கொடூர ஆட்சிக்கு
கோவை மட்டுமல்ல சாட்சி!
போதைப் பொருள் வைத்திருப்பது யார் என்று சொல்கிறான் அந்த மாணவன். இதைத் தெரிந்துகொண்ட போதைப் பொருள் கும்பல் அந்த மாணவனையே கொடூரமாக அடித்தே கொல்கிறது.
‘இது மாணவர்களுக்குள் நடந்த கோஷ்டி மோதல்’ என்று சட்டமன்றத்திலேயே மறைக்கிறார் அமைச்சர். இது கொடூரமான ஆட்சி என்பதற்குக் கோவையே சாட்சியாக அமைந்துள்ளது.
போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கப் போவதாகச் சொன்னார் முதலமைச்சர் விஜய். அவர் செல்பி எடுப்பதற்கும் ரீல்ஸ் போடுவதற்கும்தான் அரசு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அழிப்பு நடவடிக்கையை காணொலி மூலமாகப் பார்வையிட்டார். போதைப் பொருளை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்குப் பதக்கங்களை வழங்கினார்.
மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வைக்கப்பட்டார்கள். போதைப் பொருட்களை முழுமையாக ஒழித்து விட்டதைப் போல த.வெ.க. அரசு மார் தட்டிக் கொண்டது.
அந்த நிகழ்ச்சிக்கு ஒரு காவல் துறை அதிகாரி தனது குழந்தையை போலீஸ் உடை அணிந்து அழைத்து வந்திருந்தார். அந்தக் குழந்தையை முதலமைச்சர் விஜய் தூக்கிக் கொஞ்சினார். அதுதான் மீடியாக்களில் பெரிதாக வர வழைக்கப்பட்டது.
நிகழ்ச்சியையே அந்த ரீல்ஸ் எடுக்கத் தான் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் ரியல் காட்சிகள் என்ன?
போதைக் கும்பலில் இருப்பவர்கள் பெயரைச் சொன்ன காரணத்துக்காக உடனிருக்கும் மாணவர்களால் அடித்தே கொல்லப்பட்டுள்ளான் ஒரு மாணவன்.
கோவை - பொள்ளாச்சி சாலை பிரிமியர் மில் அருகே இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் அமுதன், பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால் சரமாரியாகத் தாக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
விடுதியில் நடந்த போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்களை நிர்வாகத்திடம் அமுதன் கூறியதால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மாணவனைக் கடத்திக் கத்தியால் குத்தியும், இரும்பு ராடால் அடித்தும் கொலை செய்துள்ளது அந்தக் கும்பல். போதைப் பொருட்கள் விற்பனை குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் அமுதன் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டதாக அமுதனின் பெற்றோர் சொல்லி இருக்கிறார்கள்.
அமுதனின் தந்தை கென்னடி, அரசுப்பள்ளித் தலைமையாசிரியராக உள்ளார். “சில நாட்களுக்கு முன்பு, விடுதியில் சமையல் பணி செய்யும் பணியாளர்கள் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதை எனது மகனும், அவனுடைய நண்பனும் பார்த்திருக்கிறார்கள்.
அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அதுபற்றி என் மகனை கல்லூரியில் விசாரித்துள்ளனர். போதைப் பொருள் பயன்படுத்திய தொழிலாளர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், என் மகனை விடுதியை விட்டு வெளியேற்றினர்.
கால அவகாசம் கேட்டதற்குத் தரவில்லை. கல்லூரியில் கஞ்சா பயன்படுத்தும் மாணவர்களைப் பற்றி என் மகனிடம் தகவல் கேட்டு எழுதி வாங்கியுள்ளனர்.
அதை அந்த மாணவர்களிடம் அவர்கள் சொன்னதால்தான் கோபத்தில் என் மகனை 20 பேர் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளனர்’’ என்று அமுதனின் தந்தை கென்னடி சொல்கிறார்.
அமுதனின் தாயார் சுமதி, “என் மகன் மருந்து குடித்து விட்டான். தற்கொலை செய்து கொண்டான் என்று தகவல் சொல்லித்தான் எங்களை வரவழைத்தார்கள். இங்கே வந்து பார்த்தபோதுதான்,
என் மகனை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது’’ என்று கூறி கதறியழுதார்.
அமுதனின் உறவினர் பாலகுரு, “போதைப்பொருள் பற்றி அமுதன் தகவல் கொடுத்ததால் ஏற்பட்ட பகையில்தான் அவனைக் கொலை செய்துள்ளனர்’’ என்கிறார்.
போதை மருந்துக் கலாச்சாரம் எந்தளவுக்குப் போயிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.
அவர் பதிலளிக்காமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் சொல்லி இருக்கிறார். ‘கோஷ்டி மோதல் தான் காரணம்’ என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்.
அப்படியானால் கொல்லப்பட்ட மாணவனின் பெற்றோர் பொய் சொல்கிறார்களா?
‘உங்கள் பையன் தற்கொலை செய்துகொண்டான்’ என்று சொல்லித் தான் அந்தப் பெற்றோரை வரவைத்துள்ளது நிர்வாகம். ஆனால் மாணவன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளான்.
இந்தப் பொய்க்கு பின்னால் இருக்கும் பொய்ச்சதிகள் என்ன?
அடுத்த பெரிய பொய்யை அமைச்சரே ஏன் சொல்ல வேண்டும்?
போதை நடமாட்டத்தை மறைத்து, ஒரு கொலையையும் மறைப்பதுதான் விஜய் கொடுக்கும் மாற்றமா?
கோவையில், போதைப்பொருள் விற்பனைக் கும்பலால் கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
. பொறுப் பேற்க மறுக்கும் த.வெ.க. ஆட்சி அந்த கொலையையே மறைப்பது படுமோசமானது.
கல்லூரியில் புழங்கும் போதைப்பொருள் கலாச்சாரத்தைத் தடுக்க முயன்ற மாணவனின் உயிரைக் காப்பாற்றத் தவறியுள்ளார் முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் எந்த அளவிற்குப் பெருகியுள்ளது என்பதற்கு கோவை மாணவனின் கொலைச் சம்பவமே சாட்சி. எந்த முகத்தை வைத்துக் கொண்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கிறார் முதலமைச்சர் விஜய்?
தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.
போதை சக்திகளின் கொலையை தூயசக்தியே மறைக்கும் திருட்டு ஆட்டம்!
இரண்டும் ஒன்றா?
நிலநடுக்கம்-பூகம்பம், இவை இரண்டில், எந்த வார்த்தை அதிக அளவிலான பாதிப்பை குறிக்கிறது?
எந்த வார்த்தையை, எங்கு பயன்படுத்தினால் சரியாக இருக்கும்.
இரு சொற்களும் ஒரே நிகழ்வை குறிக்கிறதா?
இதற்கு ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா ?
நிலநடுக்கம் என்பது, பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, இதனால் சக்தி வெளியேற்றபட்டு, நிலத்தட்டுகள் எனக்கூறப்படும் Plates நகர்வதால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் திடீர் அதிர்வுதான் இந்த வார்த்தையை குறிக்கிறது.
இது, டெக்னோக் எனும் தட்டுகளின் இயக்கம், பாறைகள் உடைவது, நில அதிர்வு அலைகள் உருவாவதை காண்பிக்கிறது. Earthquake என்கிற ஆங்கில சொல்லைதான், பொதுவாக தமிழில் நிலநடுக்கம் என்கிறோம்.
இது, இயற்கையாக நிகழந்தாலும், மனிதர்களால் நிகழ்ந்தாலும் Earthquake-நில நடுக்கம்/நில அதிர்வு என்றே சொல்லப்படுகிறது.ஆங்கிலத்தில் இதற்கு earthquake, Earthquake, Tremor, shaking போன்ற பல வார்த்தைகள் இருக்கின்றன. ரிக்டர் அளவுகோலில், 3 புள்ளி அளவு வந்தாலும், அது நிலநடுக்கமாகத்தான் பார்க்கப்படுகிறது.
இது, 8 புள்ளியை தாண்டினால் பேரழிவு ஏற்படும். ஆனால் அந்த புள்ளியை தாண்டினாலும் அது நிலநடுக்கம் என்றே அறியப்படுகிறது.
பூகம்பம் என்றால் என்ன?
பூகம்பத்திற்கும் நில நடுக்கத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. பூமிக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் திடீரென நகர்வதால் அல்லது உடைவதால் ஏற்படும் ஆற்றல் வெளியேறி, பூமியின் மேற்பரப்பு அதிரும் ஒரு இயற்கை நிகழ்வு, பூகம்பம் என சொல்லப்படுகிறது.
பூமியின் மேலடுக்கு, பல பெரிய பாறைத்தட்டுகளாக இருக்கிறது. இவை ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு நகரும் போது, அழுத்தம் அதிகரிக்கிறது.
அழுத்தம் அதிகரிக்கையில், பாறைகள் திடீரென உடையும் போதும் சேமிக்கப்பட்ட சக்தி, அலைகளாக வெளியேறி நிலத்தை அதிரச்செய்கிறது. ரிக்டர் அளவுகோல் மூலம் இது அளவிடப்படுகிறது.
பூகம்பத்தை பொறுத்தவரை 3க்கும் மேல் ரிக்டர் அளவு கோலில் அதிகமானால், வீடுகள், கட்டிடங்கள், பாலங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
பூமியின் புவித்தட்டுகள், மேற்பரப்பிற்கு கீழ் இருக்கும் எரிமலைக்குழம்புக்கு மேலே நகர்ந்து, அடிக்கடி ஒன்றோடு ஒன்று மோதும். இதனால் உருவாகும் நில அதிர்வு அலைகள், மேற்பரப்பில் எதிரொலிக்கின்றன.மனித நடவடிக்கைகளாலும், தற்செயலான அதிர்வுகளாலும் புவி வெப்ப மண்டலத்தில் உள்ள கிடங்குகளில், குளிர்ந்த நீர் செலுத்தப்படும் போது, இத்தகைய அதிர்வுகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன.
அப்போது, பூமியின் இயல்பான வெப்பத்தால், இந்த நீர் கொதித்து, நீரூற்றாக வெளியேறுகிறது.
அணு ஆயுத சோதனைகள், மிகவும் அழிவுத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இவை, மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் இல்லாத இடத்தில் நடத்தப்பட வேண்டும்.
இவை சக்திவாய்ந்தவை என்பதால், புவித்தட்டுகளில் (Tectonic Plates) தாக்கத்தை ஏற்படுத்தி, சிறிய அளவிலான நிலநடுக்கங்களை உருவாக்கும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம்.
நகர்ப்புற மயமாக்கப்பட்டிருக்கும் இடங்களில் இருக்கும் பல பரிமாணங்கள் இடிந்து விழுவது, நில அதிர்வுகளுக்கு காரணமாகிறது.
உயரமான நிலங்களாக கருதப்பௌட்ம் குன்றுகள், மலைகள் போன்றவை நிலநடுக்கத்தால் சீரழிந்து, பனிச்சரிவுகளை உருவாக்கும். இவை மக்களை அப்படியே புதைக்கும் திறன் கொண்டவை.
மிகவும் வலிமையான நிலநடுக்கங்கள், தங்கள் அதிர்வுகளை கடலுக்கு அடியில் செலுத்தினால், கடல்நீரை பொங்க செய்கின்றன. இதனால், சுனாமி எனும் ராட்சத பேரலை உருவாகிறது.
நிலநடுக்கங்கள், நில அதிர்வுகள் ஆகியவை பூமியின் மேற்பரப்பை அதிரச்செய்யும், அல்லது நகரச்செய்யும் இயற்கையான புவியியல் நிகழ்வுகளாகும். இருப்பினும், இவை இரண்டும் அவற்றின் தீவிரம், அளவு மற்றும் அவை ஏற்படுத்தக்கூடிய சேதம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன.நிலநடுக்கங்கள், நில அதிர்வுகளை விட அதிக மற்றும் பெரிய அளவிலான நில அசைவுகளை ஏற்படுத்துபவை. நில அதிர்வுகள் பொதுவாக, சிறியதாகவும் குறைவான தீவிரத்தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன.
சமீபத்தில் ஜப்பானில் ரிக்டர் அளவு 7.2ல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு, சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜூன் 24ஆம் தேதியன்று, வெனிசுலாவில் 7.5 ரிக்டர் அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தாக்கியது.
இந்த நிலநடுக்கம், 10 கி.மீ ஆழத்தில் நிலத்துக்கு அடியில் ஏற்பட்டது. இதில், கராகாஸ், அரகுவா, கராபோபோ உள்ளிட்ட மாநிலங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது வரை, 5,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு மாதங்களை கடந்தும், உயிரிழந்தவர்களையும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இன்னும் நிறைய பேர் இதில் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மியான்மரில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மாண்டலே மற்றும் சாகைங் பகுதிகளை தாக்கியது.
இதில், 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தாண்டி பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்தன.
வீட்டிற்குள் இருக்கும் போது நிலநடுக்கம் வந்து விட்டால் தரையில் குனிந்து, மேஜை அல்லது கட்டிலுக்கு அடியில் புகுந்துகொள்ள வேண்டும். உங்கள் தலை மற்றும் கழுத்தை கைகளால் மூடிக்கொள்ளுங்கள்.
ஜன்னல்கள், கண்ணாடிகள், வெளிச்சுவர்கள் உள்ளிட்ட எளிதாக விழக்கூடிய பொருட்களிடமிருந்து விலகி நிற்கவும்.
கட்டிடங்கள், மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும்.
வாகனத்தில் பயணம் செய்தால், சாலையில் ஓரமாக பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்திவிடுங்கள்.
மின்தூக்கிகளை பயன்படுத்தாமல் வெளியேற படிக்கட்டுகளை மட்டும் பயன்படுத்துங்கள்.


