வாயை மூடிக் கொண்டது ஏன்?

தனியாருக்கு இணையாக, ஆவினும் லிட்டருக்கு 50 ரூபாய் வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம். நாளை மறுநாள் முதல் ஆவினுக்குப் பால் வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவிப்புகரும்பு விளைச்சல் சரிவால் சர்க்கரை விலை கிலோவிற்கு 20 முதல் 25 ரூபாய் உயர்வு. சர்க்கரை பதுக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கைதாய் மாமன் தங்க மோதிர திட்டத்தில் ஒரு பைசாவுக்கு டெண்டர் கோரிய 2 நிறுவனங்களுக்கு பணியாணை. ஒரு கிராம் தங்கத்தின் விலை நீங்கலாக கூடுதல் கட்டணங்களுக்கு விலைப்புள்ளி நிர்ணயம்

மக்களவைத் தொகுதிகள் 543-ஆக நீடிக்க வேண்டும் என முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசாதது ஏன்? சட்டமன்றத் தீர்மானத்திற்கு விரோதமாக முதலமைச்சர் விஜய் செயல்படுவதாக திமுக குற்றச்சாட்டு




"டிரம்ப் முதல் மோடி வரை.. விஜய் வாய் திறக்கவில்லையே ஏன்?

சுப்பராயன் எம்பி


டிரம்ப், மோடியிலிருந்து தமிழ்நாட்டு அதிகாரிகள் வரை, அச்சப்பட்டுக் கலங்குவது, மார்க்சிய தத்துவஞானத்தை தாங்கி நிற்கிற கம்யூனிஸ்டுகளைக் கண்டு தான் என சுப்பராயன் எம்பி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன் தனது முகநூல் பதிவில்,


“தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடக்கிறது என்பதுமுழு உண்மையல்ல!
தோற்றத்தில் தவெக ஆட்சி!


ஆனால், உள்ளடக்கத்தில் அதிகார வர்க்கத்தின் ஆட்சிதான் நடக்கிறது!

அந்த அதிகாரவர்க்கத்தை இயக்குவது சங்கிகளின் கருத்தோட்டங்களே!


அதனால் தான் கம்யூனிச சிந்தனை கொண்ட மாணவர்களைக் குறிவைத்துக் கணக்கெடுக்கிறது!


ஆட்சியாளர்களில் இருவகை உண்டு! ஒன்று, ஆட்சியாளர்களை அதிகாரிகள் இயக்குவது!
இரண்டாவது, அதிகாரிகளை ஆட்சியாளர்கள் இயக்குவது!


இதில் முதல் வகையைச் சேர்ந்ததே தவெக அமைச்சரவை!


கம்யூனிஸ்டு மாணவர்களைக் குறிபார்த்துப் பட்டியலிட்டது குறித்து முதல்வர் வாயே திறக்கவில்லையே ஏன்?


முதல்வர் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்!


USA வின் டிரம்ப் + இந்திய மோடியிலிருந்து தமிழ்நாட்டு அதிகாரிகள் வரை, அச்சப்பட்டுக் கலங்குவது, மார்க்சிய தத்துவஞானத்தை தாங்கி நிற்கிற கம்யூனிஸ்டுகளைக் கண்டு தான்!


கார்ப்பரேட்டுகளும், அந்திய நேரடி முதலீடுகளும், ஏகாதிபத்தியங்களும் அஞ்சி நடுங்கிச் சாகட்டும்!


தொழிலாளி – விவசாய வர்க்க ஒற்றுமைச் சின்னமான செங்கொடி அதன் போர்க்கொடியே!”

என தெரிவித்துள்ளார்.
கே.சுப்பராயன் MP

316 தலித் மாணவர்களின் அயலக உயர் கல்வியை தடை செய்யும் தவெக-விசிக கூட்டணி அரசு? 

தமிழ்நாட்டில் ஆளும் தவெக- விசிக கூட்டணி 316 தலித் மாணவர்களின் அயலக உயர் கல்வியை தடை செய்வதாக திராவிடர் மாணவர் கூட்டமைப்பு (SFD) குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக திராவிடர் மாணவர் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ”


அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை (Annal Ambedkar Overses Higher Education Assistance Scheme) திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 362 மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாகவும், 131 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து த.வெ.க. அரசு வரலாற்றுச் சாதனையினைச் செய்துள்ளதாகவும்

அதனைப் பொறுக்காமல் அரசியல் உள் நோக்கத்தோடு தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு, ஆகஸ்டு 20-ந் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.

இதனைக் கேட்கும் பொழுது அமைச்சர் சொல்வது உண்மை தானே, சிறப்பாகச் செயல்படும் அரசாங்கத்தின் மீது தலித் விரோத தவெக என்று ஏன் வீண் பழி சுமத்துகிறார்கள் என்று தான் தோன்றும்.

இந்தப் பிரச்சனை மலேசியாவில் பயிலும் ஆய்வு மாணவருக்கும் சமூக நீதித்துறை அமைச்சருக்கும் இடையிலான பிரச்சினை இல்லை.


ஆம். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கவே இந்த விவாதங்கள் ஊடகங்களால் திட்டமிட்டுப் பெரிதாக்கப்படுகின்றது.

மறைக்கப்படும் உண்மை என்னவென்றால், இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 316 மாணவர்கள் இலண்டன் சென்று படிக்க முடியாது!

மாணவர் சேர்க்கையினை உறுதி செய்யும் கடைசி தேதிகள் நெருங்கிவிட்டன. ஆனால் CAS, UK VISA என்று மாணவர்கள் எதையும் பெற முடியவில்லை!

எனவே, 362 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கிவிட்டோம் என்று கூறுவது வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கப் போகிறது.

2026 ஜூலை மாத இறுதி முதல் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, லண்டனில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்ற 316 மாணவர்கள் தங்களுடைய சேர்க்கையினை உறுதி செய்ய முடியவில்லை.


காரணம், UK visa and immigration மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகையினை ஏற்க மறுத்து தமிழ்நாடு அரசு வழங்கிய உதவி தொகை உறுதியளிப்புக் கடிதத்தை நிராகரித்ததே ஆகும்.


தனியார் வங்கிகள் அளிக்கும் உறுதியளிப்புக் கடிதத்தை ஏற்கும் UK visa and immigration, தமிழ்நாடு அரசு வழங்கும் கடிதத்தை நிராகரிக்கிறது என்றால், இதன் பின்னணியில் பார்ப்பன BJP மற்றும் RSS இயங்குகிறது என்பதை உறுதி செய்யலாம்.

தேசிய அளவிலான உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் (NOS) மாணவர்கள் ஜாதி மற்றும் இந்து மதத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் குறித்து ஆய்வு செய்யக் கூடாது என்று வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ஒன்றிய BJP அரசு.


கடந்த ஆண்டு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவரகள் Oxford பல்கலைக்கழகத்தில், பெரியார் படத்தை திறந்து வைத்து, சுயமரியாதை இயக்கம் குறித்த கருத்தரங்கத்தில் சிறப்புரை ஆற்றினார்.

PEN நிறுவனம் இலண்டன் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் கலைஞர் ஆய்வு உதவித் தொகைத் திட்டத்தைத் தொங்கியது.

இந்த ஆண்டு Cambridge பல்கலைக்கழகம் திராவிடம் குறித்த ஆய்விற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்து உள்ளது.


இவற்றின் பின்னணியில் லண்டனில் உள்ள பல்கலைக் கழகங்கள் மட்டும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் உதவி பெரும் மாணவர்களை நிராகரிப்பதைக் கவனிக்க வேண்டும்.


இது உலக அளவிலான உயர்கல்வி வளாகங்களிலும், சமூகவியல் ஆய்வு நிறுவனங்களிலும் திராவிடர் கருத்தியல் நுழைந்துவிடக் கூடாது என பார்ப்பன BJP மற்றும் RSS செய்த சதியாகும்.


தினக்கூலி என்றால் என்னவென்று பலமுறை விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய ஆதிதிராவிடர் நலத்துறை, மாணவர்களுக்கு இப்போது என்ன நடக்கிறது என்பது குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறது.


ஆதிதிராவிடர் நலத் துறை UK மற்றும் ஒன்றிய அரசாங்கத்துடன் பேசியது என்ன? அதற்கு அவர்கள் தெரிவித்தது என்ன? ஒரு மாணவரைத் தாக்கி அவர் குறித்த தரவுகளை வெளியிடும் அமைச்சர் வன்னி அரசு அவர்கள், அனைத்துக் கடிதங்களையும் அதற்கான பதிலையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.


திராவிடர் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் ஜூன் 5, 2026 அன்று ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநரகத்திலும், ஜூலை 2, 2026 அன்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களை நேரில் சந்தித்தும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்,

உதவி தொகை 36 இலட்சம் போதுமானதாக இருக்காது அதனை உயர்த்த வேண்டும், மகாராஷ்டிராவை போல முழு செலவையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தோம்.


மேலும், ஒவ்வொரு ஆண்டும் 1000 மாணவர்களுக்கு அயலகக் கல்வி உதவித்தொகைகள் வழங்க வேண்டும் என்றும், ஆண்டுக்கு இரண்டு முறை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம்.


ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. அப்படிச் செய்திருந்தால் 316 மாணவர்களில் பலபேர் வேறு நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் சேர்க்கை பெற்றிருப்பர்.


இப்போது சேர்க்கை உறுதி (CAS) மற்றும் விசா செலவுகளுக்கு வங்கிக் கடன் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், ஒட்டு மொத்த கல்விக் கட்டணத்தையும் வங்கிக் கடனாகப் பெறப் போராடி வருகின்றனர்.


தலித் விரோத TVK அரசு மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் அவர்களிடம் பின்வரும் கோரிக்கைகளை திராவிடர் மாணவர் கூட்டமைப்பு முன் வைக்கின்றது.


இந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட, இலண்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்ற 316 SC/ST மாணவர்களுக்கு 36 இலட்சத்தை உடனடியாக மாணவர்களின் வாங்கி கணக்கில் வரவு வைத்து சேர்க்கையினை உறுதி செய்து (CAS ), விரைவு விசா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.


அப்படி முடியாத பட்சத்தில் மாணவர்களின் முழு கல்விக்கான செலவையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அடுத்த ஆண்டு மகாராஷ்டிரா போன்று முழு கல்விச் செலவையும் ஏற்க உறுதியளிக்க வேண்டும்.

UK மற்றும் ஒன்றிய அரசாங்கத்துடன் பேசியது என்ன?


அதற்கு அவர்கள் தெரிவித்தது என்ன? ஒரு மாணவரைத் தாக்கி அவர் குறித்த தரவுகளை வெளியிடும் அமைச்சர் வன்னி அரசு, அனைத்து கடிதங்களையும் அதற்கான பதிலையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.


அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு இரண்டு முறை விண்ணப்பிக்கவும், இரண்டுமுறை கல்வி உதவித் தொகைகளை வழங்கவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய