிதி பெறும் அமைப்பின் அறங்காவலர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு இதில் சட்டப்பொறுப்பு உள்ளது. வெளிநாட்டு நிதி பெறுவதில் அல்லது பயன்பாட்டில் விதி மீறல் கண்டறியப்பட்டால் இது குறித்து விசாரணை தொடங்க ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களில், சிறுபான்மை அமைப்புகள் நிதி பெறுவதை முடக்கக்கூடிய வகையிலான அம்சங்களை நீக்க வேண்டும். சில கடுமையான விதிகளை தளர்த்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். சிறுபான்மை அமைப்புகள் நிதி பெறுவதை முற்றிலும் முடக்கும் வகையில் திருத்தங்கள் அமையக் கூடாது; வெளிநாட்டு நிதி என்றாலே சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் பிரதான வாதமாக உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியும் இந்த திருத்தங்களை எதிர்த்து வருகிறது.
ஆனால், இந்தியாவில் எப்சிஆர்ஏ சட்டத்தின் தொடக்கப்புள்ளியை ஆராயும்போது, அது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது என்பதையும் மறுக்க முடியாது. அதாவது, வெளிநாட்டு நிதி பெறுவதை கட்டுப்படுத்தும் தடுப்புச் சுவர் கட்டமைக்கப்பட்டது ஒன்றியத்தில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான். 1976ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, வெளிநாட்டு நிதி பெறுவதை கட்டுப்படுத்த முதன் முதலாக சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதில், அரசியல் கட்சிகள், அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் வெளிநாட்டு நிதி பெற தடை விதிக்கப்பட்டது. இதுபோல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்கள், செய்தித்துறை சார்ந்தவர்கள் நிதி பெறுவது தடை செய்யப்பட்டது. அதேநேரத்தில், ஒரு அமைப்பு அரசியல் கட்சி தொடர்புடையதாக இருப்பதாக கருதினால் அந்த அமைப்பு நிதி பெறுவதையும் ஒன்றிய அரசு கட்டுப்படுத்தும். அதாவது, அத்தகைய அமைப்புகள் ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் நிதி பெற முடியாது.
இது மட்டுமின்றி, வெளிநாட்டு நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் தங்கும் வசதி, போக்குவரத்து, மருத்துவ சேவைகளும் இந்த சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இதன்பிறகு 1984 அக்டோபர் 20ம் தேதி, வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்தச் சட்டம் 1985ல் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு சட்டமாக்கப்பட்டன. இதற்கு 1985 ஜனவரி 31ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்து சட்டமானது. இதில் மிக முக்கியமான சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.வெளிநாட்டு நிதி பெறுவதை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளுக்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டது. அதாவது, தேர்தல் ஆணையத்தில் கட்சிச் சின்னம் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மட்டுமின்றி, தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் சில பதிவு செய்யப்படாத அரசியல் அமைப்புகளும் வெளிநாட்டு நிதி பெற கட்டுப்பாடு செய்யும் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன. வெளிநாட்டு நிதி பெறும் அமைப்பு அல்லது தொண்டு நிறுவனம் யாரிடம் இருந்து நிதி பெறுகிறது என்பது கண்காணிக்கப்படும்.
அது மட்டுமின்றி, வெளிநாட்டு நிதி பெறும் நிறுவனம் இந்தியாவில் உள்ள மற்றொரு நிறுவனம் அல்லது அமைப்புக்கு நிதிப் பரிமாற்றம் செய்திருந்தால், அதுவும் வெளிநாட்டு நிதி பங்களிப்பில் இருந்து அளிக்கப்பட்ட தொகையாகவே கருதப்படும். இதன்மூலம், 3வதாக நிதி பெறும் நிறுவனமும் இந்த சட்ட நடவடிக்கைக்குள் தானாகவே வந்து விடும். இதன்மூலம், வெளிநாட்டு நிதி எந்த வகையாக சென்றிருந்தாலும், அதன் கடைசி கட்டம் வரை கண்காணிப்புக்கு உரியதாகி விடுகிறது.
இது வெளிநாட்டு நிதியை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் காங்கிரஸ் அரசு ஏற்படுத்திய மிகப்பெரிய மற்றும் நுணுக்கமான சட்ட விதியாக கருதப்படுகிறது. மேலும், வெளிநாட்டு நிதி பெறும் நிறுவனங்கள் உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) மற்றும் சங்கங்கள் பதிவுக்கான கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டன. வெளிநாட்டு நிதி பெறும் இந்த அமைப்புகளின் கணக்குகளை தணிக்கை செய்ய அரசுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.
அதாவது, வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவனம் அல்லது அமைப்பு சரியான முறையில் கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலோ, அல்லது சமர்ப்பித்த கணக்கில் சந்தேகம் எழுந்தாலோ அரசு அந்த நிறுவனத்தின் வரவு செலவுகளைத் தணிக்கை செய்யும். இதற்காக 15 ஏ என்ற பிரிவு புதிதாகச் சேர்க்கப்பட்டது. சட்ட விதிகளை மீறி வெளிநாட்டு நிதி அல்லது நன்கொடையை பெறுவது அல்லது பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
2வது முறையாக மீண்டும் விதி மீறல் நடந்தால், அந்த அமைப்பு 3 ஆண்டுக்கு வெளிநாட்டு நிதி பெற தடை விதிக்கப்படும். இதைத்தொடர்ந்து மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை புகுத்தி காங்கிரஸ் அரசு சட்டத்தையே முழுமையாக மாற்றியது. இதில், வெளிநாட்டு நிதி பெறும் அமைப்புகள் உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்து பெறும் சான்று 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன்பிறகு இதனை புதுப்பிக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்த அமைப்புகளை சஸ்பெண்ட் செய்யவும் கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டது.
இது அமலுக்கு வந்த பிறகு, வெளிநாட்டு நன்கொடை பெறும் 4,138 அமைப்புகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் 2014ம் ஆண்டு பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, மேற்கண்ட காங்கிரஸ் அரசு சட்ட விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக சுமார் 10,000க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதன்பிறகு, எப்சிஆர்ஏ சட்டங்களில் 2020 வரை மாற்றம் செய்யவில்லை.
ஆனால், அது தொடர்பான நிதிச்சட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டு வந்து, முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டன. 2020ம் ஆண்டு தான் எப்சிஆர்ஏ சட்ட விதிகளில் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு திருத்தங்கள் செய்தது. இதில், பிரிவு 8ல் ஒரு முக்கிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, வெளிநாட்டு நிதி பெறும் அமைப்பு அல்லது நிறுவனம் பெறும் நன்கொடையில் ஒரு நிதியாண்டில் 50 சதவீதம் செலவிடலாம் என்பது 20 சதவீதமாக குறைக்கப்பட்டது. 20 சதவீதத்துக்கு மேல் செலவிடுவதாக இருந்தால் ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
அரசியல் செய்தி
இதுபோல், வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெறும் நிதியை வேறு நபருக்கு அல்லது அமைப்புக்கு மாற்றக்கூடாது என பிரிவு 7ல் திருத்தம் செய்யப்பட்டது. மற்றொரு முக்கிய திருத்தமாக, அனைத்து நிதியும் டெல்லி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கணக்கு தொடங்கி அதன் மூலமாகவே வெளிநாட்டு நன்கொடையை பெற வேண்டும் என்பதாகும்.
வெளிநாட்டு நன்கொடைகளை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்த சட்டம் தான் சிறுபான்மை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நிதி பெறுவதற்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறது எனவும், இதைத்தான் பாஜ அரசு அடுத்த கட்ட நகர்வாக எடுத்துச் செல்கிறது எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
* காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்திய முக்கிய விதிகள்* 1976ம் ஆண்டு முதல் எப்சிஆர்ஏ சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வெளிநாட்டு நிதி பெற தடை விதிக்கப்பட்டது.
* ஊடகங்கள் மற்றும் அதனை சார்ந்தவர்கள் நிதி பெற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது ஊடக சுதந்திரத்தின் மீதான அடக்கு முறையாகவும் அப்போது விமர்சிக்கப்பட்டது.
* அரசியல் கட்சிகள் கட்டுமின்றி, அத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் அமைப்புகளும் நிதி பெற தடை விதிக்கப்பட்டது.
* 1984-85ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, தன்னார்வ அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற விதிகள் மிகக் கடுமையாக்கப்பட்டன.
* வெளிநாட்டு நிதி பெறும் அமைப்பு அல்லது தொண்டு நிறுவனம் யாரிடம் இருந்து நிதி பெறுகிறது என்பது கண்காணிக்கப்படும். அது மட்டுமின்றி, வெளிநாட்டு நிதி பெறும் நிறுவனம் இந்தியாவில் உள்ள மற்றொரு நிறுவனம் அல்லது அமைப்புக்கு நிதிப் பரிமாற்றம் செய்திருந்தால், அந்த நிறுவனமும் இந்த சட்ட நடவடிக்கைக்குள்வந்து விடும்.
* வெளிநாட்டு நிதி பெறும் இந்த அமைப்புகளின் கணக்குகளை தணிக்கை செய்ய அரசுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.
* தொடர்ந்து விதி மீறல் நடந்தால், அந்த அமைப்பு 3 ஆண்டுக்கு வெளிநாட்டு நிதி பெற தடை விதிக்க வகை செய்யப்பட்டது.
* காங்கிரஸ் அரசு அடுத்தடுத்து கொண்டு வந்த கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளால் 4,138 அமைப்புகளின் பதிவுகள் ரத்தாகின.








