பசுமை இந்தியா
அம்பலமான ஊழல்
நாட்டின் காடுகளைப் பாதுகாக்கவும், வளப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ‘பசுமை இந்தியா இயக்கத்தின்’ (Green India Mission) செயல்பாடுகளில் மிகப்பெரும் குறைபாடுகளும் முறைகேடுகளும் நடந்துள்ளதாகத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிய பாஜக அரசின்வெற்று விளம்பரப் பூச்சுகளை அம்பலப்படுத்தியுள்ளது.
தேசிய காலநிலைமாற்றக் கொள்கைத் திட்டத்தின் கீழ் உள்ள எட்டு முக்கிய திட்டங்களில் ஒன்றான இதில், நிதி ஒதுக்கீடு குறைவு, திட்டங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின்மை மற்றும் பலவீனமான கண்காணிப்பு ஆகியவை காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இலக்குகளை அடைவதில் இமாலயத் தோல்வி அடைந்துள்ளதை சிஏஜி அறிக்கை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது.
வனப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்துவதற் காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 91.87 சதவீதமும், புதிய காடுகளை உருவாக்குவதில் 97.57 சதவீதமும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது 1.4 மில்லியன் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில், வெறும்0.11 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே தரமுயர்த்தப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டிலும் முறைகேடுகள் நடந்துள்ளதுடன், எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முறையான கணக்குகளைப் பராமரிக்கவில்லை என்பதும்தெரியவந்துள்ளது. கம்பா (CAMPA) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் ஏற்பட்ட தொய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களை முடக்கியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, புள்ளிவிவரங்களை வைத்து மோசடி செய்யும் கார்ப்பரேட் சார்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஒன்றியஅரசு குறியாக உள்ளது. எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான வன வளங்களைப்பாதுகாக்கத் தவறியதுடன், நிதி முறைகேடுகளுக்கும் நிர்வாகத் திறமையின்மைக்கும் ஒன்றிய அரசே முழுப்பொறுப்பாகும்.
இந்த மோசடித்தனமான திட்டங்களின் மூலம் சுற்றுச்சூழல் துறையில் கோடிக்கணக்கான ரூபாய் நிதியைப் பாழடித்திருப்பது தேசத்திற்கு இழைக்கப்படும் மன்னிக்க முடியாத துரோகமாகும். ஆவணங்களில் மட்டுமே பசுமையை வளர்த்துவிட்டு, களத்தில் வனங்களை அழிக்கும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுபெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசின் முகமூடி இதன் மூலம்கிழிந்துள்ளது.வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மாறிப்போன இத்தகைய இயக்கங்கள் மூலமாகக் காடுகளைப்பாதுகாக்க முடியாது என்பதை சிஏஜி அறிக்கைதெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. முறையான திட்டமிடல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் காரணமாகவே நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாகப் பின்தங்கிவிட்டன.
மக்களின் வரிப்கணத்தை முறைகேடாகச் செலவழித்துவிட்டு, வெற்றுவிளம்பரங்கள் மூலம் எதார்த்தத்தை மறைக்க முயலும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத, சுற்றுச் சூழல் விரோதப் போக்கை முறியடிக்க குரல்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
உருட்டுக்கட்டையுடன் அன்பான,இரக்கமான,ஆபாசமாக பேசும்நிதியமைச்சர்;
தமிழக சட்டமன்றத் தேர்தலில் த. வெ. க. சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார்.
இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வருகிறார். மரியவில்சனுக்கும், அவரது தம்பிக்கும் சொத்து மற்றும் தொழில் விவகாரத்தில் நீண்ட நாட்களாகப் பிரச்னை இருந்திருக்கிறது.
அதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதுச்சேரிக்கு வந்த மரியவில்சன்,அடியாட்களுடன. தம்பி வீட்டுக்குள் உருட்டுக்கட்டையுடன் நுழைந்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்.

அதையடுத்து அமைச்சர் மரியவில்சனின் தம்பி மனைவி கேர்லின் கிளாட், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதன் விசாரணைக்காக அமைச்சர் மரியவில்சன் நேற்று ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அவர் ஆஜராகவில்லை.
அதில் கடுப்பான நீதிபதி, “பலமுறை அவர்களுக்குச் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல், திரும்பத் திரும்ப அவகாசம் கேட்பது ஏன்?” என்று கேட்டதுடன், ஜூலை 10-ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை 10-ம் தேதிக்குத் தள்ளி வைத்திருந்தார்.
அதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாளை புதுச்சேரியில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் அமைச்சர் மரியவில்சன்.

அமைச்சர் மரியவில்சனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் சமரசத் தீர்வு மையத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அத்துடன் ஜூலை 13-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அமைச்சர் மரியவில்சனுக்கு உத்தரவிடப்பட்டது.
அதையடுத்து நான்கு முறை சமரசத் தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இன்று நீதிபதி லட்சுமிநாராயணன் முன்னிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இருதரப்பிலும் சமரசப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருவதாகவும், அந்தப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் சுமுகத் தீர்வை எட்டிவிடும் என்றும் அமைச்சர் மரியவில்சனின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “சமரசம் செய்துகொள்ள முடியாத பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கைச் சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இப்படியான வழக்குகளைச் சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பலாம் என்ற உத்தரவுகள் இருந்தால், அதை இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள்”என்று அமைச்சர் மரியவில்சன் தரப்புக்கு உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைச்சர் மரிய வில்சனுக்கு நெருக்கடியை ஏற்படு,,த்தியிருக்கிறது.