நன்றி மறப்பது நன்றன்று...!

 









தி.மு.க.வும்

இசுலாமியர்களும் !

இசு­லா­மி­யர்­களை தி.மு.க. கொச்­சைப்­ப­டுத்­தி­விட்­ட­தாக த.வெ.க. உறுப்­பி­னர் ஒரு­வர் சட்­ட­மன்­றத்­தில் பேசி, அதற்கு கடு­மை­யான எதிர்ப்பு கிளம்­பி­ய­தும் அதைத் திசை திருப்­பு­வ­தற்­காக அழு­தும் நாட­கம் நடத்தி இருக்­கி­றார். 

இவை அனைத்­தும் சபை மாண்­புக்கு இழுக்கு ஏற்­ப­டுத்­தும் காட்­சி­க­ளாக உள்­ளன.

இசு­லா­மிய மக்­க­ளுக்கு திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், கழக அர­சு­க­ளும், தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞ­ரும், இன்­றைய தலை­வர் திரா­விட மாடல் நாய­கன் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய பணி­களை இசு­லா­மிய மக்­கள் மறக்க மாட்­டார்­கள். 

என்­றைக்­கும் அவர்­கள் நன்­றிப் பெருக்­கு­டன் இருக்­கக் கூடி­ய­வர்­கள்.

சில­ரைப் போல கூலிக்கு விலை போகக் கூடி­ய­வர்­கள் அல்ல.

தமிழ்­நாட்­டின் மிகப்­பெ­ரிய அர­சி­யல் மாற்­றத்தை 1967 ஆம் ஆண்டு சட்­ட­ச­பைத் தேர்­த­லில் உரு­வாக்­கி­யது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அந்த மாற்­றத்தை உரு­வாக்­கி­ய­வர் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள். அவ­ருக்­குத் தோள் கொடுத்து நின்­ற­வர் கண்­ணி­யத்­துக்­கு­ரிய காயிதே மில்­லத்.

1972 ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் 4 ஆம் நாள் காயி­தே­மில்­லத் அவர்­கள் மறைந்­தார்­கள். அவ­ரது உடல்­நிலை மோசம் அடைந்து வரு­கி­றது என்ற செய்தி கிடைத்து மருத்­துவ மனைக்­குச் சென்று முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­கள் பார்த்­தார்­கள். 

கண்­மூ­டிப் படுத்­தி­ருக்­கி­றார் காயி­தே­மில்­லத் அவர்­கள். அப்­போது முதல்­வர் கலை­ஞர் அவர்­கள், ‘’அய்யா! நான் கரு­ணா­நிதி வந்­தி­ருக்­கி­றேன்” என்று சொல்லி இருக்­கி­றார்­கள். லேசாக கண் திறந்து பார்க்­கி­றார் காயி­தே­மில்­லத் அவர்­கள். 

முதல்­வர் கலை­ஞ­ரைப் பார்த்­தார். கை நீட்டி கலை­ஞ­ரின் கையை பிடிக்­கி­றார். ‘’முஸ்­லீம் சமு­தா­யத்­துக்கு தாங்­கள் செய்த உத­விக்­கெல்­லாம் எனது நன்றி” என்று காயி­தே­மில்­லத் அவர்­கள் சொன்­னார்­கள்.

« முதல்­முறை ஆட்­சிக்கு வந்­த­துமே மிலா­து­ந­பிக்கு அரசு விடு­முறை விட்­ட­வர் கலை­ஞர். அதனை அ.தி.மு.க. அரசு ரத்து செய்­தது.

 மீண்­டும் ஆட்­சிக்கு வந்த கலை­ஞர் மீண்­டும் அர­சாணை வெளி­யிட்டு மிலாது நபிக்கு அரசு விடு­முறை அறி­வித்­தார்.

« உருது பேசும் முஸ்­லீம்­களை பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லில் சேர்த்­தார்.

« சிறு­பான்­மை­யி­னர் நல ஆணை­யத்தை தொடங்­கி­னார்.

« வஃபு வாரிய சொத்­துக்­க­ளைப் பரா­ம­ரிக்க முதன்­மு­த­லாக மானி­யம் வழங்­கி­னார்.

« தமிழ்­நாடு சிறு­பான்­மை­யி­னர் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக் கழ­கம் தொடங்­கி­னார்.

« உருது அகா­ட­மி­யைத் தொடங்­கி­னார்.

« காயி­தே­மில்­லத் மணி­மண்­ட­பம் கட்ட நிதி ஒதுக்கி இடம் ஒதுக்­கி­னார்.

« பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் இட­ஒ­துக்­கீட்­டில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு 3.5

சத­வி­கி­தம் உள் ஒதுக்­கீடு கொடுத்­தார்.

« காயி­தே­மில்­லத் மக­ளிர் கல்­லூ­ரியை உரு­வாக்­கி­னார்.

« காயி­தே­மில்­லத் ஆண்­கள் கல்­லூ­ரிக்கு இடம் வழங்­கி­னார்.அத்­த­கைய தலை­வர் கலை­ஞ­ரின் வழித்­த­டத்­தில் தான் திரா­விட மாடல் ஆட்சி நடத்­திய மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும் செயல்­பட்­டார்­கள்.

ஹஜ் புனி­தப் பய­ணம் மேற்­கொள்­ளும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்­காக சென்னை விமான நிலை­யம் அரு­கில் நங்­க­நல்­லூ­ரில், ரூ.65 கோடி மதிப்­பீட்­டில் தமிழ்­நாடு ஹஜ் இல்­லம் கட்ட அடிக்­கல் நாட்­டி­னார். 

2024 ஆம் ஆண்டு முதல் தமிழ்­நாடு மாநில ஹஜ் குழு­விற்கு ஆண்டு நிர்­வாக மானி­ய­மாக ரூ.80 இலட்­ச­மாக உயர்த்தி வழங்­கப்­பட்­டது. தமிழ்­நாடு சிறு­பான்­மை­யி­னர் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக் கழ­கத்­தின் மூலம் 31,625 பய­னா­ளி­க­ளுக்கு ரூ.207 கோடி மதிப்­பில் கடன்­கள் வழங்­கப் பட்­டது. 

சிறு­பான்­மை­யின மக்­கள் பயன் பெறு­வ­தற்­காக, பல்­வேறு நலத் திட்­டங்­க­ளுக்கு ரூபாய் 405 கோடி அள­வில் அரசு நிதி தரப்­பட்­டது.

ஒன்­றிய அரசு, சிறு­பான்­மை­யின மாணவ – மாண­வி­ய­ருக்கு வழங்கி வந்த கல்வி உத­வித்­தொ­கையை நிறுத்தி விட்­டது.

 எனவே மாநில அரசு சார்­பில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்­றும் அரசு உதவி பெறும் பள்­ளி­க­ளில் பயி­லும் முஸ்­லிம் மாண­வி­க­ளுக்கு 1000 ரூபாய் கல்வி உத­வித்­தொகை வழங்­கப்­பட்­டது. 

159 கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு சிறு­பான்மை தகு­திச் சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டுள்­ளது. தொன்­மை­யான பள்ளி வாசல்­கள் தர்­காக்­க­ளின் புன­ர­மைத்­தல் பணி­க­ளுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, 10 தர்­காக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. 

பள்ளி வாசல்­கள், தர்­காக்­கள், வக்ஃப் நிறு­வ­னங்­களை புன­ர­மைத்­தல் பணி­க­ளுக்கு இது­வரை 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, 308 வக்ஃப் நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.

அர­சி­யல் ரீதி­யாக அச்­சு­றுத்­தல் வரும் போதெல்­லாம் இசு­லா­மி­யர்­க­ளைக் காக்­கும் காவல் அர­ணாக இருப்­ப­தும் தி.மு.கழ­கம் தான். குடி­யு­ரி­மைச் சட்­டம் மூல­மாக அச்­சு­றுத்­தல் வந்­த­போது அத­னைத் தடுக்­கப் போரா­டி­யது கழ­கம். 

இது எதை­யும் அறி­யா­மல், மறைக்­கும் வகை­யில் சட்­ட­மன்­றத்­தில் பொய்­யைப் பரப்பி வரு­கி­றது த.வெ.க.

இன்­றைய முத­ல­மைச்­சர் விஜய்­யின் யோக்­கி­யதை என்ன? ‘இசு­லா­மி­யர்­களை தீவி­ர­வா­தி­க­ளாக சித்­த­ரிக்­கும்’ படங்­க­ளில் அதி­கம் நடித்­த­வர் அவர் தான். 

விஜய் நடித்த ‘பீட்ஸ்’ படத்­தில் இசு­லா­மி­யர்­க­ளைத் தீவி­ர­வா­தி­க­ளைப் போல சித்­த­ரித்­தார். இசு­லா­மிய தீவி­ர­வா­தக் குழுக்­கள் போல­வும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பு­க­ளைப் போல­வும் காட்­சி­கள் வைக்­கப்­பட்­டது. 

இதை அப்­போதே இசு­லா­மிய அமைப்­பு­கள் எதிர்த்­தன. இன்று த.வெ.க.வில் சேர்ந்து சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக ஆகி இருப்­ப­வ­ரும் அன்று இதை கண்­டித்து வீடியோ வெளி­யிட்­ட­வர் தான். 

குவைத், கத்­தார் போன்ற நாடு­க­ளில் இப்­ப­டத்­துக்­குத் தடை என்­கிற அள­வுக்கு நிலை­மை­கள் போனது.

விஜய் நடித்த ‘துப்­பாக்கி’ படத்­தி­லும் இசு­லா­மி­யர்­கள் தீவி­ர­வா­தி­க­ளாக உரு­வ­கப்­ப­டுத்­தப்­பட்­டார்­கள். குண்டு வைப்­ப­வர்­க­ளாக காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டார்­கள்.

‘ஜன­நா­ய­கன்’ படத்­தி­லும் இசு­லா­மிய வெறுப்­புக் காட்­சி­கள் தான் அதி­க­மாக இருந்­தன. ‘விஜய் இன்­னும் திருந்­தல’ என்று இசு­லா­மிய அமைப்­பு­கள் சமூக வலை­த­ளங்­க­ளில் கடு­மை­யான விமர்­ச­னத்தை வைத்­தார்­கள். 

‘எப்­போது மாறும் உங்­கள் மன­நிலை?’ என்று இயக்­கு­நர் அமீர் கேள்வி எழுப்­பி­னார். ‘விஜய்­யி­டம் இருந்து இசு­லா­மி­யர்­கள் தள்ளி இருக்க வேண்­டும்’ என்று அகில இசு­லா­மிய அமைப்­பி­னர் சொன்­னார்­கள். 

இப்­ப­டிப்­பட்ட விஜய்யை தலை­வ­ராக ஏற்­றுக் கொண்­ட­வர்­க­ளுக்கு தி.மு.க.வைப் பற்­றிப் பேச அரு­கதை இல்லை.

“சிறு­பான்மை மக்­க­ளின் சமூ­கப் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்­கான நலத் திட்­டங்­களை அர­சின் மூல­மாக தொடர்ந்து நிறை­வேற்­றும் அதே காலத்­தில் – இசு­லா­மி­ய­ரின் அர­சி­யல் உரி­மை­க­ளை­யும் பெற்­றுத் தரும் இயக்­க­மாக திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எந்­நா­ளும் இருக்­கும்” என்று திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின் அளித்­துள்ள உறு­தி­மொழி கல்­வெட்­டாக இருக்­கி­றது என்­பதை நினை­வூட்­டு­கி­றோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய