"லாட்டரி மருமகன்"

 Zepto, Instamart உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் சர்க்கரை ஆர்டர் செய்ய பயனர்களுக்கு கட்டுப்பாடு.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழைநீர் வடிகால், வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்: சட்டசபையில் பி.கே.சேகர்பாபு வலியுறுத்தல்.இந்தியாவில் இருந்து 10 டன் நிவாரணப் பொருட்களுடன் மூன்றாவது விமானம் நேபாளுக்கு அனுப்பட்டது.6 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 108 ஆம்புலன்ஸ்கள் இன்று மாலை 6 மணி வரை இயங்காது என ஓட்டுநர்கள் அறிவிப்பு.பாகிஸ்தானுக்கு பறந்த விஜய்.. சிறையில் இம்ரான்கானுடன் சந்திப்பு; முதல்வர் விஜய்யை சிக்கலில் சிக்கவைக்க இஷ்டத்துக்கு ரீல்ஸ் விடும் கும்பல்: தேச பாதுகாப்பு விஷயத்தில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு அழுத்தம்,கோரிக்கை.அரசின் அங்கீகாரம் பெற்ற தொழில்களை யார் வேண்டுமானாலும் செய்யலாம் லாட்டரி சீட்டு போன்ற மக்களைச் சீரழிக்கும் தவறான தொழில்களைதான் செய்யக்கூடாது: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சுகுற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என்று கூற நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்பள்ளிகளில் சாதிப்பெயர் நீக்கம் தொடர்பாக நீதிபதி சந்துரு கமிஷன் பரிந்துரையில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை கேள்வி?நெல்லையில் தேவர் பீடம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 2 ரவுடிகள் கைது: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு.விமான நிலையம் பரந்தூர் விதி, ஓசூருக்கும் பொருந்தும்தானே தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு தமிழக வளர்ச்சியை முடக்குவது நியாயமல்ல: பா.ஜ.க, குற்றச்சாட்டு




"லாட்டரி மருமகன்"

தமிழக அரசியல் களம் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையிலான மோதலால் சூடுபிடித்துள்ள நிலையில், சட்டப்பேரவை விவாதங்களிலும் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நீடித்து வருகிறது.


குறிப்பாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேவையில்லாமல் பேசுவதும் மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே விவாதம் எழும் போதெல்லாம், லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் பெயர் பேசுபொருளாகி வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.


2024ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய விஜய், தற்போது தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும், தேர்தல் பிரசார காலத்திலிருந்தே திமுக எதிர்ப்பை தனது முக்கிய அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.


அந்த அணுகுமுறையே தேர்தல் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்ததாக தவெக தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீப காலமாக சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பொதுமக்களும் அரசியல் ஆர்வலர்களும் அதிகளவில் கவனித்து வருகின்றனர்.


சட்டப்பேரவைக்குள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் ஒவ்வொரு முறையும், மார்ட்டின் பெயர் தொடர்புடைய அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.


கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின், வெளிமாநிலங்களில் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வந்தவர் எனக் கூறப்படுகிறது.


பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுடன் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


அவரது மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழக அரசியல் மற்றும் பொதுவாழ்வுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.


இதன் காரணமாகவே சட்டப்பேரவை விவாதங்களில் மார்ட்டின் பெயர் அவ்வப்போது எதிரொலிப்பதாக தெரிகிறது.


சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விவாதம் சலசலப்பை ஏற்படுத்தியது.


சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவை விமர்சித்துப் பேசியபோது, திமுக உறுப்பினர்கள் அவரை “லாட்டரி மருமகன்” எனக் குறிப்பிட்டனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும், மார்ட்டினின் மனைவியுமான அதிமுக லால்குடி தொகுதி எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர்,“என் கணவரை பற்றி தேவையில்லாமல் திமுகவினர் பேச வேண்டாம். எனது மருமகன் ஆதவ் அர்ஜுனா லாட்டரி தொழிலில் தற்போது இல்லை. எனவே, அவரை லாட்டரி தொழிலுடன் தொடர்புபடுத்திப் பேசுவது தேவையற்றது” என லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.


மேலும், அரசியல் விவாதங்களுக்காக குடும்ப உறுப்பினர்களை இழுப்பது சரியல்ல என்றும் அவர் கூறினார். லீமா ரோஸ் மார்ட்டினின் இந்தப் பேச்சு, “லாட்டரி மருமகன்” என்ற விமர்சனத்துக்கு நேரடியான பதிலாக பார்க்கப்பட்டது.


இதன் பின்னர், மார்ட்டின் பெயரை மையமாக வைத்து திமுக மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்புக்கு இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த சூழலில், பொதுவெளியிலும் சட்டப்பேரவையிலும் தன்னைப் பற்றியோ தனது குடும்பத்தினரைப் பற்றியோ தேவையற்ற கருத்துகள் தெரிவிக்க வேண்டாம் என மார்ட்டின் தனது நண்பர் ஒருவர் மூலம் திமுக தலைமைக்கு தகவல் அனுப்பியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


அதற்கு திமுக தரப்பில், இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பேச்சுகளே முக்கிய காரணம் என்றும், அவர் தொடர்ந்து தங்களை விமர்சித்தால் அதற்கான பதில்களை தாங்களும் வழங்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேச மார்ட்டின் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த சந்திப்பு நடைபெறுமா, நடைபெற்றால் என்ன முடிவு எட்டப்படும் என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய