தமிழ் இளைஞருக்குவேலை கொடு..!

உ.பி. நிறுவனத்துக்கு நடத்துனர் நியமன ஒப்பந்ததிற்கு தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் சுமார் 30,000 காலி இடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. 

அரசுப் போக்குவரத்து கழகங்கள் மக்களின் அன்றாட பயணத் தேவைகளை நிறைவேற்றும் அடிப்படையான சேவை நிறுவனமாகும்.

 தமிழ்நாட்டில் தினமும் சுமார் 2 கோடி பேர் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயணம் செய்து வருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவது போக்குவரத்துக் கழகங்களின் மிக முக்கியமான கடமையாகும்.

50 ஆண்டுகளாக தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்து முறையான பயிற்சி வழங்கி சிறப்பான சேவையை போக்குவரத்துக் கழகங்கள் செய்து வந்தன. 

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் காலிப்பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்தனர். இதற்கு எதிராக ஐகோர்டில் சிஐடியு வழக்கு தொடர்ந்தது. 

ஒப்பந்தப் பணியாளர் முறை இட ஒதுக்கீட்டை மறுப்பது, சமூக நீதிக்கு எதிரானது, பாதுகாப்பான பயணத்திற்கு பயன்படாது என ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

 அரசு மேல்முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்ற அரசின் வாதத்தை ஏற்று தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தது ஐகோர்ட். வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

திமுக அரசு காலிப்பணியிடங்களைப் நிரப்பாமல், ஒப்பந்தப் பணியாளர்களை ‘சால்வாட்’ என்ற நிறுவனம் மூலம் நியமனம் செய்தது. 

ஆனால் தற்போது தவெக அரசு தற்போது உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த “எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்” என்ற  நிறுவனத்திற்கு டெண்டர் மூலம் நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. 

லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும்போது, அவர்களுக்கு வாய்ப்பை மறுக்கும் வகையில் உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு ஒப்பந்தம் முறையில் நியமனம் செய்ய ஆணை வழங்கியிருப்பதுகடும்கண்டனத்திற்குரியது. 

தி.மு.க, ஒப்பந்தத்தின மூலம் தமிழ் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது,ஆனால் த.வெ.க,ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும்.

 இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் கைவிடப்பட்டு சமூக நீதியும் பாதிக்கப்படும்.

எனவே, மாநகரப் போக்குவரத்து கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க உத்திரப் பிரதேச நிறுவனத்திற்கு வழங்கியுள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், சிந்தூரி மேனேஜ்மெண்ட் சொல்யூசன்ஸ் என்கிற நிறுவனத்திற்கு நிர்வாக பணியாளர்கள் 250 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஆணை வழங்கியிருப்பதையும் ரத்து செய்ய வேண்டுமெனவும், 

போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரந்தரமான முறையில் பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எங்கள் மாநில விவகாரத்தில் யாரும் தலையிட கூடாது' -

கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவகுமார்  ‘எங்கள் பணியை செய்ய எங்களுக்கு தெரியும்.


ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்ற மாநிலம் தலையிடக்கூடாது’ என விஜய் கருத்துக்கு கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.


கர்நாடகா மாநிலம் அன்னூர் அருகே ஹனூர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று அம்மாநில வனத்துறை நடத்திய 

துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.ஒருவர் காயமடைந்தார்.

அவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கர்நாடக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஆனால், இது ஒரு போலியான என்கவுண்டர் என அரசியல் கட்சித் தலைவர்களும், பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்களும் குற்றஞ்சாட்டினர்.


மேலும், இச்சம்பத்திற்கு முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கர்நாடக அரசை முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும் என அனைத்து தலைவர்களுக்கு வலியுறுத்தினர்.

இதுபோன்ற சூழலில், அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

மேலும், “கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல. இச்சம்பவம் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்து, தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.


இதேபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், “ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சொந்த பிரச்சினைகள் உள்ளது.


எங்களது மாநிலத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது எங்களுக்கு தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம். அவர்கள் அவர்களது வேலையை செய்யட்டும்.


அம்மாநில நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. முதலமைச்சர் விஜய்யின் கருத்துக்கும் பதிலளிக்கப் போவதில்லை.

அதேசமயம், எங்களது மாநிலத்தின் கண்ணியத்தையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் அவர்களது பணியை செய்யட்டும்; நாங்கள் எங்களது பணியை செய்வோம்” என்றார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய