ஆட்சியில் சர்கஸ் கும்பல் -

 

ஆட்சியில் சர்கஸ் கும்பல் - உதயநிதி

சென்னையில் திமுகவில் தலைமை நிலையமான அறிவாலயத்தில், அக்கட்சியின் வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


அதில் பங்கேற்று பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, “திமுக சட்டத்துறை போராடி பெற்றுக்கொடுத்த அனைத்தும் முக்கியமானவை. தேர்தல் காலங்களில் வார் ரூம் அமைத்து சட்டத்துறை செய்த பணிகள் யாராலும் செய்ய முடியாது.

தமிழ்நாடே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் முடிவு இன்று வந்துள்ளது. சர்க்கஸ் கும்பல் கும்பல் ஆட்சிக்கு வந்ததை அடுத்து சட்டத்துறையின் பணி அவசியமானதாக தேவைப்படுகிறது. மோசமான பாசிச அரசாக தவெக அரசு செயல்படுகிறது.


தூங்கி எழுந்திருத்தால் யாரை கைது செய்யலாம் என்று இந்த அரசு செயல்படு வருகிறது. இரண்டு வாரத்திற்கு முன் இந்த அரசு என்னையும் கைது செய்ய முயற்சித்தது.


காலை 8 மணிக்கு என் வீட்டில் பேப்பர் படித்து கொண்டிருக்கும்போது காவல்துறை என் வீட்டுக்கு வந்தனர். 

டம்மி முதல்வர், வெட்கங்கெட்ட, கேடு கெட்ட அரசு என விவசாயிகள் கூட்டத்தில் பேசியதற்காக கைது செய்ய வந்துள்ளனர் என்று நினைத்தேன். ஆனால் காவிரியில் தண்ணீர் வரவேண்டும் என்று பேசியதற்காக கைது செய்தனர். 

என்னை கைது செய்ய காவல்துறையினர் வந்த உடன் நான் முதலில் வழக்கறிஞர் அணியை தான் தொடர்பு கொண்டேன். தலைவர் போன் செய்து உடனே கைதாக வேண்டாம் என கூறினார். 

மின்னல் வேகத்தில் உயர்நீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர்கள் சட்டபோராட்டத்தை கையிலெடுத்தனர். என்னை சட்டமன்றத்தில் பேசுவதை தடுக்கும் அளவிற்கு இவர்களுக்கு மூளை இல்லை. அப்படியே நான் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தெரியாதவர்கள்.

டம்மி முதலமைச்சருக்கும் யார் எம் எல் ஏ, யார் அமைச்சர் என்று கூட தெரியாது. மிசா, எமர்ஜென்சியை பார்த்த திமுக இதற்கெல்லாம் பயப்படாது.


சொல்லி அடித்தது போல் தஞ்சாவூர் செல்வதற்கு முன் நீதிமன்றம் மூலம் கைது நடவடிக்கையை தடுத்தது வழக்கறிஞர் அணி தான். ஜாலியா ட்ரிப் செல்வது போல், ரோடு ஷோ வாக தான் சென்றோம்.


அரசின் மூலம் எந்த செலவும் இல்லாமல் ரோடு ஷோ நடத்தினோம். தேர்தலுக்கு பிறகு சற்று சோர்ந்து போய் இருந்த நாம் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளோம்.

நாளை சட்டமன்றத்தில் என்னென்ன கூத்தடிக்க உள்ளனர் என தெரியவில்லை.  இந்த 100நாட்களில் என்னை மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், திமுக ஜென் ஸி இளைஞர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த சோபா மாடல் அரசுக்கு நம்முடைய சட்டத்துறையை பற்றி தெரியவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது,  குறிப்பாக எதிர்கட்சியாகவே இல்லாத போது,  முதலமைச்சரையே ஊழல் வழக்கில் சிறைக் அனுப்பிய துறை திமுக சட்டத்துறை.

யார் அமைச்சர், யார் சட்டமன்ற உறுப்பினர் என மக்களுக்கு தெரியவில்லை. லாட்டரி விற்ற, திருட்டு விசிடி விற்ற, உருட்டுகட்டை, பவுடர் போடுற அமைச்சர் யாரு?  அமைச்சர்களின் பெயரை விட பட்டப்பெயர் வைத்து சொன்னால் தான் மட்டும் தெரிகிறது.

இன்னும் வரும் காலத்தில் அடுத்தடுத்து தவெக அமைச்சர்கள் பெயில் வாங்கும் நிலைக்கு வருவார்கள். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளதாக ஆளுங்கட்சி தரப்பிலே புகார் கொடுக்கப்பட்டுள்ளது வெகு விரைவில் அவர்கள் மாட்டுவது உறுதி. இதை ஆதாரத்துடன் நாம் வெளியே கொண்டு வர வேண்டும்.

அதிகாரம் இருக்கும் திமிரில் ஆளுங்கட்சியினர் உள்ளனர். மக்கள் விரோத அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை, மீண்டும் நம் தலைவரை முதலமைச்சராக ஆக்கும் வரை தொடர்ந்து நாம் பணியாற்ற வேண்டும்.




பகுத்தறிவு நடிகர்கள்?

நாடகக்காரர்களை எடுத்துக் கொள்வோம். மற்ற நாடுகளில் உள்ள நாடகக்காரர்களோ, சிறந்த படிப்பாளிகளாகவும், தேசத்தைச் சீர்திருத்த வேண்டும் என்னும் எண்ணமுடையவர்களாகவும் இருந்து வருகிறார்கள்,

 இதற்குத் தகுந்தபடி பாமர மக்களின் மனத்தில் பகுத்தறிவு உணர்ச்சியை ஊட்டத் தகுந்த சிறந்த நாடகங்களை நடத்தி வருகின்றவர்கள். 

ஆனால், நமது நாட்டு நாடகக்காரர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் வயிற்றுப் பிழைப்யே குறியாகக் கொண்டவர்களாதலால் இவர்கள் பாமர மக்களின் அறியாமையை இன்னும் வளர்க்கக் கூடிய மத சம்பந்தமான புராணங்களையே நாடகங்களாக நடத்தி வருகிறார்கள்.

 நமது இயக்கம் பரவுவதன் காரணமாக, இந்தப் புராணப் பிழைப்பு நாடகக் காரர்களுக்கு வருவாயும் குறைய ஆரம்பித்து வருகிறது ஆதலால், இவர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குச் “சீன்”களும், நாடகம் நடத்தும் போதெல்லாம் அதிகப் பணத்தைச் செலவு செய்து விளம்பரமும் செய்ய வேண் டியிருக்கிறது.அப்படியும் சரியானப்படி பணம் வசூல் ஆவதில்லை. ஆகையால், இவர்களும் இப்பொழுது நம்மை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும், அதிகமாக நமது இயக்கத்தை மறைமுகமாகத் தாக்கும் நாடகக்காரர்கள் பார்ப்பனர்களே என்பதை நாம் கூற வேண்டியதில்லை.

 ஏனெனில், மதத்தினால் பாமர மக்களை ஏமாற்றி வருபவர்கள் பார்ப்பனக் கூட்டத்தார் அல்லவா? ஆகையால் நாடகக்காரர்கள் நமது இயக்கத்திற்கு எதிரான பிரசாரம் பண்ண ஆரம்பித்திருப்பதும் ஆச்சரியமில்லை.

 இனி இவ்வாறு மதத்திற்கும், வருணாசிரம தருமத்திற்கும் புராணங்களுக்கும் பரிந்து  பேசி, நம்மை எதிர்க்க மேற்கூறிய அரசியல்வாதிகள், பண்டிதர்கள், புரோகிதர்கள் முதலான கூட்டத்தார்க்கு அக்கறை உண்டாகக் காரணமென்ன?

 என்பதைப் பற்றி வாசகர்களே தெரிந்து கொண்டிருக்கலாம். இக்கூட்டத்தார்கள் அனைவரும் மதத்தின் பெயராலும் வருணாசிரம தருமத்தின் பெயராலும், புராணங்களின் பெயராலும், வயிறு வளர்க்கின்றவர்கள். இவைகளைக் கொண்டு ஏழை மக்களின் செல்வத்தைக் கொள்ளையடிக் கின்றவர்கள். 

ஆகையால் தான் இவற்றைத் தடுக்கும் நம்மைப் பற்றித் தப்புப் பிரசாரம் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதில் அய்யமில்லை.

ஆகையால், இனியும் இக்கூட்டத்தாரின் வார்த்தை களுக்கு ஏமாறாமல் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும்படி பாமர மக்களுக்கு உதவி செய்வது தான் நமது கடமையாகும். அரசியல்வாதிகளின் பேச்சையும், புராணப்பிரசங்கிகளின் பேச்சையும், புரோகிதர்களின் பேச்சையும் நம்பி தாம் சம்பாதிக்கும் பொருளை இவர்கள் கையிற் கொடுத்து விட்டு தரித்திரமாகவும் அடிமையாகவும் வாழ வேண்டாம் எனப் பாமர மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டியதே சுயமரியாதைத் தோழர்களின் கடமை யாகும். 

மதத்திற்கு ‘வக்காலத்து வாங்கிப்’ பேசுபவர்களின் பேச்சை கேட்டு யாரும் ஏமாறப் போவதில்லையென்றும், இவர்களால் சுயமரியாதை இயக்கம் அழிந்துவிட போவ தில்லையென்றும் எச்சரிக்கை செய்வதுடன், இக்கூட்டத் தாரையும் மதத்தின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றுத் தொழிலை மேற்கொள்ளாமல் வேறு கவுரவமான தொழிலை செய்து ஜீவிக்குமாறு வேண்டுகிறோம்.

குடிஅரசு’ – தலையங்கம் – 04.09.1932

 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய