வன்முறை,ஊழல் களங்கம்
மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்க முயன்ற மணிகண்டன் (26), தினேஷ் (29) இருவரும் சென்னையை அடுத்த நரசத்பேட்டையில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். 3000 மாத்திரைகள் அவர்களிடம் பறிமுதல்
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தொகையை உயர்த்தி அறிவித்த முதலமைச்சரின் அறிவிப்பு விளம்பரத்துக்காக மட்டுமே செய்யப்பட்டது?- மருத்துவர் எழிலன் நாகநாதன் கேள்வி
நீட் தேர்வில் இன்னமும் குறைபாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
▪️சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு. அமித் ஷா தலைமையில்நடக்கும் மாநாட்டில் 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு
▪️உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதலமைச்சரான பிறகு முதல்முறையாக விஜய் சந்திப்பு. கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இருவரும் இரவு விருந்தில் பங்கேற்றனர்
▪️சென்னை, திருப்பூர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை. கொடைக்கானலில் தொடர்ந்து 6வது நாளாக பெய்த மழையால் குளு குளு சீசன்
📰 மதுரை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் கைது.மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு
▪️சர்கார் பட பேனர்களை கிழித்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்ததாக பேசிய அமைச்சர் ஆனந்த்துக்கு கண்டனம்.அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்திருப்பதாக அதிமுக பதிலடி.
▪️விழுப்புரம் கோட்டத்தில் குறைந்த வருவாய் ஈட்டும் 136 புறநகர் பேருந்து சேவைகள் நிறுத்தம். போக்குவரத்துக்கழக டீசல் செலவை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பயணிகள் அதிர்ச்சி.
ரூ30000 வழங்கும் நாடு.
ஒரு நாட்டின் அரசாங்கம் தனது குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.30,000 பணத்தை டெபாசிட் செய்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? இதற்காக எந்தக் கடனும் வாங்காமல், தனது வருவாய் உபரியில் இருந்து அதை வழங்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா?\
வரி வருவாயிலும், தொழில்நுட்பத்தினால் கிடைத்த லாபத்திலும் ஈட்டிய ‘உபரி நிதி’-யை மக்களுக்கே திரும்பக் கொடுக்கும் ஒரு நாட்டைக் காண்பது மிகவும் அரிது. கிழக்கு ஆசியாவின் சிறிய தீவு நாடான தைவான், செயற்கை நுண்ணறிவு மூலம் பெற்ற அசுர லாபத்தை மக்களுக்கே பகிர்ந்தளித்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு நாடு தனது மக்கள் நலனுக்காக
எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதற்கு தைவான் அரசு எழுதியிருக்கும் புதிய வரலாற்று விளக்கம் இது. இது ‘இலவசம்’ இல்லை… ஒரு நாட்டின் அபாரமான ‘பொருளாதார வளர்ச்சி’யின் உச்ச அடையாளம்!தைவான் பொருளாதார அதிசயம்
பசிபிக் பெருங்கடலில், சீனக் கண்டத்தின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்த குட்டி தீவுதான் தைவான். சீனாவில் இருந்து பிரிந்தாலும், தங்களை தனி தேசம் என்று தைவான் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால், தைவான் தங்கள் ஆளுகைக்கு உட்பட்டது என்று சீனா இப்போதும் கூறி வருகிறது. இது அரை நூற்றாண்டுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே மோதலாக நீடிக்கிறது.
1960-களில் விவசாய நாடாக இருந்த தைவான், இன்று உலகின் 22-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. இதைப் ‘பொருளாதார அதிசயம்’ (Taiwan Miracle) என்பர்.
தைவானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 76 சதவீதம் ஏற்றுமதிதான். 2025-ம் ஆண்டில் தைவானின் மொத்த வர்த்தகம் 1.12 டிரில்லியன் டாலர்கள். செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஏற்றுமதி ஆகியவைதான் தைவானின் ஏற்றுமதியில் 80 சதவீதம் அடங்கியுள்ளது.
2026-ல் தைவானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 979.72 பில்லியன் டாலர்கள் எனவும், மக்களின் தனிநபர் வருவாய் 42,103 டாலராகவும் இருக்கிறது என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
2026-ம் ஆண்டில் தைவானின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 11.05 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பின்னணியில் தைவான் ஒரு வலுவான தூணாக நிற்கிறது. உலகின் மிக மேம்பட்ட செமிகண்டக்டர் உற்பத்தி மையம் தைவானில்தான் உள்ளது.
டிஎஸ்எம்சி (TSMC) போன்ற ராட்சத நிறுவனங்கள் உலகின் அதிநவீன சிப்களை தயாரிக்கின்றன. ஆப்பிள், விடியா, ஏஎம்டி, மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தைவானை மட்டுமே நம்பியிருக்கின்றன. சீனா, அமெரிக்கா இரு நாடுகளும் தங்களின் செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுக்கு 80 சதவீதம் தைவானையே நம்பியுள்ளன.
இது தவிர செயற்கை நுண்ணறிவு சேவையகங்கள், கிளவுட் கம்யூட்டிங், மின்னணு பொருட்களுக்கான தேவையால், தைவானின் ஏற்றுமதியும், ஏற்றுமதி வரி வருவாயும் அபரிமிதமாக அதிகரித்துள்ளது.
மக்களுக்கான இன்ப அதிர்ச்சி:
தைவான் அரசுக்குக் கிடைத்த கூடுதல் உபரி வருவாய் நிதியில் 7.14 பில்லியன் டாலரை ஒதுக்கி, குடிமக்கள், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களின் வெளிநாட்டுத் துணைவர்கள் (கணவன் – மனைவி) என ஒவ்வொருவருக்கும் 314 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.30,000) வழங்கப்பட இருக்கிறது.
தைவான் அதிபர் லாய் சிங் டீ விடுத்த சிறப்பு அறிவிப்பில், “அடுத்த ஆண்டில் (2027) தைவான் மக்கள் ஒவ்வொருவருக்கும் 314 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதால் அதன் பலன் மக்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக 7.14 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத வகையில் தைவான் பொருளாதாரம் வலுவானாதாக மாறியுள்ளது. செமிகண்டக்டர்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சார்ந்த துறைகளின் உற்பத்தியில் நம் தேசம் வலுவாக இருக்கிறது. குறிப்பாக சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு துறை நமது பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
மக்களுக்கு ஏன் பணம் ?
சமூக இடைவெளியைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் துறைகள் பல பில்லியன் டாலர்களை தைவான் ஈட்டினாலும், அந்தச் செல்வங்கள் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் மட்டுமே செல்கிறது. உணவகம், சில்லறை வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சேவைத் துறை மற்றும் சாமானியர்களுக்கு இது நேரடியாகக் கிடைப்பதில்லை.
சமூக அடுக்கில் மேல்மட்டத்தில் இருக்கும் 20 சதவீதம் மற்றும் அடிமட்டத்தில் 20 சதவீதம் உள்ள குடும்பங்களுக்கிடையேயான வருமான சமத்துவமின்மை 6.17 மடங்கு அதிகரித்துள்ளதால், இந்த இடைவெளியைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வை ஊக்குவிக்க:
மக்கள் கையில் பணம் சேரும்போது உணவகங்கள், கல்வி, முதியோர் பராமரிப்பு மற்றும் உள்ளூர் வணிகங்களில் அதை அவர்கள் செலவிடுவார்கள். இது பணப்புழக்கத்தை அதிகரித்து உள்ளூர் சிறுவணிகங்களைக் காக்கிறது.
பணவீக்கத்தைச் சமாளிக்க: உலகளாவிய பணவீக்கம், அமெரிக்க வரிவிதிப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் அதிகரித்துள்ள தினசரி வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க இந்தத் தொகை உதவும்.
தைவான் அரசு தனது மக்களுக்கு நேரடியாகப் பணம் வழங்குவது இது முதல் முறையல்ல. 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலையின் போது 3,600 தைவான் டாலரையும் (NT$), கொரோனா காலத்தில் (2020 – 21) 3,000 மற்றும் 5,000 தைவான் டாலர்களையும், 2023-ல் 6,000 தைவான் டாலரையும் அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது.
தைவான் அரசு தனது மக்களுக்கு ரூ.30,000 வழங்குவது என்பது வெறுமனே ஒரு இலவசத் திட்டம் அல்ல; அது ‘தொழில்நுட்பப் புரட்சி’யின் பலனை மக்களுக்கே திருப்பிக் கொடுக்கும் ஒரு விவேகமான பொருளாதார உத்தி.
செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் துறையில் உலகளவில் சாதனை படைத்து வரும் தைவான், அதன் மூலமாக கிடைக்கும் உபரி வருவாயை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பயன்படுத்துகிறது. வளரும் நாடுகளுக்கு தைவானின் இந்த ‘பொருளாதாரப் பகிர்வு மாதிரி’ ஒரு சிறந்த பாடம்.
வன்முறையும் ஊழல் களங்கமும்
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹட் பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஐந்து முறை எம்.எல்.ஏ-வும்,முன்னாள் அமைச்சருமான ஆஷிஷ் பானர்ஜி தனது கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான் எந்தவித ஊழலிலும் ஈடுபடவில்லை என்று அவர் தனதுகுறிப்பில்மறுத்துள்ள போதிலும், கடந்த மே 4-ஆம்தேதிக்குப் பிந்தைய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு மேற்கு வங்க அரசியலில் நிலவும்பதற்றமான சூழலையும், வன்முறைக் கலாச்சாரத்தையும் இந்தச் சம்பவம் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
மாநிலத்தில் புதிதாக பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும்ஊழல்கள் குறித்த விவகாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மிரட்டி பணம் பறித்த புகார்கள்மற்றும் கைது நடவடிக்கைகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை விடுத்து, அரசியல் எதிரிகளை ஒடுக்குவதிலும் பழிவாங்கும் படலங்களிலும்கட்சிகள், குறிப்பாக பாஜக குறியாக இருக்கிறது. குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவது நீதிமன்றங்களின்பணியாக இருக்க வேண்டுமே தவிர, கும்பல் வன்முறைகளும் சட்டத்தைக் கையில் எடுக்கும் அத்துமீறல்களும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும்.ஊழல் களங்கங்களைச் சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் “ஊழல் பாஜக” நடத்தும் அரசியல் நாடகங்கள் மக்களின்கவனத்தைத் திசைதிருப்புவதற்கே பயன்படுகின்றன.
சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஜனநாயக அமைப்புகள், அதிகாரப் போட்டிகளிலும் பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் மூழ்கியிருப்பது மாநிலத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.
பாஜக- திரிணாமுல் இடையிலான இந்த மோதல் பாதிக்கப்படுவது உழைக்கும் எளிய மக்கள்தான். மேற்கு வங்க அரசியலில்மலிந்துவரும் வன்முறை அரசியலை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி, உழைக்கும் மக்களின் உண்மையான நலனுக்காகவும் வெளிப்படையான நிர்வாகத்திற்காகவும் இடது முன்னணி வலுவாக குரல் எழுப்பியுள்ளது.
அரசியல் களத்தில் நிலவும் அதிகாரப் போட்டிகளும், பழிவாங்கும் படலங்களும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைத் தீவிரமாகப் பாதித்துள்ளன. சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ள சூழலில், அங்கு வன்முறை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகும்.




