நூறாவது நாள் வந்த பயம்?
"இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்வதை தடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவை, கல்லூரிகளுக்கு அனுப்பிய கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது
ஒட்டு மொத்த பிரச்னைக்கும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரை பொறுப்பாக்குவதையும் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த விளக்கம் கேட்கும் கடிதத்தையும் திரும்பப் பெற வேண்டும்"
-தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிக்கை.
📌 திமுக பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லையென செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு. Comeback கொடுப்பதிலும் திமுகதான் ஸ்பெஷலிஸ்ட் என்றும் பெருமிதம்.
📌 இந்தியா கூட்டணியில் த.வெ.க.விற்கு தற்போது இடமில்லை என்று மாணிக்கம் தாகூர் பேட்டி. எம்.பி.க்கள் இல்லாத கட்சியை அழைக்க முடியாது என்றும் விளக்கம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியரை கீழேதள்ளிதாலிசெயின்பறிப்புபட்டப்பகலில் ஜிஎஸ்டி சாலையில் வழிப்பறி
📌 தவெக அரசுக்கு தாங்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? என பெ.சண்முகம் கேள்வி. முதலமைச்சர் ஜோசப் விஜய் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.
📌 மாடு தேடிச் சென்ற 3 பேரையும் கேள்வி கூட கேட்காமல் கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றது. துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பித்த நபர் பரபரப்பு வாக்குமூலம்.
📌 கேரள எல்லையோர தமிழ்நாடு மாவட்டங்களில் ஓணம் கொண்டாட்டம். கல்லூரிகளில்பாரம்பரியஉடையணிந்து, நடனமாடி உற்சாகம்.
மூன்று மாதங்களில் 'கரூர் நாயகனு'க்கு வந்த பயம்!
சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் ஒரு
நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் மாறி மாறி சல்யூட் வைத்துள்ள காட்சியை அவருக்கு வாக்களித்தவர்களாலேயே சகிக்க முடியவில்லை.
அசிங்கத்தையும் அருவருப்பையும் பட்டவர்த்தன மாகச் செய்வதன்மூலமாக அதனை நியாயப்படுத்த நினைக்கிறவர் தான் இன்று தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துள்ளார்.
மூன்றே மாதங்களில் அவருக்கு தனது செல்வாக்கு நிலைக்குமா, பதவி நிலைக்குமா என்ற பயம் வந்துவிட்டது. அதையும் அவர் உரையே காட்டிக் கொடுத்துவிட்டது.
கொடி ஏற்றிவிட்டு முதலமைச்சர் விஜய் பேசுகிறார்... “எல்லோரும் வாக்களித்துவிட்டோம், விஜய்யை ஜெயிக்க வைத்து முதலமைச்சர்ஆக்கிவிட்டோம், எனவே கடமையெல்லாம் முடிந்து விட்டது என்று யாரும் ஒதுங்கிப் போய்விடாதீர்கள்.
இனிமேல்தான் நீங்கள் நம்முடனே, அரசுடனே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்காக இருக்கிற அனைத்து நல்ல திட்டங்களையும் என்னால் செயல்படுத்த முடியும்” என்று அழுது புலம்பி இருக்கிறார்.
இந்தப் புலம்பலுக்கு, இந்த அழுகைக்கு என்ன காரணம்? அவரை நம்பி வாக்களித்தவர்கள், ‘தவறு செய்துவிட்டோம்’ என்று வருந்திக் கொண்டு இருக்கிறார்கள். 10 வயது சிறுமி கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டபோது அதை மறைக்க நினைத்தது விஜய் அரசு.
‘நீங்க ஆக்ஷன் ஹீரோ... தப்பு நடந்தா நட வடிக்கை எடுப்பீங்கன்னு நினைச்சு தானே வாக்களித்தோம்’ என்று ஒரு பெண் கதறினாரே. இப்படி பல பேரும் கதறிக் கொண்டு இருக்கிறார்கள்.
தனது படத்தைத் தயாரித்த சினிமா தயாரிப்பாளர்களுக்கு மகுடம் சூட்டிக் கொண்டு இருக்கிறார் விஜய்.
‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்த வெங்கட நாராயணா தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாம். ‘பிகில்’, ‘கோட்’ படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி கோவில்களுக்கான அறங்காவலர்களைத் தேர்வு செய்யப் போகிறாராம்.
‘லியோ’ படத்தைத் தயாரித்த ஜெகதீஷ் பழனிசாமிதான் முதலமைச்சரின் தனிச் செயலாளர். தனது ஜோசியருக்கு மகுடம். தேர்தலுக்கு முன்னதாக தனக்கு செலவு செய்தவருக்கு பதவி. இதுதான் நடக்கிறது.
இதை எல்லாம் தலையாட்டி ஏற்றுக் கொள்வார்கள் மக்கள் என்று நினைக்கிறாரா விஜய்?
பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாள் இல்லை. இதை விஜய் அரசு மறைக்கும் என்பதற்கு உதாரணம் தான் கோவைச் சம்பவம். போதை மருந்து நடமாட்டம் துளியும் கட்டுப்படுத்தப்படவில்லை.
போதைப் பொருள் நடமாட்டம் குறித்து தகவல் கொடுத்த காரணத்தால் கோவை மாணவன் அமுதன் அந்தக் கும்பலால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.
அதையே மறைக்கும் வகையில், ‘இது கோஷ்டி தகராறால் ஏற்பட்ட மரணம்’ என்று சட்டமன்றத்தில் சொன்னார் அமைச்சர் ராஜ்மோகன். காவல் துறையைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், வாய் திறக்கவில்லை.
அமைச்சர்கள் மீது, எம்.எல்.ஏ.க்கள் மீது வந்த புகார் மீதாவது நட வடிக்கை எடுத்துள்ளாரா விஜய்? திருவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது விஜய் ரசிகை ஒருவரே பாலியல் புகார் சொன்னார்.
அந்தரசிகையை கட்சியைவிட்டு நீக்கிவிட்டு சரவணனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார் விஜய். ‘அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில்
லஞ்சம்’ என குற்றம் சாட்டிய த.வெ.க. வழக்கறிஞர் கட்சியை விட்டுநீக்கப்பட்டுள்ளார்.
பவுடர் பயன்படுத்தி அதை வீடியோ எடுத்துப் போட்ட அமைச்சர் சரத்குமார் இன்னமும் அமைச்சரவையில் இருக்கிறார்.
100 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்தை அபகரித்த செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் ரமேஷ் இன்னமும் அமைச்சராகத் தான் நீடிக்கிறார்.
எவர்மீதும் இதுவரை விஜய் நடவடிக்கை எடுத்தது இல்லை.
அரசைப் பற்றி விமர்சித்து ‘ட்விட்டர்’ போட்டால் கைது. நீதிமன்றங்கள் நித்தமும் த.வெ.க. ஆட்சியாளர்கள்மீது தலையில் கொட்டுகின்றன.
சொரணையே இல்லை இவர்களுக்கு. இப்படித்தான் போய்க் கொண்டு இருக்கிறது ஆட்சி. இதை எல்லாம் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறார் விஜய்.
சுதந்திர தின விழாவுக்கு ஒரு நடிகையை அழைத்துவந்து, அவருக்கு ‘சல்யூட்’ அடிப்பதை விஜய் ரசிகர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லையே... மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
சுதந்திர தினத்தன்று விடுதலைப் போராட்ட வரலாறுகளை ஊடகங்கள் வெளியிடும்.
ஆனால் இம்முறை நடிகை ஒருவருடன் முதலமைச்சர் இதுவரை ஐந்து முறை ஒன்றாக வெளியில் வந்துள்ளார் என்று வரலாறு போடும் கேவலத்தைப் பார்க்கிறோம்.
‘விஜய் நன்றாக டான்ஸ் ஆடுவார்’ என்பதற்காக ஏறிய மின்சாரக்
கட்டணத்தை ஏற்றுக் கொள்வார்களா மக்கள்? ‘விஜய் அழகாகச் சிரிக் கிறார்’ என்பதற்காக ‘சொத்து வரியை எவ்வளவு வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி விடுவார்களா தமிழ்நாட்டு மக்கள்?
சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். ‘உங்களுக்குத் தான் வாக்களித்தோம்... வாக்களித்ததற்காக வருத்தப்படுகிறோம்’ என்று சொல்லும் வீடியோக்கள்தான் அதிகமாகப் பரவுகின்றன.
அதனால்தான், ‘என்னோடு இருங்கள், போய்விடாதீர்கள்’ என்று கழிவிரக்கம் தேடப்பார்க்கிறார் விஜய்.
மக்கள் ஏமாளிகள் அல்ல. அவர் இன்னமும் தனிமைப்படுத்தப்படுவார்.

