
🔸 தமிழ்நாட்டில் காய்கறி, அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரிப்பு. விலைவாசியை கட்டுப்படுத்த தவெக அரசு தவறிவிட்டதாக மக்கள் குற்றச்சாட்டு.
🔸 பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு.
🔸 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம். குதிரை பேரம் தொடர்பாக எடப்பாடி - செங்கோட்டையன் இடையே நேரடி மோதல்.
🔸 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு. தவெகவை விலைக்கு வாங்க முடியாதா? என சவால்.
🔸 ஆளுநர் அர்லேகருடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சந்திப்பு. த.வெ.க. மீதான குதிரை பேர புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
🔸 பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதே இடத்தில் மற்ற தொழில்களை தொடங்குவோம் என்பதா?. தவெக அரசின் அறிவிப்பு முன்னுக்குப் பின் முரணானது என நயினார் நாகேந்திரன் கண்டனம்.
🔸 சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரி தாமதப்படுத்தியதற்கு மாணவி பொறுப்பேற்பதா? மாணவியின் விண்ணப்பத்தை ஏற்று மருத்துவக் கலந்தாய்வில் அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔸 தமிழ்நாடு முழுவதும் H1 வகை இன்ஃபுளூயன்சா காய்ச்சல் அதிகரிப்பு. பொதுவெளியில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை.
🔸 கர்நாடாகவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிஐடிக்கு மாற்றம். வனத்துறையினர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் நடவடிக்கை.
🔸 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 20 எம்.பி.க்களுக்கு நோட்டீஸ். தகுதி நீக்க நடவடிக்கை குறித்து பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..
🔸 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் கொட்டிய கனமழை. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.
🔸 புதுக்கோட்டை அருகே வாட்ஸ்ஆப் வதந்தியால் ஊராட்சி அலுவலகத்தில் திரண்ட கைம்பெண்கள். உதவித்தொகைக்கு சிறப்பு அடையாள அட்டை தருவதாக பரவிய தகவலை நம்பி ஏமாற்றம்.
🔸 சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானம் ஏதும் கட்டப்படவில்லை. கலைஞர் கருத்தரங்கம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்.
🔸 புதுக்கோட்டை அருகே மஞ்சள் நோய் தாக்குதலால் பூசணி சாகுபடி பாதிப்பு. ஏக்கருக்கு 20 ஆயிரம் செலவிட்டும் பலன் இல்லாததால் கால்நடைகளுக்கு தீவனமாக்கும் அவலம்.
🔸 கேரள மாநிலம் வயநாடு மலைப்பாதையில் பெய்த கனமழையால் திடீர் நிலச்சரிவு. வாகன ஓட்டிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பரபரப்பு காட்சிகள்.
🔸 கொச்சி அருகே வணிக நிறுவன கிடங்கில் பயங்கர தீ விபத்து. தீ மளமளவென பரவி கரும்புகை எழுந்ததால் பரபரப்பு.
🔸 தெற்கு பிரான்ஸில் சுழல் சூறாவளியால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம். கதவு, ஜன்னல், நாற்காலிகள் பறந்து சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
ஈரானுக்காக களமிறங்கும்
வல்லரசுகள்? அயதுல்லா கமேனி கொல்லப்பட்ட செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, உலக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் காய்கள் வேகமாக நகரத் தொடங்கிவிட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு 'பதிலடி' கொடுக்க ரஷ்யாவும் சீனாவும் தங்களது ரகசியத் திட்டங்களைத் தீட்டி வருகின்றன. இது வெறும் ஈரான் பிரச்சனை மட்டுமல்ல, ஆசியாவில் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற்கான வாழ்வா சாவா போராட்டம்! புதின் சும்மா இருப்பாரா? தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை "ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு" எனக் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஐநா பாதுகாப்பு சபையில் (UN Security Council) அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா ஏற்கனவே தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. உக்ரைன் போரில் ஈரானின் ட்ரோன்கள் ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் உதவின. அதற்குப் பிரதிபலனாக, இப்போது ஈரானின் பாதுகாப்புக்குத் தேவையான அதிநவீன S-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை ரஷ்யா ரகசியமாக அனுப்பக்கூடும் என உளவுத் துறைகள் அஞ்சுகின்றன. ஈரானின் அணுசக்தி ம...
