தொடரும் விதிமீறல்..?

 








தொடரும் த.வெ.க, டெண்டர் விதிமீறல்.

த.வெ.க அரசின் டெண்டர் விதிமீறல்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், முதல் விஜய் வசமுள்ள துறையில் மேலும் பல டெண்டர்கள் மிகக் குறுகிய காலத்திற்கு வெளியிடப்பட்டு உள்ளது.



பேரூராட்சி இயக்குநரகம் வெளியிட்டு உள்ள வாரச்சந்தை குறித்த டெண்டரை சமர்ப்பிக்க 4 நாட்கள் மட்டுமே கால அவகாசம்  கொடுக்கப்பட்டு உள்ளது.

சமூக நலக் கூட டெண்டருக்கு 5 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இதுவே ஊழலின் ஊற்றுக் கண் ஆகும்.



இது தாங்க இந்த ஆட்சியின் லட்சணம் .

தருமபுரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,


ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு குரல் கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க தான்” என்றார்.

அப்போது திடீரென கரண்ட் போன நிலையில் இதுதான் த.வெ.க ஆட்சியின் லட்சணம் கரண்ட் இப்படி தான் போய் கொண்டிருக்கும் என்றார்.

பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம்; திட்டமிட்ட செயல் - மு.வீரபாண்டியன்

பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும்.

கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து உங்கள் கொள்கைத் தலைவர்கள் நீக்கப்பட்டது என்பதை தற்செயலானதாக சாதாரண ஒரு தவறாக பார்க்க முடியாது;


திட்டமிட்டச் செயலாகவே கருத வேண்டி உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்து உள்ளார்.

முஸ்தபாவின் எண்ணம் ஈடேறாது.

’அமரன்’ திரைப்படத்தை ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போல சித்தரிக்க முயலும் த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.


பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக் கதையைப் படமாக எடுத்தால் அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுப்படுத்துவதாகும்?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, கண்ணீர் வரக் கூடாது. அதே பாகிஸ்தானில் இருந்துதான் விஜய் ஆதரவு 'வார் ரூம்' இயங்குகிறது.


தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய